“தமிழகத்தையும், தமிழ் மக்களையும் நரேந்திர மோடி வஞ்சித்து விட்டார்” - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தையும், தமிழ் மக்களையும் வஞ்சிக்கும் நரேந்திர மோடி போன்ற பிரதமர் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லை என்றும், பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
CM Stalin
CM Stalinfile

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும். அதற்கு சமீபத்திய உதாரணம் மணிப்பூரில் நடந்த கலவரம்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒற்றுமையாக வாழும் இந்தியாவில் வெறுப்பு விதைகளை தூவி நாசம் செய்துவிடுவார்கள். இரண்டு இயற்கை பேரிடர் தமிழ்நாட்டை தாக்கிய நிலையில், நிவாரணமாக ஒரு பைசாவையாவது பிரதமர் மோடி கொடுத்தாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com