சூடுபிடிக்கும் தேர்தல் களம்; நேற்று ஒரே நாளில் 405 பேர் வேட்புமனுத் தாக்கல்!

மார்ச் 20-ஆம் தேதியே வேட்பு மனுத்தாக்கல் தொடங்கினாலும் நேற்றுதான் அதிக அளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்
வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்pt web

போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் 22 பேரும், 21ஆம் தேதி 9 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 22ஆம் தேதி 47 பேர் வேட்புமனுக்களை செய்துள்ள நிலையில், நேற்று 405 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுக்களை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். வரும் 28ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 30ம் தேதி கடைசி நாள்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்
அனல்பறக்க போகும் நெல்லை தொகுதி! ஒரு வழியாக வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்..ஆனா மயிலாடுதுறை மிஸ்ஸிங்!

ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, மருச்சுக்கட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவிலுக்குள் வைத்து வேட்புமனு விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து வேட்பு மனு ஆவணங்களை சாமி முன்பாக வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது‌. சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் பிரசார வாகனத்தில் புறப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய ராமநாதபுரம் சென்றடைந்தார்.

ஓபிஎஸ் சாமி தரிசனம்
ஓபிஎஸ் சாமி தரிசனம்

மூன்று கிலோமீட்டர் வரை ஊர்வலமாக நடந்து வந்த டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். சாலையில் தொண்டர்கள் திரண்டதால் அடுத்தடுத்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.

கடலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் வேட்பாளர் சிவக்கொழுந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பாமக சார்பில் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் மணிவாசகன் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்
“தமிழகத்தையும், தமிழ் மக்களையும் நரேந்திர மோடி வஞ்சித்து விட்டார்” - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

வேட்பாளர் உறுதி மொழிப் படிவம் மாறியதால் அதிர்ச்சி

காங்கிரசில் இருந்து ஒரு மாத காலத்திற்கு முன்பு அதிமுகவில் இணைந்த வேதாரண்யத்தை சேர்ந்த சுர்ஜித்சங்கர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரின் வேட்பு மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ், வேட்பாளர் உறுதிமொழி படிவத்தை வழங்கினார். படிவத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாற்று வேட்பாளரின் பெயர் இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

படிவம் மாறிவிட்டது என்று அதிகாரிகள் படிவத்தை அவரிடம் இருந்து வாங்கி இவருக்கு உண்டான படிவத்தை தேடினார். தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் வெளியே ஓடி சென்று நீண்ட நேரம் போராடி அதிமுக வேட்பாளரின் உறுதிமொழி படிவத்தை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கர் உறுதிமொழியை வாசித்து கையெழுத்திட்டார்.

நாகை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா, தொண்டர்கள் புடை சூழ வந்தார். விதிமுறைப்படி ஆட்சியர் அலுவலகத்திற்கு 200 மீட்டர் முன்பாக அவர் தடுத்துநிறுத்தப்பட்ட நிலையில், கட்சிக்கு சின்னம் ஒதுக்காததை கண்டித்து கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து விவசாயி சின்னம் பொருந்திய துண்டோடு வந்த வேட்பாளரை கண்ட நிர்வாகிகள் சீமான் முகம் பொறித்த துண்டை அணிவித்து அழைத்துவந்தனர்.

சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்
சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்

தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு சுங்கச்சாவடியில் இருந்து வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தருமபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் வேட்பு மனுவை வைத்து பூஜை செய்து வழிபட்ட பின் சௌமியா, வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்
"தேர்தலில் நான் டாக்டர் பட்டம் வாங்கியவன்; 26 தேர்தல்களை சந்தித்திருக்கிறேன்" - அமைச்சர் துரைமுருகன்

சாமி தரிசனத்திற்குப் பின் வேட்புமனு தாக்கல் செய்தார் ராதிகா

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் அவரது கணவருடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் ராதிகா சாமிதரிசனம் செய்தார். அச்சமயத்தில் அதேதொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரணும் அங்கு வந்தார். இதையடுத்து, இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்து பகிர்ந்துகொண்டனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | பரஸ்பர அன்புகாட்டும் வேட்பாளர்கள் முதல் CSKvsGT போட்டி வரை!
துரை வைகோ வேட்புமனு தாக்கல்
துரை வைகோ வேட்புமனு தாக்கல்

திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமாரிடம் தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்
"பிரதமர் மோடியை பற்றி பேச முதல்வருக்கு தகுதி இல்லை" – அண்ணாமலை

ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்

ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளர் பசுபதி, மதுரையில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன், பாஜகவின் முருகானந்தம் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். உதகையில் பாஜக வேட்பாளர் எல் முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், பெரம்பலூரில் ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள்
#ElectionWithPT | 'தேர்தலில் ஓட்டு போடுவதால் மாற்றம் ஏற்படுகிறதா?' - கல்லூரி மாணவிகள் சொல்வது என்ன?

கனிமொழி வேட்புமனு தாக்கல்

இந்நிலையில் இன்றும் வேட்பாளர்கள் சிலர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளரான கனிமொழி, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com