\
Houthis’ Riyadh Airport Attack: 12 Killed, 300 Injured
விமான நிலையத் தாக்குதல்Reuters

ஏர்போர்ட் மீது ஏவுகணைத் தாக்குதல்.. தொடரும் ஹவுதியின் 'Attack' பதிலடிக்கு தயாராகும் சவுதி?

கிங் காலித் விமான நிலையம் மீது ஒரே வாரத்தில் ஹவுதி நடத்திய 3-வது மற்றும் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது.
Published on: 

ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிப் படை நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இது, கிங் காலித் விமான நிலையம் மீது ஒரே வாரத்தில் ஹவுதி நடத்திய 3-வது மற்றும் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது.

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவுப் பெற்ற ஹவுதி அமைப்புக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. சர்வதேச கடல்வழிப் பாதையான செங்கடல் பகுதியை ஹவுதி கைப்பற்றியிருக்கும் நிலையில், அதனை மீட்கும் முயற்சியில் ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து சவுதி அரேபியா படைகளும் ஹவுதி மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேசமயம், ஹவுதிக்கள் சவுதி அரேபியாவின் பல முக்கிய விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஹவுதி
ஹவுதிReuters

அதன் ஒருபகுதியாக, சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறித்து வைத்து ஹவுதி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. வாரத்தின் தொடக்கத்தில், நடத்திய 2 தாக்குதலில் சவுதி விமானி உட்பட 4 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தச்சூழலில் தான், நேற்று இதே விமான நிலையம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில், 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில், 4 பேர் சவுதி நாட்டவர்கள் எனவும் மற்றவர்கள் அமெரிக்கா, சிரியா, ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Houthis’ Riyadh Airport Attack: 12 Killed, 300 Injured
பனாமாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்.. தொடர்ந்து விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை!

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ரியாத்துக்கான விமானச் சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) மற்றும் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பல சேவைகளை ரத்து செய்திருக்கின்றன. இதற்கிடையே, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுப் படைகள் ஹவுதி அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சவுதி அரசும் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், சவுதி அரேபியாவின் வான்வெளியை ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் பகுதியாகக் கருத வேண்டும் என்று ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது.

விமான நிலையத் தாக்குதல்
விமான நிலையத் தாக்குதல்Reuters

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது நல்லதல்ல எனவும் நான் மகிழ்ச்சியாக இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஹவுதிக்களுக்கு எதிராக சவுதிப் படைகளுடன் இணைந்து போரிடுவது குறித்துப் பரீசிலிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

Houthis’ Riyadh Airport Attack: 12 Killed, 300 Injured
மீண்டும் மீண்டுமா? நேபாளத்தைத் துரத்தும் பேரிடர்! நிலச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com