கம்பீர் தலைமையில் 30 மோசமான RECORDS | படுகுழியில் விழுந்த இந்தியா!

கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு முன்பிருந்த தலைமை பயிற்சியாளர்களை விட, கம்பீர் தலைமையில் இந்திய அணி மோசமான அணியாக உருமாறி வருகிறது.. கம்பீருக்கு கீழ் இந்தியா படைத்த மோசமான சாதனைகளை இங்கே பார்க்கலாம்..
கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்web

1. 27 வருடங்கள்

27 வருடங்களுக்கு பிறகு இலங்கை உடனான இருதரப்பு ஒருநாள் தொடரில் படுதோல்வியை சந்தித்தது இந்திய அணி.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
’இந்தியாவின் பொக்கிஷம் ஹர்திக்..’ ஏன் தலைசிறந்தவர்? 7 சம்பவங்கள்!

2. 36 வருடங்கள்

நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்து வெற்றி

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 36 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி.. அதிலும் இந்தியா ஒயிட்வாஷ் செய்யப்பட்டது மோசமான சாதனையாக பதிவுசெய்யப்பட்டது.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
’1000 பவுண்டரி, 55 சராசரி, யாரும் செய்யாத உலகசாதனை..’ டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் 14 சாதனைகள்!

3. 19 வருடங்கள்

19 வருடங்களுக்கு பிறகு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
இனியும் பாஸ்பால் அவசியமா..? 16வது வருடமாக ENG தோல்வி.. ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

4. 50 ரன்கள்

இந்தியா 46 ரன்னுக்கு ஆல்அவுட்
இந்தியா 46 ரன்னுக்கு ஆல்அவுட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்தமண்ணில் ஒரு இன்னிங்ஸில் 50 ரன்னுக்கு குறைவாக எடுத்து சுருண்டது இந்திய அணி. நியூசிலாந்துக்கு எதிராக 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
38 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்திடம் தொடரை இழந்த இந்தியா.. தோல்விக்கு முக்கியமான 5 காரணங்கள்!

5. 47 வருடங்கள்

india test team
india test team

47 வருடங்களுக்கு பிறகு சொந்தமண்ணில் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளை இழந்தது இந்தியா.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
”மறந்துவிடுவீர்கள்” - தோல்வி குறித்து கேள்வி.. காட்டமாக பேசிய காம்பீர்.. காரசாரமாக மாறிய ப்ரஸ் மீட்!

6. 10 வருடங்கள்

10 வருடங்களுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் டிராபியை இழந்தது இந்தியா.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
இந்திய அணி தோல்வி.. காரணம் சொன்ன கவுதம் காம்பீர்.. உண்மையை விமர்சிக்கும் ஜாம்பவான்கள்!

7. WTC ஃபைனலுக்கு தகுதிபெறாத இந்தியா..

இந்திய டெஸ்ட் அணி
இந்திய டெஸ்ட் அணி

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறாமல் போனது. கடைசி இரண்டு டெஸ்ட் தொடருக்கு முன்புவரை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
ஒரே போட்டி.. 3 ஜாம்பவான்களின் சாதனை காலி.. விராட் கோலியின் முரட்டு சம்பவம்!

8. நம்பர் 1 இடத்தை இழந்த இந்தியா

அடுத்தடுத்த தொடர் டெஸ்ட் தோல்விகளால் WTC புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானுக்கு கீழ் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது இந்தியா. மேலும் ஐசிசி தரவரிசையில் 4வது டெஸ்ட் அணியாக பரிதாப நிலையில் உள்ளது. இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இனி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவே வாய்ப்பில்லை என்ற சூழலை கம்பீர் உருவாக்கியுள்ளார்.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
OG கம்பேக்| ஒரே போட்டி.. 3 ஜாம்பவான்களின் சாதனைகளை நொறுக்கிய ஸ்மித்!

9. 5 சதங்கள்

ஒரு டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் அடித்தபோதும் தோற்ற ஒரே அணியாக இந்தியா படுமோசமான சாதனை படைத்தது.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
உலகக்கோப்பை ஃபைனல்| ஒரே போட்டி.. 5 இந்திய வீராங்கனைகள்.. 5 பிரமாண்ட சாதனைகள்!

