எங்கே கோட்டை விட்டது பெங்களூரு? 2015-ல் தொடர் தோல்வியை மாற்றி மும்பை கோப்பையை வென்றது எப்படி?

2015-ஆம் ஆண்டு ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய விதத்தையும், தற்போது பெங்களூரு அணி விளையாடிய விதத்தையும் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி
மும்பை இந்தியன்ஸ், விராட் கோலிpt web

வெளியேறிய பெங்களூரு அணி

2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் க்ளைமேக்ஸ் கட்டத்தில் இருக்கின்றது. இன்னும் இரண்டு போட்டிகளில் கோப்பையை எந்த அணி முத்தமிடப்போகிறது என்பது தெரிந்துவிடும். ஏகப்பட்ட திருப்பங்களுக்கு பின்னரே ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று குவாலிஃபயர் 2 போட்டியில் மோத இருக்கின்றன.

RR vs RCB
RR vs RCBCricinfo

பெங்களூரு அணி லீக் சுற்றுடன் நடையை கட்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்று டஃப் கொடுத்தது பெங்களூரு. தனது கடைசி லீக் போட்டியில் சென்னையை எதிர்கொண்டாலும், சென்னை அணி பெங்களூருவை வீழ்த்தி ப்ளே ஆஃப்க்குள் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரு சென்னையை வீழ்த்தி தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குள் சென்றது. இதே வேகத்தில் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி குவாலிபயர் 2 சுற்றுக்கும் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சிகரமாக ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

இந்த சூழலில்தான் ரசிகர்கள் 2015 ஆம் ஆண்டு ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய விதத்தையும், தற்போது பெங்களூரு அணி விளையாடிய விதத்தையும் ஒப்பிட்டு வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி
“எனக்குள் இருக்கும் பயம்தான் என் வெற்றிக்கு முதல் காரணம்; உண்மையில் நான் அதிகம் பயப்படுவேன்!” - தோனி

மும்பை vs பெங்களூரு

ப்ளே ஆஃப், எலிமினேட்டர், பைனல் என்றால் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். ஆனால் ப்ளே ஆஃப் என்றாலே ஆர்சிபி வீரர்கள் தடுமாறுகின்றனர். இதுவரை 9 முறை ப்ளே ஆஃப் சென்றுள்ள பெங்களூரு அணி 14 ப்ளே ஆஃப் போட்டிகளில் 5ல் மட்டுமே வென்று 9ல் தோல்வி அடைந்துள்ளது. மூன்று முறை மட்டுமே பைனல் சென்றுள்ளது.

ஆனால் மும்பை அணியோ 19 ப்ளே ஆஃப் போட்டிகளில் 13 போட்டிகளில் வென்றுள்ளது. 4 எலிமினேட்டரில் 4-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 முறை பைனல் சென்ற நிலையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. இது சென்னை பைனலுக்கு சென்று கோப்பையை வென்ற சராசரியை விட அதிகம். இந்த ஆட்டம்தான் பெங்களூருவிடம் மிஸ் ஆவது.

சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடும் விராட் கோலி, ப்ளே ஆஃப் என்றால் தடுமாறுவதும் மிக முக்கியமான ஒன்று. 14 ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 308 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 25 ஆக மட்டுமே உள்ளது. ஸ்ட்ரைக் ரேட்டும் 120 ஆக இருக்கும் நிலையில் இரு அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி
”இதற்கு மேல் எதற்காக மேக்ஸ்வெல்? அவருக்கு எந்த கவலையும் இல்லை!” - கடுமையாக சாடிய மனோஜ் திவாரி

மும்பை என்றால் 2015

மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் மறக்க முடியாத சீசன் என்றால் அது 2015 தான். முதல் 6 போட்டிகளில், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வென்றிருந்தது மும்பை. எஞ்சிய 5 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. இத்தகைய சூழலில் அடுத்து தான் விளையாடப்போகும் 8 போட்டிகளில் 7 வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் அடுத்து தான் விளையாடிய 8 லீக் போட்டிகளில் பெங்களூரு உடனான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றது. ப்ளே ஆஃப் சுற்றில் சென்னையை எதிர்கொண்டு வென்று பைனலுக்கும் சென்றது. மீண்டும் பைனலில் சென்னையை எதிர்கொண்டு வெற்றி பெற்று கோப்பையையும் தட்டிச் சென்றது. மும்பைக்கு கூடி வந்த ஒரு விஷயம் தற்போது நடந்துவரும் சீசனில் பெங்களூருவுக்கு ஏன் கூடிவரவில்லை.

