எல். முருகன், திருமாவளவன், வைகோ, எம்.கே. ஸ்டாலின்
எல். முருகன், திருமாவளவன், வைகோ, எம்.கே. ஸ்டாலின்pt web

செப்டம்பரில் உடைகிறதா திமுக கூட்டணி? நடப்பது என்ன?

தமிழ்நாட்டில் மேலும் பல கட்சிகளுடனும் பாஜக பேசிவருவதாகவும், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி பாஜக - அதிமுக கூட்டணிக்கு வரத் தயாராக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ்நாட்டில் மேலும் பல கட்சிகளுடனும் பாஜக பேசிவருவதாகவும், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி பாஜக - அதிமுக கூட்டணிக்கு வரத் தயாராக இருப்பதாகவும் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறி இருக்கிறார் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான எல்.முருகன்.

உடைகிறதா திமுக?

அவர் கூறுகையில், “திமுக கூட்டணியிலிருந்து பல கட்சிகள் வெளியில் வந்து, எங்களுடன் சேருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், கூட்டணியில் எதுவும் நிலைத்தன்மை கிடையாது; எது நடக்கும்? என்ன நடக்கும்? என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் இப்போது ஜூனில் இருக்கிறோம்; செப்டம்பரில் எல்லாமே தெரிந்துவிடும். நாங்கள் திமுக கூட்டணியில் குழப்பத்தையெல்லாம் ஏற்படுத்தவில்லை. ஒருவர் தயாராக இருக்கிறார்; நாங்கள் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம். யார் என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் அரசியலில் எதிர்பார்ப்பு இருக்காது இல்லையா... கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கட்டுமே..

நாங்கள் திமுக கூட்டணியில் குழப்பத்தையெல்லாம் ஏற்படுத்தவில்லை. ஒருவர் தயாராக இருக்கிறார்; நாங்கள் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அரசியலைப் பொறுத்தவரை கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுமட்டுமின்றி, நான் சொல்கிறவர் வாஜ்பாய் காலக்கட்டத்தில் எங்களுடன் கூட்டணியில் இருந்தவர்தான்” என்று தெரிவித்திருந்தார்.

எல். முருகன், திருமாவளவன், வைகோ, எம்.கே. ஸ்டாலின்
WTC 2025: போர் படைப்போர் யாரோ? போரில் வெல்வோர் யாரோ?

அதிருப்தியில் இருக்கிறதா மதிமுக

இந்நிலையில் எல். முருகன் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது விவாதமாகியுள்ளது. ஒருவேளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைக் குறிப்பிட்டு எல்.முருகன் பேசியிருப்பாரோ என்ற பார்வையுமுள்ளது. இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய மூத்த பத்திரிகையாளர் ‘துக்ளக்’ ரமேஷ் திமுக கூட்டணி வலுவாகவே இருக்கிறது எனத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “திமுக கூட்டணியிலிருக்கும் எல்லாக் கட்சிகளும் உறுதியாகத்தான் இருக்கின்றன. சில கட்சிகள் 2026 தேர்தலின்போது கூடுதல் இடங்கள் தேவை என்பதை மிக வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றன. ஆகவே, அவர்கள் அதிக இடங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

துக்ளக் ரமேஷ்
துக்ளக் ரமேஷ்

ராஜ்யசபா சீட்டை மதிமுகவிற்கு கொடுக்காததால் அக்கட்சியில் சிறு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதை துரை வைகோ வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளையில், ‘அதிருப்தி இருந்தாலும் இங்கேதான் நீடிப்போம்’ என்றும் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை முருகன் மதிமுக தங்கள் பக்கம் வரலாமென எதிர்பார்க்கிறாரோ என்னவோ? ஆனால், திமுகவின் தயவில் துரை வைகோ வெற்றி பெற்றுள்ளார். திருச்சிக்கு அவர் அறிமுகமில்லாத ஒருவர்; அங்கே அவர் தொடர்ந்து இயங்க வேண்டுமென்றால், அம்மாவட்டத்திலுள்ள திமுக முக்கியப்புள்ளிகளின் ஒத்துழைப்பு தேவை.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்தவர் வைகோ. வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் தரப்பட்டபோது, அதை வேண்டாமென்று சொல்லி செஞ்சி ராமச்சந்திரனுக்கும், கண்ணப்பனுக்கும் அதைப் பெற்றுத்தந்தார். ஆகவே, பாஜகவின் பழைய மூத்த தலைவர்களோடு அவருக்கு தொடர்பு உண்டு. இருந்தாலும், பிரதமர் மோடி வைகோவை மதிக்கக்கூடியவர். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் வைகோ மாறுவாரா என்பது கேள்விக்குறி. ஏதோ போகிற போக்கில் கொளுத்திவிட்டுப்போனாரா என்பதையும் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

