ஒரே போட்டி.. 3 ஜாம்பவான்களின் சாதனை காலி.. விராட் கோலியின் முரட்டு சம்பவம்!
நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் சதமடித்த விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றிய நியூசிலாந்து அணி முதல்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது.
இந்தியா தொடரை இழந்திருந்தாலும் தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்களும், கடைசி மற்றும் 3வது போட்டியில் 124 ரன்களும் குவித்து மிரட்டினார். இதில் கடைசி போட்டியில் சதமடித்த கிங் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 3 முக்கிய சாதனையை முறியடித்தார். அதை இங்கே பார்க்கலாம்..
1. சச்சின் சாதனை முறியடிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் சதமடித்த விராட் கோலி, வெவ்வேறான அதிக மைதானங்களில் சதமடித்த வீரராக சாதனை படைத்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 34 மைதானங்களில் சதமடித்திருந்த நிலையில், 35வது சதத்தை அடித்து விராட் கோலி வரலாற்றில் தடம்பதித்தார்.
2.ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3ஆம் தரவரிசை வீரராக அதிக ரன்கள் அடித்திருந்த ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. ரிக்கி பாண்டிங் நம்பர் 3 வீரராக 12662 ரன்கள் அடித்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் 124 ரன்கள் அடித்த கோலி 12676 ரன்களுடன் பின்னுக்கு தள்ளினார்.
3. ஜாக் காலிஸ் சாதனை முறியடிப்பு
அனைத்து கிரிக்கெட் வடிவங்களில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரராக மாறி விராட் கோலி சாதனை படைத்தார். முதலிடத்தில் 76 இன்னிங்ஸ்களில் 9 சதமடித்த ஜாக் காலிஸ் நீடித்த நிலையில், 73 இன்னிங்ஸ்களில் 10 சதங்களை அடித்து கோலி சாதனை படைத்தார்.