2015-ஆம் ஆண்டு மும்பையில் ஹர்திக் பாண்டியா என்ற ஒரு இளைஞர் அறிமுகமாகி இருந்தார். பெங்களூரு உடனான போட்டியின் போதுதான் அறிமுகம். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸ் அடித்து அசத்துகிறார். அந்த போட்டியில் 6 பந்துகளில் 16 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார் ஹர்திக்.

அடுத்து டெல்லி உடனான போட்டியில் முதல் பந்திலேயே அவுட். பின் பெஞ்சில் உட்காரவைக்கப்படுகிறார். பின் சென்னையுடனான 43 ஆவது லீக் போட்டியில் மீண்டும் களமிறக்கப்படுகிறார். இக்கட்டான சூழலில் 8 பந்துகளில் 3 சிக்சர்களை அடித்து 21 ரன்களை எடுத்து ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் கேட்சையும் பிடித்து அசத்தி இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி
’இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..!’ CSK-ஐ வீழ்த்திய பிறகு விடியவிடிய பார்ட்டி நடத்திய RCB வீரர்கள்..!

பந்துவீச்சாளர்களால் வென்ற மும்பை

கொல்கத்தா உடனான 51 ஆவது லீக் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேற, பொல்லார்ட் உடன் நிலையாக நின்று ஆடி 31 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார் ஹர்திக். அந்த போட்டியில் மும்பை அணி 5 வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. ரோஹித், பொல்லார்டு, சிம்மன்ஸ் போன்றோர் நிலையாக ஆடினர் என்றால், அம்பத்தி ராயுடு, ஹர்திக் பாண்டியா போன்றோரும் அவ்வப்போது அணிக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.

அதேபோல் மும்பை அணிக்கு 3 பந்துவீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டிக்குப் போட்டி எதிரணிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஹர்பஜன் சிங், மலிங்கா, மிட்செல் மெக்னெலகன். மலிங்கா 15 போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஹர்பஜன் சிங், மிட்செல் மெக்லெனகன் 18 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி
“சிலமுறை இதை சொல்லவேண்டியிருக்கிறது..”! மீண்டும் RCB அணியை கலாய்த்து பதிவிட்ட அம்பத்தி ராயுடு!

பெங்களூரு அணிக்கு பந்துவீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததும் ஒரு காரணம். பேட்டிங்கிலும் கோலி, தினேஷ் காத்திக் தவிர தொடரின் தொடக்கம் முதலே பிற வீரர்கள் தங்களுக்கு உரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  - சென்னை சூப்பர் கிங்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ்முகநூல்

இத்தகைய சூழலில்தான் தொடர்ச்சியாக வென்று வந்த பெங்களூரு ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்தது. இன்னும் 20 முதல் 30 ரன்கள் வரை எடுத்திருந்தார்கள் பெங்களூருவின் வெற்றி எளிமையாகி இருக்கும். எப்படி இருந்தாலும் வெளியில் சென்றாகி விட்டது., அடுத்த வருடம் இன்னும் வலிமையாய் பெங்களூரு மீண்டு வரும் என நம்புவோம்.

மும்பை இந்தியன்ஸ், விராட் கோலி
‘எப்படி சிக்கி இருக்கேன் பாத்தியா..’ - திணறும் RCB ரசிகர்கள்... மீம்ஸ்களால் நிறைந்திருக்கும் இணையம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com