’இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..!’ CSK-ஐ வீழ்த்திய பிறகு விடியவிடிய பார்ட்டி நடத்திய RCB வீரர்கள்..!

எலிமினேட்டர் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் அணி ஆர்சிபியை வீழ்த்திய பிறகு, சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமில்லாமல் அம்பத்தி ராயுடு, சுப்ரமணியம் பத்ரிநாத் உட்பட ஜீவா முதலிய திரைப்பிரபலங்களும் ஆர்சிபி அணியை ட்ரோல் செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
csk vs rcb
csk vs rcbweb

2023 ஐபிஎல் தொடரை வென்று நடப்பு சாம்பியனாக இருந்துவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல ஆர்சிபி அணியை வீழ்த்தவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. எப்படியும் சிஎஸ்கே அணி தான் வெற்றிபெறும், அப்படி வெற்றிபெறவில்லை என்றால் பரவாயில்லை ஆர்சிபி அணி இந்தமுறையாவது சென்று கோப்பை வெல்லட்டும் என்ற நட்புரீதியிலான மனநிலையில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு, போட்டியில் தோற்றபிறகு ஆர்சிபி அணியும், அந்த அணியின் ரசிகர்களும் செய்த அலப்பறையானது அதிருப்தியை ஏற்படுத்தியது.

rcb
rcb

அதற்கும் ஒருபடிமேல் சென்று தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைக்குலுக்கவில்லை, விராட் கோலி ரசிகர்களை நோக்கி வாயில் கைவைத்த சமிக்ஞை என்ற அடுத்தடுத்த செய்திகளானது சமூகவலைதளங்களில் இரண்டுபக்க ரசிகர்கள் சண்டையை உருவாக்கியது. ஆர்சிபி அணிக்கு எதிராக தோற்றபிறகு, அடுத்தப்போட்டியில் ஆர்சிபி அணியின் தோல்வியை நோக்கி சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருந்தனர்.

rcb
rcb

ஆனால் ரசிகர்கள் தான் காத்திருக்கின்றனர் வெறும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் சண்டையாக சென்றுவிடும் என்று இருந்த சூழலானது, ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தோற்றபிறகு முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் சமூகவலைதங்களில் வெளிப்படையாக ட்ரோல் செய்து பதிவிட்டனர். இணையதளம் முழுக்க ஆர்சிபி அணிக்கு எதிராக பதிவுகள் தீயாக பரவிய நிலையில், அப்படி என்ன தான் பா ஆர்சிபி பண்ணிட்டாங்க? என்ற கேள்விகளை ஐபிஎல் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

dhoni
dhoni

இந்நிலையில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய பிறகு, விடியற்காலை 5 மணிவரை ஆர்சிபி அணி பார்ட்டி நடத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

csk vs rcb
கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. தொடரும் 17 வருட சோகக்கதை! கோலியை சொல்லி வீழ்த்திய அஸ்வின்!

காலை 5 மணிவரை பார்ட்டி நடத்திய RCB அணி!

சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றியை அதீதமாக கொண்டாடிய ஆர்சிபி அணியை பார்த்த ரசிகர்கள், “என்ன இவங்க எதோ கோப்பையை வென்றது போல” இப்படி பன்றாங்களே என்ற கேள்வியை எழுப்பினர். ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றியை எந்தளவு ஆர்சிபி அணி கொண்டாடியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி 6 பந்துக்கு 17 ரன்களை டிஃபண்ட் செய்த யாஷ் தயாள், முதல் பந்தில் தோனி சிக்சர் அடித்தபிறகும் போட்டியை ஆர்சிபி அணியின் பக்கம் திருப்பி வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறினார்.

dhoni
dhoni

இந்நிலையில் யாஷ் தயாளின் அப்பாவான சந்தர்பால் தயாள், ”ரிங்கு சிங் அடித்த 6 சிக்சருக்கு பிறகு என்னுடைய மகனை தூற்றியவர்கள் எல்லோரும், இன்று வாழ்த்து சொல்ல போன் செய்து கொண்டிருக்கிறார்கள்” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

yash dayal
yash dayal

என்டிடிவி வெளியிட்டிருக்கும் தகவலின் படி, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பிறகு ஆர்சிபி வீரர்கள் அதிகாலை 5 மணிவரை பார்ட்டி நடத்தியதாக யாஷ் கூறினார். சிஎஸ்கே அணியை வீழ்த்தியதை நினைத்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். முதல் பந்தில் தோனி சிக்சர் அடித்தபோது, ​​​​அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டதாகவும், கிரீஸில் யார் இருந்தார்கள், அது தோனியா அல்லது ஜடேஜாவா என்பதைப் பற்றி அதிகம் தலைக்கேற்றிகொள்ளாமல் பந்துவீசியாதாகவும் கூறினார்" என்று யாஷின் தந்தை சந்தர்பால் தயாள் IANS இடம் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

csk vs rcb
”RCB-ஐ விட்டு விராட் கோலி வெளியேறவேண்டும்..”! ரொனால்டோ, மெஸ்ஸியை உதாரணம் கூறிய பீட்டர்சன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com