\
mobile using addiction
mobile using addictionweb

அதீத டிஜிட்டல் பயன்பாடு : கண் பிரச்சனைகளைத் தவிர்க்க 20-20-20 விதி.. மருவத்துவர்கள் கூறுவது என்ன?

டிஜிட்டல் திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பிரச்சினைகளைத் தவிர்க்க இருபது- இருபது-இருபது (20-20-20) விதியைப் பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Published on: 

ஸ்மார்ட்போன் மற்றும் கணினித் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதால் உலர் கண்கள், பார்வை மங்கலாவது மற்றும் தலைவலி போன்ற 'டிஜிட்டல் கண் சோர்வு' பாதிப்புகள் ஏற்படுவதாகக் கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கணினியைத் நீண்ட நேரம் இடைவிடாமல் பார்க்கும்போது இயல்பாகக் கண் சிமிட்டும் எண்ணிக்கை குறைவதே இதற்குக் காரணம் என்கின்றனர். இதனைத் தவிர்க்க இருபது-இருபது- இருபது விதியைப் பின்பற்றுமாறு கண்சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கோப்புபடம்
கோப்புபடம்AI

அதன்படி, ஒவ்வொரு 20 நிமிடத் திரை பயன்பாட்டுக்குப் பிறகும், 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும். மேலும் திரையைச் சற்று கீழே தாழ்த்தி வைப்பது, சீரான இடைவெளியில் கண் சிமிட்டுவது மற்றும் தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனையுடன் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது பலன் தரும். குறிப்பாகச் சிறுவர்களிடையே போதிய வெளிச்சமின்மை மற்றும் தொடர் திரை பயன்பாட்டால் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிப்பதாகச் சுட்டிக்காட்டும் நிபுணர்கள், குழந்தைகளைத் தினமும் வெளியில் விளையாட ஊக்குவிக்க அறிவுறுத்துகின்றனர். பார்வைக் கோளாறுகள் தொடர்ந்தால் உடனடியாகக் கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.

mobile using addiction
மனித வரலாற்றை உலுக்கிய பிளேக்.. நோயின் வரலாறும் பேரழிவும்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com