‘எப்படி சிக்கி இருக்கேன் பாத்தியா..’ - திணறும் RCB ரசிகர்கள்... மீம்ஸ்களால் நிறைந்திருக்கும் இணையம்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், ராஜஸ்தான் அணி, பெங்களூருவை வீழ்த்தி, குவாலிஃபயர் போட்டிக்கு முன்னேறியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்புதிய தலைமுறை

RCB vs RR

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் 4 ஆவது இடத்தில் இருந்த ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு நேற்று எலிமினேட்டர் சுற்றில் மோதின. டாஸ் வென்று ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்தது பெங்களூரு.

தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அந்த அணிக்கு சீரான இடைவேளையில் விக்கெட்டுகளும் பறிபோயின. இதனால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பட்டிதர் 34, கோலி 33, லோம்ரோர் 32 ரன்கள் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்புதிய தலைமுறை

இதைடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தானின் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினர். ஜெய்ஸ்வால் 45 ரன்கள், கோலர் காட்மோர் 20 ரன்களில் வெளியேற கேப்டன் சாம்சன் 17, ஜூரல் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர். ரியான் பராங், ஹெட்மயர் சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தினர். இதன் மூலம் அந்த அணி 19 ஓவர் முடிவில் இலக்கை எட்டி, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னையில் நாளை (மே24) நடைபெறும் 2 ஆவது குவாலிஃபையரில் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. தொடரும் 17 வருட சோகக்கதை! கோலியை சொல்லி வீழ்த்திய அஸ்வின்!

திக்குமுக்காடும் இணையம்

இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்களை பிற ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து பதிவுகளை பதிவுட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த மே 18 ஆம் தேதி சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அப்போது ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்ததும், அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்காக காத்திருந்த தோனி, பின் பொறுமை இழந்து ட்ரெஸ்ஸிங் ரூம் சென்றதும் விவாத்திற்குள்ளானது. மேலும் ஆர்சிபி ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களையும், இணையத்தில் கேலிகளை செய்த காட்சிகளும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக காணப்பட்டன. இந்நிலையில் நேற்று பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியுடன் தோல்வி அடைந்தது. இந்த வாய்ப்பை சென்னை ரசிகர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

எக்ஸ், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளங்கள் எதை எடுத்துக்கொண்டாலும், சென்னை ரசிகர்களின் கொண்டாட்டங்களே காணப்படுகின்றன. இணையமே மீம்ஸ்களாலும், கேலி வீடியோக்களாலும் நிரம்பி வழிகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்... கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்த கோலி!

வைரலாகும் முன்னாள் வீரர்களின் கருத்துகள்

அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஆர்சிபி அணியை விமர்சித்து பேசிய காட்சிகளும் வைரலாக்கப்படுகின்றன. கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசிய பழைய வீடியோவும் வைரலாக்கப்படுகிறது. அதில், “ஒவ்வொரு முறையும், கனவிலும் கூட தோற்கடிக்க விரும்பிய அணி ஆர்சிபி. அவர்கள் எதையும் வெல்லவில்லை, ஆனால் எல்லாவற்றையும் வென்றதுபோல் நினைத்துக் கொள்வார்கள். அனேகமாக கொல்கத்தா பெற்ற மூன்று சிறந்த வெற்றிகள் என்பது ஆர்சிபிக்கு எதிரானது” என தெரிவித்திருப்பார். இந்த வீடியோவும் வைரலாக்கப்படுகிறது.

rcb, ambati rayudu
rcb, ambati rayudutwitter

முன்னாள் சென்னை வீரர் அம்பத்தி ராயுடு கூறுகையில், “கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும், ஐபிஎல் கோப்பைகளை வெல்ல முடியாது என்பதை ஆர்சிபியின் இன்றைய ஆட்டம் காட்டுகிறது. நீங்கள் திட்டமிட வேண்டும். ப்ளே ஆஃப் சுற்றுக்கு வந்தால் மட்டுமே கோப்பையை வென்றுவிட முடியாது. தொடர்ந்து அதே ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியும் என நினைக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளதும் வைரலாக்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
“போட்டில தோல்வியடைஞ்சாலும் அதே அன்புதான்..” - வளர்ப்பு நாய் குறித்து தோனி சொன்ன சுவாரஸ்யம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com