மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 41 | ‘நான் வாழ வைப்பேன்’ ஸ்டைலிஷ் ரஜினிகாந்த்!

41 வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘நான் வாழ வைப்பேன்’ திரைப்படத்தில் ‘ரஜினிகாந்த்’ ஏற்று நடித்திருந்த ‘மைக்கேல் டிசோசா’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
ரஜினிகாந்த்நான் வாழ வைப்பேன் திரைப்படம்

(தொடரின் முந்தைய பிற அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

ஒரு சில துணைக் கதாபாத்திரங்கள் இருக்கின்றன. படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஹீரோவிற்கு நிகரான தாக்கத்தை அவை நமக்குள் ஏற்படுத்தி விடும். ஹீரோவைக் காட்டிலும் மறக்க முடியாத கேரக்டராக அது மனதில் நின்று விடும். அப்படிப்பட்ட கேரக்டர் ஒன்றை அவரது ஆரம்பக் காலக்கட்டத்தில் ஏற்றிருந்தார் ரஜினிகாந்த். அந்தத் திரைப்படத்தின் தலைப்பு ‘நான் வாழ வைப்பேன்’. பாத்திரத்தின் பெயர் ‘மைக்கேல் டிசோசா’.

சிவாஜி - ரஜினிகாந்த்
சிவாஜி - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை எப்போதோ அடைந்து இன்று வரை தனது சந்தை மதிப்பை இழக்காமல் தமிழ் சினிமாவில் நீடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இதற்காக துவக்கத்தில் அவர் போட்டு வைத்த அஸ்திவாரத்தில் அவருடைய உழைப்பும் தனித்துவமும் தெரியும். ஆம், ரஜினிகாந்த் நடித்த துவக்க கால திரைப்படங்களைக் கவனியுங்கள். எந்தவொரு காட்சியிலும் தான் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிடுவார்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

ரஜினியின் ஸ்டைலான அசைவுகள் - சூப்பர் ஸ்டாருக்கான விதை

உடம்பை விறைப்பாக வைத்துக் கொண்டு கையை சடாரென்று உயர்த்துவது, ஒரு வசீகரமான கோணத்தில் திரும்புவது, ஸ்டைலான பாணியில் நடந்து வருவது, பேச வேண்டிய வசனத்தை வித்தியாசமான உச்சரிப்பில்  சொல்வது என்று தன் தனித்தன்மையை நிரூபிப்பதற்காக எதையாவது செய்து கொண்டேயிருப்பார். இவையெல்லாம் கிம்மிக்ஸ் என்று சொல்லப்பட்டாலும் ஒரு நடிகனுக்கு இது அவசியமானது. பார்வையாளனின் மனதில் தன்னை பதிய வைக்க வேண்டும் என்றால் இது போன்ற தனித்தன்மைகள் முக்கியம்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இத்தகைய ரஜினியின் உடல்மொழியும் வேகமான வசன உச்சரிப்பும் அந்தச் சமயத்தில் ஒரு சில பார்வையாளர்களால் கிண்டலடிக்கப்பட்டாலும் பெரும்பாலான பார்வையாளர்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரை மிகவும் கவர்ந்தது. ‘ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்’ என்கிற பட்டத்தை ரசிகர்கள் ரஜினிக்கு தந்து மகிழ்ந்தார்கள்.

‘நான் வாழ வைப்பேன்’ படத்திலும் தனது ஸ்டைலான பாடி லேங்வேஜை தந்து அசத்தியிருந்தார் ரஜினி.

தீக்குச்சியை எதிர்பாராத இடங்களில் உரசி நெருப்பை வரவழைத்து சிகரெட்டை பற்ற வைப்பார். இந்த சிகரெட் பிடிக்கும் ஸ்டைலையே பெரும்பாலான படங்களில் தன்னுடைய பாணியில் விதம் விதமாக கையாண்டு பார்வையாளர்களைச் சம்பாதித்தார். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 38 | தடுமாற்றத்தால் சறுக்கிவிழும் இளைஞனாக ‘திலீப்’

வில்லனை வீழ்த்தி தன்னைச் சார்ந்திருப்பவர்களை காப்பாற்றுவதுதான் ஹீரோவின் பொதுவான வழக்கமாக இருக்கும். ஆனால் ‘நான் வாழ வைப்பேன்’ திரைப்படத்தில் வில்லனை வீழ்த்தி ஹீரோவைக் காப்பாற்றும் வித்தியாசமான பாத்திரமாக ரஜினியின் பாத்திரம் இருந்தது. இதற்காக தனது உயிரையே தியாகம் செய்வான் மைக்கேல். அதனாலேயே இது மறக்க முடியாத பாத்திரமாக மாறி விட்டது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இத்தனைக்கும் திரைப்படம் முக்கால்வாசி பாகம் முடிந்த நிலையில்தான் ‘மைக்கேல் டிசோசா’ என்கிற இந்தப் பாத்திரம் நமக்கு அறிமுகமாகும். வந்தது சில காட்சிகள என்றாலும் தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார் ரஜினி.

