ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்
ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்pt

OG கம்பேக்| ஒரே போட்டி.. 3 ஜாம்பவான்களின் சாதனைகளை நொறுக்கிய ஸ்மித்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 37வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்..
Published on
Summary

ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 37வது டெஸ்ட் சதத்தை அடித்து டான் பிராட்மேன், ராகுல் டிராவிட், ஜாக் ஹோப்ஸ் சாதனைகளை முறியடித்தார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 160 ரன்கள் குவித்து அசத்திய நிலையில், ஆஸ்திரேலியா 518 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. முதல் 3 போட்டிகளில் டாமினேட் செய்த ஆஸ்திரேலியா அணி 3-0 என ஆஷஸ் தொடரை கைப்பற்றி அசத்தியது..

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்
'வங்கதேசம் பாகிஸ்தான் அல்ல.. முஸ்தபிசூர் இந்து வீரராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?'- சசி தரூர்

இந்த சூழலில் மெல்போர்னில் நடைபெற்ற 4வது போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்தமண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி சாதனை படைத்தது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது..

ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்
'ஆப்கானிஸ்தான் வீரர்களையும் IPL-ல் தடை செய்வார்கள்..' கொளுத்தி போட்ட பாகிஸ்தான் வீரர்!

சதமடித்த ரூட், ஹெட், ஸ்மித்..

சிட்னியில் தொடங்கிய 5வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 384 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். ஜோ ரூட் 160 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்..

ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்
'என்னடா பா வயசு உனக்கு..' 1 பவுண்டரி.. 10 சிக்சர்கள்.. 283 ஸ்ட்ரைக் ரேட்! சூர்யவன்ஷி மிரட்டல்!
ஜோ ரூட்
ஜோ ரூட்

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்துள்ளது. தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் நடப்பு ஆஷஸ் தொடரில் 3வது சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்
”அடிமைக்காலம் முடிந்துவிட்டது..” இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் வேண்டாம்.. வங்கதேசம் விலக முடிவு!
ஸ்டீவ்
ஸ்டீவ்

டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் அடிக்க, தொடர்ந்து வந்த ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 37வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். ஆட்டநேர முடிவில் 129 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் நீடிக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்..

ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்
பன்றதெல்லாம் சம்பவம் தான்.. ஆஷஸ், BGT இரண்டிலும் முதல் வீரராக சாதனை.. டிராவிஸ் ஹெட் மிரட்டல்!

3 ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த ஸ்மித்!

டான் பிராட்மேன்
டான் பிராட்மேன்

டான் பிராட்மேன் - இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித். டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக 5028 ரன்களை குவித்திருந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 5085* ரன்கள் அடித்து முன்னிலை பெற்றுள்ளார். இதன்மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக சர்வதேச ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற டான் பிராட்மேன் சாதனையையும் உடைத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்..

sachin - rahul dravid
sachin - rahul dravid
ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்
கோமாவிலிருந்து கண்விழித்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் மார்ட்டின்.. உறுதிசெய்த கில்கிறிஸ்ட்!

ராகுல் டிராவிட் - அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 36 சதங்களுடன் இருந்த ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். முதல் 5 இடத்தில் சச்சின் டெண்டுல்கர் (51 சதங்கள்), ஜாக் காலிஸ் (45), ரிக்கி பாண்டிங் மற்றும் ஜோ ரூட் (41), குமார் சங்ககரா (38) என முன்னிலை பெற்றுள்ளனர்.

ஜாக் ஹோப்ஸ்
ஜாக் ஹோப்ஸ்

ஜாக் ஹொப்ஸ் - ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல் இங்கிலாந்து ஜாம்பவான் ஜாக் ஹோப்ஸை பின்னுக்கு தள்ளி டான் பிராட்மேனுக்கு பிறகு 2வது இடத்தை பிடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். முதல் 3 இடங்களில் டான் பிராட்மேன் 19 சதங்கள், ஸ்டீவ் ஸ்மித் 13 சதங்கள், ஜாக் ஹோப்ஸ் 12 சதங்களுடன் நிலைக்கின்றனர்.

அதேபோல ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற ஜாக் ஹோப்ஸ் சாதனையையும் முறியடித்துள்ளார் ஸ்மித். முதல் 3 இடங்களில் டான் பிராட்மேன் 5028 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 3682 ரன்கள், ஜாக் ஹோப்ஸ் 3636 ரன்களுடன் நீடிக்கின்றனர்.

ஸ்டீவ் ஸ்மித் - பிராட்மேன் - ஜாக் ஹோப்ஸ் - டிராவிட்
T20 WC| இந்தியாவிலிருந்து விலக வங்கதேசம் முடிவு.. ’அதற்கு வாய்ப்பே இல்லை..’ - பிசிசிஐ தரப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com