\
humanoid robot
humanoid robot reuters

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ! ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

16 வயது சிறுமியிடம் ரோபோ பாலியல் அத்துமீறல் நடத்திய சம்பவம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் ரோபோ மூலம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரோபோ மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செய்தியாளர் - M.மீரா

ஜெர்மனியின் கொலோன் நகரில் இருக்கும் துரித உணவகம் ஒன்றின் வெளியே 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, சுமார் 1.2 மீட்டர் உயரமுள்ள சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான ரோபோ ஒன்று அவருக்குப் பின்னால் சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ரோபோ
ரோபோ

இந்தச் சம்பவத்தின்போது, ரோபோவின் 16 வயது உரிமையாளரும் அவருடன் இருந்த 19 வயது இளைஞரும் சம்பவத்தைத் தங்களது செல்போன்களில் படம்பிடித்துள்ளனர். மேலும், இதனைச் சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் ஒரு காரின் பின்பகுதியில் ரோபோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரோபோ மற்றும் சந்தேக நபர்களுக்குச் சொந்தமான இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் சைபர் சட்டங்கள் குறித்து உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிகளை இலக்காகக் கொண்டு அதிநவீன தொழில்நுட்பங்களும் ரோபோக்களும் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்கள் மற்றும் இணைய வழிக் குற்றங்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் எச்சரித்துள்ளனர்.

humanoid robot
2100-ல் உலகமே அழியும்... அச்சுறுத்தும் 17 பேராபத்துகள்! விஞ்ஞானிகள் விடுத்த பகீர் எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com