மைக்கேல் டிசோசா - ஹீரோவை மிஞ்சும் துணைப் பாத்திரம்

‘நான் வாழ வைப்பேன்’ படத்தின் ஹீரோவாக நடித்தவர் சிவாஜி கணேசன். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு கொலைப்பழியை தானே முன் வந்து ஏற்றுக் கொள்வார் ஹீரோ. இதன் மூலம் அவருடைய குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்பதுதான் நோக்கம். ஆனால் பிறகு சூழல் மாறி விடும் போது தான் நிரபராதி என்பதை தானே நிரூபிக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்படும்.

சிவாஜி - ரஜினிகாந்த்
சிவாஜி - ரஜினிகாந்த்

எனவே அந்தக் கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஒவ்வொருவருகாக கண்டுபிடித்து பின்தொடர்வார். இந்தப் பயணத்தின் கடைசிக் கண்ணி ‘மைக்கேல் டிசோசா’. ஆம், அவன்தான் கொலைகாரனை நேரில் கண்ட ஒரே சாட்சி.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 37 | ‘நான் பெத்த மகனே’ மனோரமா | மிகையான அன்பும் மனச்சிக்கலே!

மைக்கேல் டிசோசா அறிமுகமாகும் விதத்திலேயே அந்தப் பாத்திரத்தின் தன்மை புரிந்து விடும். தனது இரண்டு கைகளையும் குவித்து கண்களில் வைத்து அதையே பைனாகுலர் போன்ற பாவனையில் மைக்கேல் பார்ப்பான். நள்ளிரவில் சாலையில் தனியாக வரும் ஒரு பணக்கார ஆசாமியைப் பார்த்ததும் அந்தக் கண்களில் குஷி வந்து விடும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தனது உடலை ஸ்டைலாக திருப்பி மறைந்து கொள்வான். அந்த ஆசாமி பக்கத்தில் நெருங்கியதும் தலையில் அடித்து மயக்கமுறச் செய்து மோதிரம், செயின் போன்றவற்றைப் பறித்துக் கொள்வான். பிறகு தன்னுடைய தொடையில் தீக்குச்சியைக் கிழித்து நெருப்பை உண்டாக்கி சிகரெட்டை பற்ற வைத்து சடாலென்று விலகி விடுவான். பிறகு மது, மங்கை என்று அவன் கொண்டாடும் பாடல் காட்சி வரும். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | 'சவடால்' வைத்தி... மறக்க முடியுமா..? ஏன்னா அதான் நாகேஷ்..!

மேற்கத்திய பாணியிலான கோட், சூட், தொப்பி, கழுத்தில் சிலுவை டாலர் செயின் என்று ஸ்டைலான தோரணையில் இருப்பார் ரஜினி. அந்தக் காலக்கட்டத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் படங்களில் பெரும்பாலான ஹீரோக்கள் இப்படி இருந்ததற்கு சில காரணங்கள் இருந்தன.

எழுபது மற்றும எண்பதுகளின் இந்தியத் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படத்தின் தழுவல் அல்லது நகலாகத்தான் இருக்கும். எனவே கௌபாய் பாத்திரங்கள் உள்ளிட்டு அந்தக் கலாசாரத்தின் பாணியை சற்றும் பொருந்தாமல் இங்கு நகலெடுப்பார்கள். ‘தமக்குப் பிடித்த நடிகரின் படம்’ என்பதால் ரசிகர்களும் இந்தக் கலாசார விநோதங்களை கண்டு கொள்ளாமல் ரசிக்கப் பழகி விட்டார்கள். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 34 | உணர்ச்சிகரமான உயிர் நண்பன் ‘ரகு’வாக ‘சலங்கை ஒலி’ சரத்பாபு!

