\
sivakarthikeyan
sivakarthikeyansivakarthikeyan instagram

சூர்யா-க்கு SK பதிலடியா? வன்மத்தை இப்படி கக்குறாங்களே? நடந்தது என்ன?

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

கார்த்தி நடித்த சர்தார் 2, சூரி நடித்த மண்டாடி ஆகியவை ஒரே நேரத்தில் வெளியான நிலையில், மண்டாடிக்கு அதிக பாசிட்டிவ் விமர்சனங்கள், சர்தார் 2க்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இதே சமயம், சிவகார்த்திகேயன் இரு படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தாலும், சர்தார் 2க்கு ஒரு வரி, மண்டாடிக்கு நீளமான பதிவு எழுதியது, சூர்யாவுக்கு மறைமுக பதிலடி என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படமும், சூரி நடிப்பில் உருவாகியுள்ள மண்டாடி திரைப்படமும், தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஸ்பை ஆக்ஷன் ஜானரில் உருவான சர்தார் 2 படத்துக்கும், ஸ்போர்ட்ஸ் டிராமா பாணியில் உருவான மண்டாடி படத்துக்கும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கிடையே, இந்த இரு திரைப்படங்களுக்கான விமர்சனங்கள் வெளியாகி, ரிசல்ட் என்ன என்று தெரிந்துவிட்டது.

அதன்படி, சூரியின் மண்டாடி திரைப்படத்திற்கு அதிகப்படியான பாசிட்டிவ் விமர்சனங்களும், சர்தார் 2 திரைப்படத்திற்கு, கலவையான விமர்சனங்களும் வந்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், சார்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு படங்களுக்கும், அடுத்தடுத்து வாழ்த்து கூறி, நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், சர்தார் 2-க்கு ஒரே ஒரு வரியில் வாழ்த்துகள் மட்டும் கூறிய சிவகார்த்திகேயன், மண்டாடி படத்துக்கு பெரிய வாழ்த்து செய்தியே வெளியிட்டிருக்கிறார். மேலும், சிறந்த படைப்புகள் எப்போதும் வெற்றி பெறும் என்ற வாக்கியத்தையும் அவர் கூறியிருக்கிறார்.

surya
suryaInstagram

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இது நடிகர் சூர்யாவுக்கு வழங்கிய மறைமுகமான பதிலடி என்று கூறியுள்ளனர். அதாவது, 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும், கார்த்தியின் சர்தார் படமும் வெளியாகியிருந்தது. அப்போது, பிரின்ஸ் படத்திற்கு வெறுமனே ஒரே வரியில் வாழ்த்து மட்டும் கூறி, பதிவு வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, கார்த்தியின் சர்தார் படத்திற்கு பக்கம் பக்கமாக பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.

மேலும், நல்ல படைப்பு எப்போதும் வெற்றி பெறும் என்ற வாக்கியத்தையும் கூறியிருந்தார். தற்போது கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் வேளையில், நல்ல படைப்பு வெற்றி பெறும் என்று சூர்யா கூறிய அதே வாக்கியத்தை மீண்டும் பதிவிட்டு, சிவகார்த்திகேயன் மறைமுகமாக பதிலடி கொடுத்திருக்கிறார் என்று, நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே என்ன தான் பிரச்சனை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

sivakarthikeyan
’அஜித் பாணியை கையிலெடுத்த சூர்யா..’ புதிய படத்திற்கு ‘SCENE' என பெயர் அறிவிப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com