இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | பரஸ்பர அன்புகாட்டும் வேட்பாளர்கள் முதல் CSKvsGT போட்டி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்pt web
  • பாஜகவிற்கு வாக்களிப்பது அவமானம் என மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று நாங்குநேரி பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை.

  • மாற்றி மாற்றி பேச திமுக காரர்கள் பச்சோந்தி இல்லை என மதுரை எய்ம்ஸ் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

  • நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ், விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் தாரகை கத்பர்ட் அறிவிப்பு.

  • திராட்சை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளதாக ஓபிஎஸ் பேட்டி. மேலும், சின்னத்தை காட்டிலும், வேட்பாளரின் நோக்கத்தை மட்டுமே மக்கள் பார்ப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - ஓ பன்னீர்செல்வம்
ஓபிஎஸ் - ஓ பன்னீர்செல்வம்புதிய தலைமுறை
  • கரும்பு விவசாயி சின்னத்தை விண்ணப்ப தேதிக்கு முன்பே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி கோரியதாக ஆர்டிஐ தகவல். முன்கூட்டியே விண்ணப்பித்தது செல்லாது எனக்கூறி மீண்டும் நீதிமன்றத்தை நாட நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளனர்.

  • வடசென்னையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய திமுக, அதிமுக வேட்பாளர்களிடையே போட்டா போட்டி. இதனால், தேர்தல் நடத்தும் அலுவலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

  • தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில், நேற்று ஒரே நாளில் 405 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

  • சென்னையில் வேட்புமனு தாக்கலின் போது ஆரத்தழுவி நலம் விசாரித்து கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை. இதேபோல, விருதுநகரில் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்ட ராதிகா - விஜய பிரபாகரன்.

தமிழச்சி - தமிழிசை | ராதிகா சரத்குமார் - விஜய பிரபாகரன்
தமிழச்சி - தமிழிசை | ராதிகா சரத்குமார் - விஜய பிரபாகரன்
  • எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை தேர்தல் பரப்புரையில் பயன்படுத்த உள்ளதாகவும், வாழ்வு கொடுத்த தலைவர்களை மறந்துவிடக் கூடாது என்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

  • நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்பு மனுத்தாக்கலின்போது தொண்டர்கள் குவிந்ததால் தடியடி நடத்தப்பட்டது. இதனால், காவல்துறை மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளதாக அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

  • மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஏன்? என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

  • திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக் கூட்டணி வைத்துள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்கோப்புப்படம்
  • கேரள மாநிலம் கொல்லத்தில் கோயில் திருவிழாவுக்கு பெண்கள் போல் வேடமணிந்து வந்த ஆண்கள் விளக்குகளை ஏந்தியபடி கோயிலை வலம் வந்து வழிபாடு செய்தனர்.

  • கடலூரில் செல்போனில் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இதில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.

  • வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளலாம் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

  • தென்காசி அருகே காவலர்களால் தாக்கப்பட்டு வேன் ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில், உடலை பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் குடும்பத்தினர் உறுதியளித்துள்ளனர்.

  • நடிகை கங்கனா ரனாவத்தை காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஷ்ரினேட் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தநிலையில் இவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
மக்களவை தேர்தல் 2024 | கங்கணா ரணாவத் To அருண் கோவில்.. பாஜக அறிவித்த நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல்
  • காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • விமானங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கேள்வி எழுந்ததால் போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

  • ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

  • பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடி. இதனால், 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றனர்.

  • டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 முறை அரை சதம் விளாசி விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதனால், நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
IPL 2024: முதல் சுற்றின் டாப் பெர்ஃபாமர்கள் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com