வானிலை ஆய்வு மையம்முகநூல்
தமிழ்நாடு
அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும். அக்டோபர் 15-18 தேதிகளில் தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் கனமழை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதை தொடர்ந்து, தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 முதல் 6 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
RAINANI
குறிப்பாக அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா உள்ளிட்ட சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவு மோசம்: 3 டிகிரி அதிகரித்த வெப்பநிலை | குளிர் காலத்தில் காத்திருக்கும் ஆபத்து!

