“எனக்குள் இருக்கும் பயம்தான் என் வெற்றிக்கு முதல் காரணம்; உண்மையில் நான் அதிகம் பயப்படுவேன்!” - தோனி

“அழுத்தத்தின் போது சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு என்னுடைய பயம்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது” - பயத்தின் முக்கியத்துவம் குறித்து தோனி
dhoni
dhoniweb

பொதுவாகவே மகேந்திர சிங் தோனி அழுத்தமான நேரத்தில் அமைதியாக இருந்து சிறந்த முடிவுகளை எடுக்கும் தன்னுடைய கேப்டன்சிக்காக அதிகம் பெயர் போனவர். “உண்மையில் தோனியை போல கடினமான நேரத்தில் யாராலும் சிறந்த முடிவை எடுக்க முடியாது, அதேபோல அழுத்தமான நேரத்தில் தனியாளாக அவரால் வெற்றியை பெற்றுத்தர முடியும், அவர் உண்மையில் பயமற்றவர், அச்சமின்றி விளையாடக்கூடியவர்” என்று தோனியை ரசிகர்கள் அதிகமாக புகழ்வது உண்டு.

dhoni
dhoni

இப்படி பல உலத்தரம் வாய்ந்த பவுலர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய மகேந்திரசிங் தோனி, தன்னை அச்சமற்றவர் என்று ரசிகர்களும் விமர்சகர்களும் கூறுவதை மறுத்துள்ளார். மாறாக தான் அதிகம் பயப்படக்கூடியவன் என்றும், அந்த பயம்தான் தன்னை தவறான முடிவுகளை எடுக்கவிடாமல் தடுத்து, அலட்சியமான செயல்களில் ஈடுபடவிடாமல் வெற்றிக்கு அழைத்துச்சென்றது என்றும் பயத்தின் முக்கியத்தும் குறித்து பேசியுள்ளார்.

dhoni
’இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..!’ CSK-ஐ வீழ்த்திய பிறகு விடியவிடிய பார்ட்டி நடத்திய RCB வீரர்கள்..!

பயமில்லை என்றால் உங்களால் சிறந்த முடிவுகளை எடுக்கமுடியாது!

சென்னை சூப்பர் சிங்ஸ் அணி வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் தோனி, “பயம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. உங்களுக்கு அந்த பயம் எப்போதும் இருக்க வேண்டும். ஒருவேளை எனக்கு பயம் இல்லையென்றால், என்னால் ஒருபோதும் தைரியமாக இருக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் பயமும், அழுத்தமும் எனக்கு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அவை எல்லாவற்றையும் யோசிக்க வைத்து சரியான முடிவை எடுக்க எனக்கு பெரிதாக உதவுகிறது.

என்னை பயமற்றவன் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படியில்லை. ஒருவர் பயமின்றி இருந்தால், நிச்சயம் அவர் பொறுப்பற்றவராக இருப்பார். ஒருவேளை எனக்கு எந்தவிதமான பயமும் இல்லாமல் போனால், நான் சாதாரண விஷயங்களை கூட மதிக்க மாட்டேன். அந்த அனுகுமுறை நீங்கள் எப்போது சாலையில் நடக்கிறீர்கள், எப்போது கயிற்றில் நடக்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமல் செய்துவிடும். அதனால் ஒரு தனிநபரின் வளர்ச்சிக்கு அழுத்தமும், பயமும் எப்போதும் முக்கியமானவை என்பதை நான் உணர்கிறேன்” என்று பயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

dhoni
கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. தொடரும் 17 வருட சோகக்கதை! கோலியை சொல்லி வீழ்த்திய அஸ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com