Angeshwar G
அங்கேஷ்வர். M.Sc. Biotechnology படித்திருக்கிறேன். படிப்பிற்கு அறிவியலைத் தேர்ந்தெடுத்தபோதும், சமூக நியாயத்தையும் மக்கள் குரல்களையும் நெருக்கமாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கமே என்னை இத்துறைக்குள் இழுத்தது.
எழுத்து எளிமையாகவும், வாசிப்பவர்களுக்கு நேர்மையாகவும் இருந்தால் அதுவே போதுமென நினைக்கிறேன். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ எனும் சிலப்பதிகார வரிகளை ஆழமாக நம்பும் நான் அந்த அரசியலை பிழையின்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதையே எழுத்தின் நோக்கமாக வைத்திருக்கிறேன்.
என்னை ‘Journalist’ என்று முழுமனதோடு சொல்லிக்கொள்ள ஒவ்வொரு நாளும் முயற்சி எடுத்துவருகிறேன். புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியாகும் எனது செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள் எல்லாம் நிகழ்கால அரசியல் சூழலை தெளிவுடன் புரிந்துகொள்ள வைக்கும் உணர்வுமிக்க எழுத்துக்களாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன்.