"தேர்தலில் நான் டாக்டர் பட்டம் வாங்கியவன்; 26 தேர்தல்களை சந்தித்திருக்கிறேன்" - அமைச்சர் துரைமுருகன்

வாழ்வும் சாவும் என்னை ஒன்னும் பண்ணாது, தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான் என்று அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
Minister Duraimurugan
Minister Duraimuruganpt desk

செய்தியாளர்: ச.குமரவேல்

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்...

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் pt desk

“எனக்கு ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. கலைஞர்தான் என்னை போட்டியிடச் சொன்னார். என்னிடம் தேர்தலுக்கு பணம் இல்லை என சொன்னபோது கலைஞரும், அண்ணியாரும் பணம் கொடுத்து உதவினார்கள். ஆரம்பத்தில் ஆசை எனக்கு வரவில்லை. ஆனால் ஆசை வந்த பிறகு இந்த இடத்தில் நிலைத்து நிற்கிறேன். இன்று வரை பேசுகிறேன். ஆகையால் இப்போதும் சொல்கிறேன்... 12 முறை என்னை வெற்றி பெறச் செய்தீர்கள், 13-வது முறையும் என்னை வெற்றி பெறச் செய்வீர்கள்.

Minister Duraimurugan
”தேனியில் தோற்றால் அமைச்சர் பதவியே வேண்டாம்” - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்

வாழ்வும், சாவும் என்னை ஒன்னும் பண்ணாது. துரைமுருகன் இதில் கில்லாடி. தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான். 26 தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். ஆகையால் என்னிடம் வேண்டாம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com