”இதற்கு மேல் எதற்காக மேக்ஸ்வெல்? அவருக்கு எந்த கவலையும் இல்லை!” - கடுமையாக சாடிய மனோஜ் திவாரி

“ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக விளையாடும் அவரால், ஏன் ஐபிஎல்லில் விளையாட முடியவில்லை. ஐபிஎல்லில் ஆட அவருக்கு ஆர்வம் இல்லை போல, கோப்பை இல்லாத போது அணியில் உங்களுக்கு மேக்ஸ்வெல் தேவையில்லை” - மனோஜ் திவாரி
மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்web

நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் மோசமான கிரிக்கெட்டை விளையாடிய க்ளென் மேக்ஸ்வெல், 9 இன்னிங்ஸ்களில் 5.77 சராசரியுடன் வெறும் 52 ரன்கள் மட்டுமே அடித்தது மட்டுமில்லாமல் 4 முறை 0 ரன்னில் வெளியேறி மிகமோசமான ஆட்டத்தை பதிவுசெய்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகமுறை (4) டக்அவுட்டில் வெளியேறிய மேக்ஸ்வேல், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை (18) 0 ரன்னில் வெளியேறிய வீரர் என்ற மிகமோசமான சாதனையை படைத்துள்ளார்.

maxwell
maxwell

அதற்கும் ஒருபடிமேல் சென்று அணிக்கு தேவையான நேரத்தில் எல்லாம், பொறுப்பாக விளையாடாமால் தூக்கி அடிக்க முயன்ற மேக்ஸ்வெல் அணியை முக்கியமான நேரத்தில் கைவிட்டார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக எலிமினேட்டரில் கூட ஒரு 20 ரன்களை மேக்ஸ்வெல் அடித்திருந்தால் கூட ஆர்சிபி அணி வெற்றியின் பக்கம் இருந்திருக்கும். ஆனால் எந்தவிதமான கவலையும் இல்லாமல் பந்தை தூக்கியடித்த மேக்ஸ்வெல் 0 ரன்னில் வெளியேறி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

மேக்ஸ்வெல்
’இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..!’ CSK-ஐ வீழ்த்திய பிறகு விடியவிடிய பார்ட்டி நடத்திய RCB வீரர்கள்..!

இதற்கு மேலும் அணியில் மேக்ஸ்வெல் தேவையில்லை!

ஆர்சிபி அணியின் தோல்விக்கு மேக்ஸ்வெல்லின் பொறுப்பில்லாத ஆட்டம் தான் மிகப்பெரிய காரணம் என்று கூறிய முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி, மேக்ஸ்வெல்லுக்கு ஐபிஎல் விளையாட ஆர்வமில்லை என்றும், இனி அவர் அணிக்கு தேவையில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

maxwell
maxwell

மேக்ஸ்வெல் குறித்து பேசிய மனோஜ் திவாரி, “சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு அனுபவம் நிறைய இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும்போது தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார், ஆனால் அதுவே ஐபிஎல் என வந்துவிட்டால் அவருக்கு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. ஒருவேளை ஐபிஎல்லில் விளையாட விருப்பம் இல்லையா என்று தெரியவில்லை, ஒவ்வொரு முறை சுலபமாக அவுட்டாகி வெளியேறும் போதும் எந்தவிதமான கவலையும் அவருக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எப்படி விளையாடினாலும் பணம் எளிதாக வந்துவிடுகிறது, அதேவேளை ஐபிஎல்லில் விளையாடாமல் போனாலும் அவருக்கு பணப்பிரச்னை வரப்போவது இல்லை. அதனால் மோசமாக செயல்பட்டாலும் எந்தவித வருத்தமும் இன்றி சிரித்துக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் சென்றுவிடுகிறார்” என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

maxwell
maxwell

அதேநேரத்தில் இதற்குமேலும் ஆர்சிபிக்கு மேக்ஸ்வெல் வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிய அவர், “முடிவில் நீங்கள் தேடிய ரிசல்ட் எங்கே? நீங்கள் கோப்பை வெல்லவே விளையாடவேண்டும். பெங்களூரு சிறப்பாகச் செயல்படாதபோது, ​​நாங்கள் இங்கே அமர்ந்து அவர்கள் ஏன் செயல்படவில்லை என்று பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தோம். நாளின் முடிவில், அவர்கள் மீண்டும் ஆறு வெற்றிகளைப் பெற்றதில் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் அணி மீண்டும் கோட்டைவிட்டது, உங்களின் இறுதி இலக்கு கோப்பையாக தான் இருக்க வேண்டும். இதுதான் காலங்காலமாக ஆர்சிபி அணியில் பெரிய பிரச்னையாக இருந்து கொண்டிருக்கிறது” என்று க்றிக்பஸ் உடன் பேசியுள்ளார்.

மேக்ஸ்வெல்
கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. தொடரும் 17 வருட சோகக்கதை! கோலியை சொல்லி வீழ்த்திய அஸ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com