Trump adviser Peter Navarro says Russia-Ukraine is 'Modi's war'
pm modi, trump, Peter Navarropt web

தொடர்ந்து குறிவைக்கப்படும் இந்தியா.. அமெரிக்கா செய்யும் அரசியல் என்ன? வெடித்த புதிய சர்ச்சை

இந்தியா–அமெரிக்கா உறவு வர்த்தகப் பின்னணியில் தொடர்ந்து பதற்றமான சூழலை எட்டி வருகிறது. இதற்கு வரிவிவகாரம், வௌிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் ஜியோபாலிடிக்ஸ் சார்ந்த திட்டவட்டமான காரணங்கள் இருக்கின்றன.
Published on
Summary

இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகள் சீரற்ற நிலையில் உள்ளன. அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால், இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய தொழில்துறையினர் கவலையில் உள்ளனர். பிரதமர் மோடி இந்திய தொழில்துறையினரை பாதுகாக்க உறுதியளித்துள்ளார்.

இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவு தொடர்ந்து சீரற்ற சூழலை எட்டி வருகிறது. இதற்கு வரிவிவகாரம், வெளிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் புவி அரசியல் சார்ந்த திட்டவட்டமான காரணங்கள் இருக்கின்றன.

donald trump tells do not to hire indians
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

முதலில் வரிவிவகாரம்..

இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா அரசு விதித்துள்ள  25 விழுக்காடு கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வந்திருப்பதால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த அதீத வரியால் இந்தியப் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் மற்ற பொருட்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, இந்தியாவை விட குறைவு. இதனால்,வர்த்தக போட்டிகளும் மிகவும் அதிகம். இது இந்திய தொழில்துறையினர், ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு பணியாமல் இந்திய தொழிற்துறையினரை அரசு பாதுகாக்கும் என பிரதமர் மோடி ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.

Trump adviser Peter Navarro says Russia-Ukraine is 'Modi's war'
SIR | பாஜக வாக்காளர்களுக்கும் சிக்கலா? அடுத்தடுத்த திட்டங்களில் மும்முரமாகும் NDA கூட்டணி!

இந்தியா பாகிஸ்தான் அமெரிக்கா

அடுத்தது இந்திய பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு.. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.பாகிஸ்தானின் ராணுவ தளபதி முனீர் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவருக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் முனீர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில், அதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என பேசப்பட்டது.

pakistan army chief asim munir
அசிம் முனீர்எக்ஸ் தளம்

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதேவேளை பாகிஸ்தானில் மக்களாட்சி எனும் பெயரில் மாதிரி ஆட்சியே நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முனீரை அழைத்தது பாகிஸ்தானில் உச்சக்கட்ட அதிகாரம் அனைத்தும் ராணுவத்திடம்தான் இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் வகையில் ஆகிறது. அதேசமயம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்ற இந்தியாவின் பரப்புரைக்கும் பலனில்லாமல் ஆகிறது.

Trump adviser Peter Navarro says Russia-Ukraine is 'Modi's war'
SIR | பிகார் அரசியலை மாற்றி எழுதுகிறதா... ராகுல் அறுவடை செய்யப்போவது என்ன?

அடுத்தது, ராணுவத்தளபதியான முனீர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி என இருவரையும் ஒரே தரத்தில் பார்க்கும் விதமாக ட்ரம்ப் நடந்துகொள்வது இந்தியாவை அவமதிக்கும் செயல் என்கின்றனர் விமர்சகர்கள். மூன்றாவதாக, ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வாங்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்துவதும் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதற்கான காரணம் என்கின்றனர்.

அடுத்த சர்ச்சை

Peter Navarro
Peter Navarro

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒன்று இணைந்திருக்கிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு அளித்திருக்கும் நேர்காணல் ஒன்றில், ரஷ்யா-உக்ரைன் மோதலை "மோடியின் போர்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது, ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதரவை இந்தியா வழங்கி வருகிறது. எனவே இந்தப் போர் மோடியால் ஏற்பட்டது என்று அவர் விமர்சித்துள்ளார். இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 50% வரி விகிதம் அமலுக்கு வந்த நாளில் நவரோவின் கருத்தும் வந்திருக்கிறது.

Trump adviser Peter Navarro says Russia-Ukraine is 'Modi's war'
மூக்கில் உருவான தோல் புற்றுநோய்.. ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கம்!

