5 indian womens cricketers 5 big records
5 indian womens cricketers 5 big recordspt

உலகக்கோப்பை ஃபைனல்| ஒரே போட்டி.. 5 இந்திய வீராங்கனைகள்.. 5 பிரமாண்ட சாதனைகள்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 5 பிரமாண்ட சாதனைகளை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா, தீப்தி சர்மா முதலிய ஸ்டார் வீராங்கனைகள் தங்களுடைய சாதனை பட்டியலை நீட்டித்துள்ளனர்..

1. ஸ்மிருதி மந்தனா

மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா..

ஸ்மிரிதி மந்தனா 12வது ஒருநாள் சதம் விளாசல்
ஸ்மிரிதி மந்தனா 12வது ஒருநாள் சதம் விளாசல்cricinfo

இதற்குமுன்பு 2017 உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் 409 ரன்கள் அடித்திருந்த நிலையில், அதனை கடந்து (410*ரன்கள்) சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா

2. தீப்தி சர்மா

தீப்தி சர்மா
தீப்தி சர்மா

மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் 200 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பிரமாண்ட சாதனை படைத்தார் இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா.

3. ஹர்மன்ப்ரீத் கவுர்

மகளிர் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.

ஹர்மன்ப்ரீத்
ஹர்மன்ப்ரீத்

4 நாக் அவுட் இன்னிங்ஸ்களில் விளையாடி 331 ரன்கள் குவித்திருக்கும் ஹர்மன்ப்ரீத், ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிண்டா கிளார்க்கின் 330 ரன்கள் (6 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்தார்.

4. ஷஃபாலி வெர்மா

ஷஃபாலி வெர்மா
ஷஃபாலி வெர்மா

ஆடவர்-மகளிர் இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரைசதமடித்த இளம்வயது வீரர் (21 வயது 278 நாட்கள்) என்ற சாதனையை படைத்தார் இந்தியாவின் தொடக்க வீரர் ஷஃபாலி வெர்மா..

5. ரிச்சா கோஷ்

மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீராங்கனையாக முதலிடம் பிடித்தார் ரிச்சா கோஸ்..

ரிச்சா கோஷ்
ரிச்சா கோஷ்

நடப்பு சீசனில் 12 சிக்சர்களை பறக்கவிட்ட ரிச்சா கோஸ், முதலிடத்தை டியன்ரா டோட்டின், லிசெல்லி உடன் பகிர்ந்துகொண்டுள்ளார்..

6. இறுதிப்போட்டியில் 100 ரன் பார்ட்னர்ஷிப்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஷஃபாலி மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஜோடி, இந்த சாதனையை படைத்த 2வது ஜோடியாக சாதனை படைத்தது.

ஸ்மிரிதி மந்தனா - ஷஃபாலி வர்மா
ஸ்மிரிதி மந்தனா - ஷஃபாலி வர்மா

இதற்கு முன்பு கடந்த 2022 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி மற்றும் ஹெய்ன்ஸ் இருவரும் இறுதிப்போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com