“சிலமுறை இதை சொல்லவேண்டியிருக்கிறது..”! மீண்டும் RCB அணியை கலாய்த்து பதிவிட்ட அம்பத்தி ராயுடு!

மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காவும் என 6 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் அம்பத்தி ராயுடு கோப்பை வெல்லாத ஆர்சிபி அணியை பொதுவெளியில் கலாய்த்து பதிவிட்டிருப்பது தீயாக பரவிவருகிறது.
ராயுடு - கோலி
ராயுடு - கோலிweb

2023 ஐபிஎல் தொடரை வென்று நடப்பு சாம்பியனாக இருந்துவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, முக்கியமான போட்டியில் தோற்கடித்த ஆர்சிபி அணி சிஎஸ்கேவை தொடரை விட்டே வெளியேற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. அப்போதைய போட்டியில் ஆர்சிபி அணியின் அதீத கொண்டாட்டமும், போட்டிக்கு பிறகு ஆர்சிபி ரசிகர்களால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் ட்ரோல் செய்யப்பட்டதும் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமில்லாமல், முன்னாள் சிஎஸ்கே வீரரான அம்பத்தி ராயுடுவும் 17 வருடமாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணியை ட்ரோல் செய்து கருத்து தெரிவித்தனர்.

ராயுடு
ராயுடு

ஆர்சிபி அணியின் வெற்றிகொண்டாட்டம் குறித்து பேசிய அம்பத்தி ராயுடு, “ஆர்சிபி அணியை பற்றி பேசினால், வெறும் ஆர்வமும் அதிகப்படியான கொண்டாட்டமும் மட்டுமே கோப்பைகளை வென்றுகொடுக்காது” என்று கூறினார்.

அதேபோல, “பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டால் மட்டும் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட முடியாது. சிஎஸ்கே அணியை வீழ்த்தியதை எல்லாம் கோப்பையை வென்றுவிட்டதை போல நினைக்க வேண்டாம்” என விமர்சித்திருந்தார்.

rayudu
rayudu

இந்நிலையில் எலிமினேட்டரில் தோற்ற ஆர்சிபி அணியை விமர்சிக்கும் வகையில், மீண்டுமொரு பதிவை அம்பத்தி ராயுடு பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

ராயுடு - கோலி
கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. தொடரும் 17 வருட சோகக்கதை! கோலியை சொல்லி வீழ்த்திய அஸ்வின்!

சிலமுறை இதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது..

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கும் அம்பத்தி ராயுடு, ”5 முறை கோப்பை வென்ற சாம்பியன் அணியிடமிருந்து சிறிய நினைவூட்டல், இதை சிலமுறை சொல்லவேண்டியிருக்கிறது” என பதிவிட்டு, அதில் “5வது கோப்பையை வென்ற பிறகு சிஎஸ்கே வீரர்கள் 5 கோப்பைகள்” என கூறும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு எதனால் ஆர்சிபி அணியால் கோப்பை வெல்லமுடியவில்லை என்பது பற்றி கூறியிருந்த ராயுடு, “அழுத்தமான சூழ்நிலைகளில் நட்சத்திர வீரர்கள் இளம்வீரர்களை விளையாடவிட்டு வேடிக்கை பார்ப்பதாலேயே ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் திணறுகிறது” என்று விமர்சித்திருந்தார்.

அம்பத்தி ராயுடுவை தவிர மற்றொரு சிஎஸ்கே வீரரான பத்ரிநாத்தும், ஆர்சிபி அணி தோல்விக்கு பிறகு “இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்” என்ற மீம் பதிவை போட்டு கலாய்த்து இருந்தார்.

அதேபோல நடிகர் ஜீவா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் ஆர்சிபி அணியை ட்ரோல் செய்து பதிவிட்டுள்ளனர்.

ராயுடு - கோலி
”RCB-ஐ விட்டு விராட் கோலி வெளியேறவேண்டும்..”! ரொனால்டோ, மெஸ்ஸியை உதாரணம் கூறிய பீட்டர்சன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com