களைகட்டும் மகளிர் IPL மினி ஏலம்.. 10 லட்சத்தில் தொடங்கி 1.60 கோடிக்கு சென்ற 16 வயது தமிழக வீராங்கனை!
ஐபிஎல்லை போன்றே கிரிக்கெட் ரசிகர்களின் பெருமித்த வரவேற்பை பெண்கள் ஐபிஎல் என கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக்கும் பெற்றுள்ளது. முதலிரண்டு சீசன்களில் முதல் சீசனை ஹர்மன்ப்ரீத் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனை ஸ்மிரிதி மந்தனா தலைமையில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
மொத்தமாக 120 வீராங்கனைகள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். அதில் 91 இந்திய வீராங்கனைகளும், 29 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்கும். இத்தனை வீரர்கள் பங்கேற்றாலும் நிரப்பப்பட போவது என்னவோ 19 இடங்கள்தான். அதிலும் 5 இடங்களில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாக நடைபெற்று வரும் மினி ஏலத்தில் 16 வயதான தமிழக வீராங்கனை ஜி கமலினி 1.60 கோடிக்கு ஏலம் சென்று அசத்தியுள்ளார்.
10 லட்சத்திலிருந்து 1.60 கோடிக்கு சென்ற தமிழக வீராங்கனை..
முதல் சுற்றில் வாசிக்கப்பட்ட பெரும்பாலான பெயர்களில் ஸ்டார் வீரர்கள் கூட அன்சோல்டாக சென்றனர். முதல் ஏலத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான 33 வயது டியான்ட்ரா டாட்டின் 50 லட்சம் அடிப்படை விலையிலிருந்து 1.70 கோடிக்கு குஜராத் ஜியண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
அடுத்ததாக தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் நடைன் டி க்ளெர்க் அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
3வது ஏலமாக வந்த 16 வயதான தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியின் பெயர் அடிப்படை விலையான 10 லட்சத்துக்கு வாசிக்கப்பட்டது. இந்தமாதம் இந்திய அணிக்கான யு19 அணியில் 80 ரன்கள் (61 பந்துகள்), 79 ரன்கள் (62 பந்துகள்), 63 ரன்கள் (44 பந்துகள்) என அதிரடி காட்டியிருந்த கமலினியை ஏலத்தில் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
10 லட்சத்திலிருந்து 1.60 கோடிக்கு விலை கேட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 16 வயது தமிழக வீராங்கனையை ஏலத்தில் எடுத்தது.
தக்கவைக்கப்பட்ட அணிகளின் விவரம்
UP Warriorz: தக்கவைக்கப்பட்ட அணி
அலிசா ஹீலி (கேப்டன்), அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, ராஜேஸ்வரி கயக்வாட், ஸ்வேதா செராவத், சோஃபி எக்லெஸ்டோன், தஹ்லியா மெக்ராத், விருந்தா தினேஷ், சைமா தாகோர், பூனம் கெம்னார், செளத்ரி சுல்தானா, செமரி சுல்தானா
RCB: தக்கவைக்கப்பட்ட அணி
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி, ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, சோஃபி டிவைன், ரேணுகா சிங், சோஃபி மோலினக்ஸ், ஏக்தா பிஷ்ட், கேட் கிராஸ், கனிகா அஹுஜா, டேனி வியாட் (வர்த்தகம்)
GT: தக்கவைக்கப்பட்ட அணி
பெத் மூனி (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், லாரா வால்வார்ட், ஷப்னம் ஷகில், தனுஜா கன்வர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், மேக்னா சிங், காஷ்வீ கெளதம், பிரியா மிஸ்ரா, மன்னத் காஷ்யப், பார்தி ஃபுல்மாலி, சயாலி சத்ரே
MI: தக்கவைக்கப்பட்ட அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், க்ளோ ட்ரையோன், ஹேலி மேத்யூஸ், ஜின்டிமணி கலிதா, நடாலி ஸ்கீவர், பூஜா வஸ்த்ரகர், சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா, ஷப்னிம் இஸ்மாயில், அமந்தீப் கவுர், எஸ். சஜனா, கீர்த்தனா
DC: தக்கவைக்கப்பட்ட அணி
மெக் லானிங் (கேப்டன்), ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், மரிசான் கேப், மின்னு மணி, ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியா பாட்டியா, டைட்டாஸ் சாது, அனாபெல் சதர்லேண்ட்