ரஷ்யாவிலிருந்து இந்தியா செய்யும் இறக்குமதிகளே உக்ரைன் – ரஷ்யா போரை ஊக்குவிப்பதாக நவரோ குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, "குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம், இந்தியா ரஷ்யாவுக்கு உதவுகிறது; அதே நேரத்தில் அமெரிக்காவிற்கு தீங்காக உள்ளது. காரணம், அமெரிக்காதான் உக்ரைனின் பாதுகாப்புக்காக நிதி செலவிட வேண்டி வருகிறது" என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக பீட்டர் நவரோ, இப்போரை மோடியின் போர் என வர்ணித்திருக்கிறார். மேலும், இந்தியாவின் செயல்களின் காரணமாக “அமெரிக்காவில் அனைவரும் இழப்பை சந்திக்கின்றனர்” என்றும் நவரோ குற்றம்சாட்டினார்.

உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர்pt web

நவேரா இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். “இந்த விவகாரத்தில் இந்தியர்கள் இவ்வளவு ஆணவமாக நடந்துகொள்வதுதான் எனக்கு கவலையளிக்கிறது. நாங்கள் அதிக வரிகளை விதிப்பதில்லை என்கிறார்கள். விரும்புபவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம் என்கிறார்கள். இந்தியா, நீங்கள்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், சரியா? அப்படியென்றால், ஒரு ஜனநாயக நாடு போல் நடந்துகொள்ளுங்கள்.” என அவர் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Trump adviser Peter Navarro says Russia-Ukraine is 'Modi's war'
Madras Day | “சென்னையில் சாதிய சொல்வதற்கே அஞ்சுவாங்க; இங்க நிலைமையே வேறு” - கரன் கார்க்கி நேர்காணல்

இந்தியா மட்டும்தான் வாங்குகிறதா?

உக்ரைன் மீது போர் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எண்ணெய் வர்த்தகம்தான் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது. உக்ரைன் போருக்கு முன்பாக இந்தியாவின் எண்ணெய் தேவையில் 2%க்கும் குறைவாக வழங்கிய ரஷ்யா, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போருக்குப் பின் 35-40% வரை எண்ணெய் வழங்குகிறது. ரஷ்யாவிடம் இருந்து நாளொன்றுக்கு சுமார் 20 லட்சம் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனை சுத்திகரித்து டீசல் மற்றும் ஜெட் எரிபொருளாக ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு இந்தியா விற்பனை செய்கிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மட்டும்தான் எண்ணெய் வாங்குகிறதா? எனில் இல்லை. சீனாவும்தான் வாங்குகிறது. ரஷ்யாவின் 70% எண்ணெயை இந்தியாவும், சீனாவும் வாங்குகின்றன. ஆனால் சீனாவை குறைவாகவும் இந்தியாவை அதிகமாகவும் ட்ரம்ப் ஏன் குறிவைக்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேசமயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமெரிக்கா எதுவும் சொல்வதில்லை.. கூடுதலாக வரிகளையும் விதிப்பதில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Trump adviser Peter Navarro says Russia-Ukraine is 'Modi's war'
பொருளாதாரத்தை நிலைநிறுத்தப்போகும் திட்டம்? மலையென நம்பும் பாகிஸ்தான்

அமெரிக்கா தாக்குவதன் 3 காரணங்கள்

இந்தியா மீதான அமெரிக்காவின் இந்த தொடர் தாக்குதல்களுக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியா ஜப்பானை முந்தி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்ததும் மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்தது, பிரிக்ஸ் அமைப்பு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது, அதன் உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்துதல், அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கிடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதுவும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக, இந்தியா, சீனா, ரஷ்யா நட்புறவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, டொனால்ட் ட்ரம்ப்
பிரதமர் மோடி, டொனால்ட் ட்ரம்ப்pt web

குறிப்பாக பிரதமர் மோடி சீனாவுக்கு செல்லவிருப்பதும், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவிருப்பதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள், இருநாடுகளுக்கும் இடையே நீண்டகால கூட்டு உறவை சோதிக்கும் நிலைக்கு கொண்டு சென்றாலும், பரஸ்பர நலன்களில் அடிப்படையாக அமைந்த ஒத்துழைப்பு, நிலைப்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தொடர்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பை பொறுத்தவரையில் அடிக்கடி மாற்றங்களை செய்யக்கூடியவர் என்பதால் இந்த நிலைப்பாட்டிலும் மாற்றம் வருமா என்று பார்க்கலாம்.

Trump adviser Peter Navarro says Russia-Ukraine is 'Modi's war'
PT Explainer | உலகின் மூன்றாவது கொடிய உயிரினம் நாய்.. ஆய்வுகள் காட்டும் தெரியாத உண்மைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com