அமிதாப் பாத்திரத்தில் சிவாஜி, பிரான் கேரக்டரில் ரஜினி

1979-ம் ஆண்டு வெளியான ‘நான் வாழ வைப்பேன்’ என்கிற இந்தத் திரைப்படம், 1974-ல் வெளியான ‘மஜ்பூர்’ என்கிற இந்தி திரைப்படத்தின் ரீமேக். அமிதாப் பச்சன் கையாண்டிருந்த பாத்திரத்தைத்தான் தமிழில் சிவாஜி ஏற்றிருந்தார். ‘மைக்கேல் டிசோசா’ பாத்திரத்தை இந்தியில் பிரான் கையாண்டிருந்தார். இந்தி திரைப்படத்தின் மூலம் எதுவென்று பார்த்தால் 1970-ல் வெளியான ‘Zig Zag’ என்கிற ஹாலிவுட் படம் என்பதாகத் தெரிகிறது. 

மஜ்பூர் திரைப்படம் - நான் வாழ வைப்பேன் திரைப்படம்
மஜ்பூர் திரைப்படம் - நான் வாழ வைப்பேன் திரைப்படம்

ஆக, மைக்கேல் டிசோசா என்கிற பாத்திரம் வழிப்பறிக் கொள்ளையைச் செய்யும் திருடன் என்பது அறிமுகக் காட்சியில்  நிறுவப்பட்டு விடும்.  கொலை செய்யப்பட்டவர் அணிந்திருந்த பிரத்யேகமான மோதிரம், மைக்கேலிடம் இருந்ததைக் கண்டுபிடிக்கும் ஹீரோ அவனுடைய இருப்பிடத்திற்கு வருவார். இருவருக்கும் பயங்கரமான மோதல் நிகழும். இந்தியச் சினிமாவின் சண்டைக்காட்சிகளில் நிகழும் வழக்கமான விநோதமான காமெடிகள் இதிலும் நிகழும். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மழலை மாறாத பாசத்துடன் ஒரு குறும்புக்கார அராத்து! பாலக்காட்டு மாதவனின் அசத்தல் காம்போ ‘எடோ... கோபி’

சண்டையின் இறுதியில் மைக்கேலை அடித்து வீழ்த்துவார் ஹீரோ. ‘மைக்கேல் டிசோசா’ என்று தன் பெயரை ஸ்டைலாகச் சொல்லும் ரஜினி, சடாரென்று எழுந்து கொள்வார். கொலையைப் பற்றி கேள்வி கேட்கப்படும் போது கண்களை மேலே சுழற்றி “கொலையா.. அதைச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு எப்பவுமே ஏற்பட்டதில்லை” என்று சொல்லும் மைக்கேல், இயல்பாக தன் கோட் பாக்கெட்டில் கை விட ஹீரோ சுதாரித்துக் கொண்டு அந்த அசைவைத் தடுக்க, ஒரு பாக்கெட்டில் இருந்து சிகரெட்டையும் இன்னொரு பாக்கெட்டில் இருந்து தீக்குச்சியையும் எடுக்கும் மைக்கேல், அதை வசீகரமான பாணியில் உரசி ஏற்றி சிகரெட் பற்ற வைப்பான். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 26 | நாயகன் பட ‘ஜனகராஜ்’!

‘இந்தத் துப்பாக்கி சுடறதுக்காக இல்ல.. தொடறதுக்காக’

“நான் உண்மையைச் சொல்லணும்னா என்னுடைய துப்பாக்கியைத் திருப்பிக் கொடு” என்பான் மைக்கேல். வேறு வழியில்லாத ஹீரோ துப்பாக்கியைத் தர, எதிர்பாராத கணத்தில் அவரை நோக்கியே திருப்பி மைக்கேல் சுடுவான். ஆனால் அது வெற்றுத் துப்பாக்கி. நையாண்டியாகச் சிரிக்கும் மைக்கேல் “நான் என் துப்பாக்கில எப்பவுமே குண்டு போடறதில்ல. நான் இதுவரைக்கும் யாரையும் கொலை பண்ணதில்லை. இது சுடறதுக்காக இல்ல. தொடறதுக்காக. இருக்கறவங்க கிட்ட இருந்து எடுப்பேன்.. இல்லாதவங்களுக்கு கொடுப்பேன். Am a true christian" என்பான் மைக்கேல்.

இந்த ‘Am a true christian’ என்கிற வசனத்தை மைக்கேல் அடிக்கடி சொல்லுவான். சாகப் போகும் இறுதித் தறுவாயிலும் கூட. (உண்மையான கிறிஸ்துவர்கள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடுவார்களா என்றெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாது!).

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

துப்பாக்கியை வெறுமனே பயமுறுத்துவற்காக மட்டுமே மைக்கேல் வைத்திருக்கிறான் என்றால் யாரையும் கொலை செய்யும் எண்ணம் அவனுக்கு கிடையாது என்றும் அடிப்படையில் அவன் நல்லவன் என்பதும் ஹீரோவிற்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் எளிதாகப் புரிந்து விடும்.