எல். முருகன், திருமாவளவன், வைகோ, எம்.கே. ஸ்டாலின்
திமுக கூட்டணியை குறிவைக்கும் பாஜக... கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா ஒரு கட்சி?

சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சி

பத்திரிகையாளர் செந்தில்வேல் இதுதொடர்பாகப் பேசுகையில், “2024 பிப்ரவரி 26ல் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பாஜக அழைப்பு கொடுத்தது. அதிமுகவிலிருந்து முக்கியத்தலைவர்கள் பாஜகவில் இணையப்போகிறார்கள் எனத் தெரிவித்தது. அத்தனை பத்திரிகையாளர்களும் மாலை வரை காத்திருந்தும் இணைப்புக்கு யாரும் வரவில்லை. குறிப்பாக பாஜக தலைவர்கள் கூட அங்கு யாரும் வரவில்லை. இத்தனை பிரிவுகளாக பிரிந்து பிரச்னைகளில் இருக்கக்கூடிய அதிமுகவிலிருந்தே யாரும் வரவில்லை.. எனவே, இவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கு மாதிரி அப்படியே நடந்துவிடும் என்று நாம் நம்புவதெல்லாம் நகைச்சுவைதான். கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தால் என்ற ஆசையைத்தாண்டி வேறு எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Senthilvel |
Senthilvel |nerpadaPEsu

கொளுத்திப் போடுகிறார்கள்

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “எல்.முருகன் திருமாவளவனைச் சொல்கிறார். திமுக கூட்டணி உறுதியாகத்தான் இருக்கும். இந்தக் கூட்டணி அமைவதற்கு முன்பாக அவர்கள் அனைவரும் தோல்விகளில்தான் இருந்தார்கள்.

எல். முருகன், திருமாவளவன், வைகோ, எம்.கே. ஸ்டாலின்
"விசிகவில் இணையும் வேடன்”.. ஜூன் 14ல் காத்திருக்கும் திருப்பம்! திருமாவுடன் கைகோர்க்கிறாரா வேடன்?

மீண்டும் மீண்டும் திருமா குறிவைக்கப்படுவதன் காரணம், திமுக கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்ட்டுகளை விட அதிக வாக்குகளை பெற்றுக்கொடுக்கிறோம்; ஆனால், மற்றவர்களில் ஒருவராகத்தான் வைத்திருக்கிறார்கள் என்ற வருத்தம் விசிகவிற்கு இருக்கிறது. ஆனால், இதற்காகவெல்லாம் விசிக பாஜகவிற்குள் செல்ல வாய்ப்பில்லை. எல்.முருகன் சும்மா கொளுத்திப் போடுகிறார்” எனத் தெரிவித்தார்.

திமுக கூட்டணி உடைவதற்கு வாய்ப்பில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொன்னாலும், எல்.முருகன் சொன்னது அரசியல் அரங்கில் விவாதமாகவே நீடிக்கிறது... அவரது கூற்றுப்படியே செப்டம்பர் மாதம் வரை நேரமிருக்கிறதே.. பொறுத்திருந்து பார்க்கலாம்...

எல். முருகன், திருமாவளவன், வைகோ, எம்.கே. ஸ்டாலின்
குழந்தைப்பேறின்மைக்கு காரணமாகும் மது மற்றும் புகைப்பழக்கங்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com