ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல்எக்ஸ் தளம்

ஒரே நாடு ஒரே தேர்தல்.. சாத்தியக் கூறுகளும் சிக்கல்களும்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளன.
Published on

ஒரே நாடு ஒரே தேர்தல்

தற்போது நாடு முழுவதும் ஒரே பேச்சுதான். ஒரே நாடு ஒரே தேர்தல்.. கடந்த 12 ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான 2 மசோதாக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாளை இந்த மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளன.

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல்கோப்புப்படம்

மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த அடுத்த 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் 89,194 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் இடங்களுக்கும், 31 லட்சத்து 89 ஆயிரம் கிராமப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எங்கு மழைக்கு வாய்ப்பு?

உயர்நிலைக் குழு மீது எழுந்த கேள்விகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் 2014 ஆம் ஆண்டு தேர்தலின்போதே பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உயர்நிலைக் குழு உருவாக்கப்பட்டபோதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்தபோதே, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக பேசியிருந்த நிலையில் அவரை எப்படி உயர்நிலைக் குழுவின் தலைவராக நியமிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி, இந்த தேர்தல் நடைமுறை மாநிலங்களுக்கே பெரும் சிக்கலை ஏற்படுத்தும் நிலையில், மாநில கட்சிகளின் சார்பிலோ அல்லது மாநிலங்களின் யார் உறுப்பினராக இருக்கிறார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பின. மேலும், உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஒரேநாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவே இருக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஒரே நாடு ஒரே தேர்தல்
தமிழக முதல்வர், துணை முதல்வர், ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கைது

18000 பக்கங்கள் கொண்ட அறிக்கை

இந்த குழு கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தனது 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் சமர்பித்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறு காரணங்களையும் சுட்டிக்காட்டி இருந்தது. ஒரே நபர் எம்.எல்.ஏ மற்றும் எம்பி பதவிக்கும் போட்டியிடமாட்டார் என்றும், வெறுப்புப் பேச்சுகள் இந்த நடைமுறையினால் வெகுவாகக் குறையும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்தக் குழு அமைக்கப்பட்டபோதே விமர்சனங்கள் எழுந்தது. அதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சரியாக வருமா? வராதா? நடத்தலாமா? வேண்டாமா? என்பதை ஆராய குழு அமைக்காமல், ஒரேநாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து பரிந்துரைகள் வழங்குமாறே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. மேலும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டின.

இந்தியாவின் முதல் தேர்தல்
இந்தியாவின் முதல் தேர்தல்

1952 மற்றும் 1957 போன்ற ஆண்டுகளிலெல்லாம் நடந்த தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது தானே? அப்போது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாக அப்போதைய காங்கிரஸ் அரசு செயல்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்றெல்லாம் வாதங்கள் ஆளும் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக, 1957 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் குறித்து உயர்நிலைக் குழு தனது அறிக்கையில், குறிப்பிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
சையத் முஷ்டாக் அலி FINAL: மும்பைக்காக மீண்டும் மிரட்டும் ஷர்துல் தாக்கூர்.. ஒரே ஓவரில் 2 விக்கெட்!

ஆளும் தரப்பின் வாதம் என்ன?

அதாவது, “மாநில சட்டமன்றங்கள் ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டிருந்தால், பொதுத்தேர்தல்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடத்தப்பட வேண்டியிருக்கும். அத்தகைய சூழலில் நாடு முழுவதும் பொதுத்தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை. இரண்டாவது பொதுத்தேர்தலை மார்ச் 1957 இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தற்போதுள்ள சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட வேண்டும். சட்டசபைகளைக் கலைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசியல் கட்சிகளை கலந்தாலோசித்து ஒருமித்த முடிவை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, பீகார், பம்பாய், மெட்ராஸ் , மைசூர், பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்கள் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்பே கலைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய பொதுத்தேர்தல்
இந்திய பொதுத்தேர்தல்pt web

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆளும் தரப்பு கூறும் வாதம் செலவுகள் குறையும் என்பது. அதுமட்டுமின்றி வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என இரண்டுக்கும் தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்னை ஏற்படாது எனவும் தேர்தல் நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் மக்களுக்கான பல சேவைகள் தடைபடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
களைகட்டும் மகளிர் IPL மினி ஏலம்.. 10 லட்சத்தில் தொடங்கி 1.60 கோடிக்கு சென்ற 16 வயது தமிழக வீராங்கனை!

தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு?

ஆனால், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓபி ராவத், இன்றைய நிலவரப்படி, உலகிலேயே மிகக்குறைவான செலவில் தேர்தல் நடத்தப்படுவது இந்தியாவில்தான் எனத் தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு வாக்காளருக்கு 84 ரூபாய் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மற்றொரு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி, இந்தியாவில் தேர்தலை நடத்துவதற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சகர்கள் இதுதொடர்பாக கூறுகையில், நடப்பாண்டுக்கான இந்தியாவின் பட்ஜெட் மட்டும் ₹48,21,000 கோடி. இதை ஒப்பிடும் போது நான்காயிரம் கோடி என்பது மிக மிக குறைவு. அதுமட்டுமின்றி தேர்தல் என்பது மிக முக்கியமான ஒன்று. தேர்தலின் போது நமது வாக்குகள் நாம் விரும்பியவர்களுக்கே நாம் செலுத்தியுள்ளோம் என்ற மக்களது நம்பிக்கைதான் முக்கியமே தவிர செலவினைக் குறைக்க வேண்டும் என்பது முக்கியமல்ல” எனத் தெரிவிக்கின்றனர்.

Election
Electionfile

ஒரே நாடு ஒரே தேர்தலை தீவிரமாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் மாநில பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு தேசிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கின்றன. மாநிலக் கட்சிகள் தேயும் சூழல் உருவாகும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டு வருகின்றன.

ஒரே நாடு ஒரே தேர்தல்
“விசிகவில் இருந்து முழுமையாக விலகுகிறேன்” ஆதவ் அர்ஜுனா

திருத்தப்பட வேண்டிய சட்டங்கள் என்ன?

அதேவேளையில், இந்த நேரத்தில் இந்த மசோதாவை கொண்டு வருவது, அதானி, மணிப்பூர் போன்ற மிக முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களது கவனத்தை திசை திருப்பும் செயல் எனவும் குற்றம் சாட்டுகின்றன. அதுமட்டுமின்றி, மத்தியில் ஒரு அரசு அமையும்போது, அந்த குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் பிற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும். அப்போது, அரசின் செயல்பாடுகள், தேர்தல்களில் எதிர்கொள்ளும் விளைவுகளை கருத்தில் கொண்டு ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் இருக்கும். ஆனால், 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே தேர்தல் நடந்தால் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் தேர்தலே நடக்காது. இதன் காரணமாக மத்திய அரசின் செயல்பாடுகளை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.

ConstitutionDayofIndia
ConstitutionDayofIndia

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அரசமைப்பில் 83, 85(2)b, 174,(2)(B),356 மற்றும் 75(3) ஆகிய சட்டப்பிரிவின் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் 3 இல் 2 பங்கு ஆதரவு தேவைப்படும். தற்போது கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் இதை நிறைவேற்றுவது கடினம். ஆனாலும், இதைக் கொண்டுவருவது திசை திருப்பும் நடவடிக்கையே என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதற்கேற்றார் போலவே, நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த மசோதாக்களின் பட்டியலில் இருந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தற்போது நீக்கப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்திலேயே மீண்டும் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாடு ஒரே தேர்தல்
“திமுகவின் பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது” - எடப்பாடி பழனிசாமி

என்ன நடந்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை முழு மூச்சோடு எதிர்க்கின்றன எதிர்க்கட்சிகள். இந்த 2 மசோதாக்களும் 2029 நாடாளுமன்ற தேர்தலுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
மனைவி கொடுமை செய்வதாக கூறி ஐடி ஊழியர் விபரீத முடிவெடுத்த விவகாரம்: மனைவி உட்பட மூவர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com