சிவாஜி என்னதான் சீனியர் நடிகர் என்றாலும், இதில் வரும் இரண்டு பாத்திரங்களும் ஒருமையில்தான் பேசிக் கொள்வார்கள். இதன் மூலம் ஹீரோவின் இளமையை நிறுவ வைக்கும் முயற்சியாக அது இருக்கலாம். 
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 20 |நடிப்பின் இலக்கணம் - காளையனாக வாழ்ந்த குரு சோமசுந்தரம்!

போலீஸ் காவலில் இருந்து தப்பித்திருக்கும் ஹீரோவைக் காட்டிக் கொடுத்தால் பரிசுப் பணம் கிடைக்கும் என்று மைக்கேலின் நண்பன் ஹீரோ யோசனை தர “ரவி நிரபராதி.. உண்மையான குற்றவாளி இலைமறைவா இருக்கான். ஒரு நிரபராதி தலைமறைவா இருக்கான். அதாண்டா சட்டம்” என்று மைக்கேல் ஸ்டைலாகச் சொல்லும் காட்சியில் அவனுடைய நல்ல கேரக்டர் புரிந்து விடும். நண்பனிடமிருந்து விடைபெறும் போது தான் அருந்திக் கொண்டிருந்த மதுக்கோப்பையை கையை உயர்த்தி மேலேயிருந்து கீழே போடுவார் ரஜினி. எதற்காக அப்படிச் செய்ய வேண்டும்? ஸ்டைல்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினியின் வசீகரமான வசன உச்சரிப்பும் ஸ்டைலும்

கொலையாளியிடம் பேரம் பேசி பணத்தை வாங்கிய பிறகு அவனை போலீஸில் பிடித்துக் கொடுப்பதுதான் மைக்கேலின் பிளான். இதற்காக கொலையாளியின் வீடு தேடிச் செல்வான். காத்திருக்கும் நேரத்தில், ஒரு பெண்மணி வந்து ‘யாரு நீ?’ என்று கேட்க, சடாரென்று திரும்பி ‘மரியாத.. மரியாத’ என்பான் மைக்கேல். பிறகு வரும் கொலையாளியை கைகளைக் குவித்து கண்களின் அருகில் வைத்து பார்த்து அடையாளம் கண்டு கொள்வான். அதன் பிறகு நடக்கும் பேரத்தில் மைக்கேல் பேசும் ஆங்கில வசன உச்சரிப்புகள் ஸ்டைலாக இருக்கும். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள் | மருமகளிடம் வேலைக்காரியாக நடிக்கும் மாமியாராக ‘அவர்கள்’ லீலாவதி

பேரம் முடிந்த பிறகு சோபா மீது தீக்குச்சியை கிழித்து சிகரெட் பற்ற வைத்து “வரும் போது தனியா வா.. ரிவால்வர். கத்தி.. எதையாவது கொண்டு வந்தே…” என்று சொல்லி விட்டு ஒரு சிறிய இடைவெளி விட்டு ‘வராத’ என்று சொல்லும் போது அது உத்தரவு போலவே இருக்கும். பிறகு தனது தொப்பியை எடுத்து அணிந்து சடாரென்று திரும்பி நடந்து புகையை ஊதியபடியே மைக்கேல் விலகும் காட்சியில் ரஜினியின் நடிப்பு அத்தனை ஸ்டைலாக இருக்கும்.

சிவாஜி - ரஜினிகாந்த்
சிவாஜி - ரஜினிகாந்த்

ஹீரோ ஏன் கொலைப் பழியைதானே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சந்தேகம் மைக்கேலுக்கு வரும். எனவே அதை விசாரிப்பதற்காக ஹீரோவின் குடும்பத்தை தேடிச் செல்வார். அங்கு ஹீரோவின் விதவைத் தாய், நடக்க முடியாத தங்கை,  பள்ளி செல்லும் தம்பி என்று ஒரே ‘அழுவாச்சி’ காட்சிகளாக சென்டிமென்ட் இறைபடும். அதைக் கண்டு மைக்கேல் உணர்ச்சிவசப்படுவான்.