10. 25 வருடங்கள்

சொந்த மண்ணில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது இந்தியா.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
அடேங்கப்பா.. 232 ஆண்டுகால சாதனை.. முறியடித்து உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த பாகி.!

11. 147 ரன்கள்

india worst loses
india worst loses

சொந்தமண்ணில் 147 ரன்களை சேஸ்செய்ய முடியாமல் டெஸ்ட் போட்டியை பரிதாபமாக இழந்தது இந்திய அணி.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
பெங்களூரு | சின்னசாமி மைதானத்தில் மீண்டும் போட்டிகள்.. அரசு அனுமதி.. ரசிகர்கள் உற்சாகம்!

12. 408 ரன்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை பதிசெய்தது இந்திய அணி.. 342 ரன்கள் வித்தியாசத்தில் முந்தைய தோல்வி இருந்த நிலையில், முதல்முறையாக 400 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
மீண்டும் மீண்டும் ICC இடமிருந்து வந்த செய்தி.. வங்கதேசம் முடிவை மாற்றுமா..?

13. 669 ரன்கள்

இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இந்திய அணி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மோசமான சாதனையை படைத்தது இந்தியா..

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
ஜன.21 கடைசித் தேதி.. இந்தியாவில் விளையாடுமா? வங்கதேசத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஐசிசி!

14. முதல்முறையாக தோல்வி

இந்திய அணி
இந்திய அணி

சொந்தமண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முதல்முறையாக ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
’இந்த 3 விசயங்களை செய்தால் தான்..’ வேலையை காட்டிய ICC.. குழம்பி தவிக்கும் வங்கதேசம்!

15. 30 வருடங்கள்

30 வருடங்களில் சொந்த மண்ணில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் கூட சதமடிக்கவில்லை என்ற மோசமான சாதனை படைத்தது இந்தியா..

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
‘அமாவாச நீதான் பேசுறியா’.. திடீரென தோனியை பாராட்டி பேசும் கவுதம் கம்பீர் - சமீபத்திய 5 புகழுரைகள்!

16. மற்ற மோசமான சாதனைகள்

* 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது.

* 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்தடுத்து சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடரை இழந்தது.

* 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வான்கடேவில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.

* முதல்முறையாக அடுத்தடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா சொந்தமண்ணில் ஒயிட்வாஷ் ஆனது.

* முதல்முறையாக இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா அணி 300 ரன்களுக்கு மேல் சேஸ்செய்தது.

* இந்தியாவில் நியூசிலாந்து அணி மிகப்பெரிய ரன் சேஸிங்கை பதிவு செய்தது (285)

* இந்தியாவில் ஒரு வெளிநாட்டு அணி அதிகபட்ச இலக்கை (549) நிர்ணயிக்க விட்டுக்கொடுத்தது.

* 92 வருட டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது முறையாக 350+ ரன்களை பாதுகாக்கத் தவறியது (லீட்ஸ்) இந்தியா.

* 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.

* முதல்முறையாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 30 விக்கெட்டுகளை இழந்தது.

* 45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு ODI போட்டியில் கூட இந்தியா வெல்லவில்லை.

*17 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, அடிலெய்டில் நடந்த ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது.

* 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈடன் கார்டனில் நடந்த சர்வதேச போட்டியில் தோல்வியடைந்தது, தொடர்ச்சியாக 9 வெற்றிகளுக்குப் பிறகு இது நிகழ்ந்தது.

* சொந்தமண்ணில் மிகக்குறைவாக இந்தியா 124 ரன்கள் இலக்கை துரத்தத் தவறியது. இது சொந்த மண்ணில் அவர்களின் மிகக் குறைந்த தோல்வியடைந்த ரன் சேஸிங்காக பதிவுசெய்யப்பட்டது.

* முதல் முறையாக, நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் டிசைடர் போட்டியில் தோற்றது இந்தியா.

கம்பீர் தலைமையில் இந்தியா படைத்த 30 மோசமான சாதனைகள்
கம்பீர் உடன் விரிசல்..? ரோகித் இடையே நடந்த விவாதம்.. வெற்றிக் கொண்டாட்டத்தை மறுத்த கோலி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com