அந்தப் பெண் தன்னை ‘அண்ணா’ என்று அழைப்பது வேறு மைக்கேலை நெகிழ வைத்து விடும்.  ‘அழுகைக் காட்சிகளில்’ நடிப்பதென்பது ரஜினிக்கு ஒத்து வராத விஷயம். எனவே முகத்தைத் துடைத்து மறைத்து எப்படியோ ஒப்பேற்றி விடுவார்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
'உன்னை நான் அறிவேன்..' குணாவின் நிஜ 'அபிராமி' ரேகா நடித்த ரோஸி தான்..!

பிறகு கம்பீரமாக எழுந்து ‘ஐ ஆம் மைக்கேல் டிசோசா.. Am a true christian.. மனித குலத்திற்கு நல்ல வழியைக் காட்டறதுக்காக தன் ரத்தத்தையே சிந்தின என்னோட தேவன் மீது ஆணையா சொல்றேன்… உங்க அண்ணன் நல்லபடியா திரும்பி வரணும்.. மறுபடியும் நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கணும்.. அதுக்காக என் ரத்தத்தையே நான் சிந்துவேன். இது சத்தியம்’ என்று தங்கையின் தலைமீது கை வைத்து சபதம் ஏற்பான் மைக்கேல். அப்போதே தெரிந்து விடும், இந்தப் பாத்திரத்திற்கு ஏதோ ஆகப் போகிறதென்று. 

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தன்னுயிரைத் தியாகம் செய்து ஹீரோவைக் காப்பாற்றும் மைக்கேல்

காட்டாறுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் கொலையாளியைச் சந்திக்கச் செல்வான் மைக்கேல். அவன் அணிந்திருக்கும் ஆடையும் தோரணையும் அத்தனை ஸ்டைலாக இருக்கும். பணத்தை எடுக்கப் போகும் மைக்கேலை தடுக்கும் வில்லன் “ரவி எங்க?” என்று கேட்க, வலது  கையை சட்டென்று நீட்டி ‘லுக் ..கார் சவுண்ட்’ என்று சொல்லுமிடத்தில் ரஜினியின் உடல்அசைவு சிறப்பாக இருக்கும். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 19 |கொடுமைக்கார மனைவி ‘பொன்னாத்தா’வாக வடிவுக்கரசி!

தான் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியின் மூலம் மைக்கேலை வில்லன் சுட்டு விடுவான். வயிற்றில் மூன்று துப்பாக்கிக் குண்டுகளை வாங்கும் மைக்கேலுக்கு தன்னுடைய மரணம் சில நிமிடங்களில் நிகழும் என்பது தெரிந்து விடும். அதற்குள் ஹீரோவை நிரபராதி என்று நிரூபித்து விட வேண்டும் என்பதற்காக பரபரப்பார்.

கொலையாளியான வில்லன் அந்த இடத்திலிருந்து தப்பித்து நகர்ந்து  விடக்கூடாது என்பதற்காக, மெல்ல மெல்ல தன் நினைவை இழந்து கொண்டிருக்கும் தருணத்திலும் விழிப்பாக இருந்து துப்பாக்கியை நீட்டிய படி வில்லனை கண்காணிக்கும் காட்சி சிறப்பான சஸ்பென்ஸ் முறையில் அமைக்கப்பட்டிருக்கும். பிறகென்ன? போலீஸ் வந்ததும் மரண வாக்குமூலம் தந்து ஹீரோவைக் காப்பாற்றிய பின் மைக்கேலின் தலை கீழே சரியும்.

ரஜினி இந்தப் படத்தின் இறுதியில் சில காட்சிகளில் மட்டும்தான் வந்திருப்பார். ஆனால் படம் முடியும் போது ஹீரோ உட்பட அனைவரும் மறந்து ‘மைக்கேல் டிசோசா’ என்கிற பாத்திரம் மட்டுமே மனதில் நிறைந்திருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு வித்தியாசமான ஸ்டைலை செய்தபடியே இருப்பார் ரஜினி. இந்த அசைவுகளை எல்லாம் பார்த்தால் இன்றைய சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கான விதையை அன்றே நட்டிருக்கும் ரஜினியின் மெனக்கிடல்கள் தெரியும். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்
“நின்னு ஜெயிக்கறதுதான் பெருமை” - பாசிட்டிவ்வான பாதையை மாணவர்களுக்கு சொன்ன நல்லாசிரியர் ‘பிரேம்’!

சிவாஜியின் நடிப்பு, இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை, சுவாரசியமான திரைக்கதை என்று இந்தப் படத்தில் பல விஷயங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஓவர்டேக் செய்து ‘மைக்கேல் டிசாசோ’ என்கிற பாத்திரத்தை மறக்க முடியாதபடி செய்து விட்டார் ரஜினிகாந்த்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com