சீமான் கட்சி சின்னங்கள்
சீமான் கட்சி சின்னங்கள்ட்விட்டர்

2009-ல் தொடங்கிய பயணம்..தவிர்க்க முடியாத இடத்தில் 'நாம் தமிழர் கட்சி’ - சிக்கலாகுமா சின்னம் பிரச்னை?

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் அக்கட்சி சின்னங்களைத் தேர்வு செய்தது குறித்து இங்கு பார்க்கலாம்.

சீமானின் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கீடு!

நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழா தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்துத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி) நிலவுகிறது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியைத் தவிர பிற கட்சிகள் எல்லாம் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அந்த வகையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அக்கட்சிகள் விரும்பிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதில் 4 கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம், வேறு மாநில (கர்நாடகா) கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், கடந்த தேர்தல்களில் எல்லாம் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று வந்த நாம் தமிழர் கட்சிக்கு, இந்த முறை அந்தச் சின்னம் பறிபோயுள்ளது. இதுநாள் வரை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம், வேறு மாநில (கர்நாடகா) கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டு உள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாமதமாக விண்ணப்பித்தார்கள் எனக் கூறி, அந்தச் சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்தக் கட்சி தங்களுக்குப் பிடித்த சின்னத்தைக் கேட்டு விரைவாக விண்ணப்பிக்கிறதோ, அதனடிப்படையிலேயே அந்தச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.

இதையும் படிக்க: “வழக்கு விசாரிக்கும் போதே கொண்டுவந்தது ஏன்” - CAA-க்கு எதிராக 236 மனுக்கள் - சூடிபிடித்த விசாரணை!

சீமான் கட்சி சின்னங்கள்
சின்னம் கிடைப்பதில் சிக்கல்... நாம் தமிழர் கட்சி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, ‘மக்களவை காலாவதியாவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு சின்னம் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும் என்பதும், அதிலும் முன்பு நடைபெற்ற தேர்தல்களில் ஒரு கட்சி குறிப்பிட்ட சின்னத்தை பயன்படுத்தி வாக்குகள் பெற்றிருந்தால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை (First Come First Service) என்ற அடிப்படையில், ஏற்கனவே பயன்படுத்திய கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பதும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளாக உள்ளது. மேலும், பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், நாம் தமிழர் கட்சி பிப்ரவரி மாதமும் விண்ணப்பம் செய்திருந்தன. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என தேர்தல் ஆணையத்தால் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேநேரத்தில், தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது. அதன்படி, நாம் தமிழர் கட்சிக்கு தற்போது ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியினர் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 1க்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தது. ஆயினும், வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது. அதன்படி, நாம் தமிழர் கட்சிக்கு தற்போது ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மக்களவை தேர்தல் 2024 | தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு... விருதுநகரில் விஜய பிரபாகரன் போட்டி!

சீமான் கட்சி சின்னங்கள்
மக்களவை தேர்தல் 2024 | நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு

சீமான் கட்சி முன்கூட்டியே விண்ணப்பிக்காததற்கு என்ன காரணம்?

முன்னதாக, இந்த விவகாரத்தில், வெள்ளப் பாதிப்பு பணிகள் காரணமாக, நாம் தமிழர் கட்சி மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாம் தமிழர் கட்சியும் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. எனினும் தேர்தல் தேதியை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஆட்டோ சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்தச் சின்னமும் இன்னொரு கட்சி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து படகு, கப்பல், மைக், தீப்பெட்டி, பழக்கூடை, வைரக்கல், தடி, தலைகவசம், ஜன்னல், செருப்பு, கால்பந்து, ஆப்பிள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட சின்னங்களில் ஏதாவது ஒன்றைக் கேட்டு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையிலேயே சீமானுக்கு மிகவும் பிடித்த மைக் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், வெள்ளப் பாதிப்பு பணிகள் காரணமாக, நாம் தமிழர் கட்சி மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாம் தமிழர் கட்சியும் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.

சீமான்
சீமான்புதிய தலைமுறை

சீமான் கட்சியை ஆரம்பித்தது எப்போது?

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பல பொதுக் கூட்டங்களில் பேசினார். “இரட்டை இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” எனும் வாசகத்தை எல்லாம் கூட்டங்களிலும் முன்வைத்தார்.

2009ஆம் ஆண்டு நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கிய திரைப்பட இயக்குநரான சீமான், அடுத்த ஒருவருடத்தில் அதாவது மே 18, 2010ஆம் ஆண்டு, அதை நாம் தமிழர் கட்சியாக மாற்றினார். தவிர அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். தனித் தமிழ் ஈழம் அமைப்பதே அக்கட்சியின் முதல் மற்றும் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்து தற்போதும் அந்த கருத்தை முன்னிலைப்படுத்தி வருகிறார். எனினும், கட்சி ஆரம்பித்து அதற்கு அடுத்த ஆண்டு (2011) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அக்கட்சி போட்டியிடவில்லை என்றாலும், காங்கிரஸுக்கு எதிராகக் களத்தில் குதித்தது. அப்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பல பொதுக் கூட்டங்களில் பேசினார். “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” எனும் வாசகத்தை எல்லாம் கூட்டங்களிலும் முன்வைத்தார். எனினும், அதிமுக ஆட்சி மலர்ந்தபோதும் சீமான் சொன்ன ஈழம் மலரவில்லை. அதுபோல், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தது. அதாவது, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க: கடலூரில் பாமக சார்பில் போட்டியிட மறுப்பு? வெளியான தகவலுக்கு தங்கர் பச்சான் விளக்கம்!

சீமான் கட்சி சின்னங்கள்
இளையான்குடி - ஈழம் - நாம் தமிழர்.. சீமான் 2.0!

தனித்து நின்று தேர்தலைச் சந்தித்த சீமான்

இந்த நிலையில்தான், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனியாக, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை எதிர்கொண்டது. சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். தவிர, இந்தத் தேர்தலின்போது சீமான் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். ஆம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிராக ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக வரலாற்றிலேயே முதன்முதலில் திருநங்கை வேட்பாளரைக் களமிறக்கினார். ஜெயலலிதாவுக்கு எதிராக தேவி என்ற திருநங்கை வேட்பாளர் போட்டியிட்டார். மேலும், இந்தத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தியைப் பெற்றது.

2016ஆம் ஆண்டு ஓரளவு வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி

ஆயினும், இந்தத் தேர்தலில் பெருத்த தோல்வியை அடைந்தது நாம் தமிழர் கட்சி. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதிகபட்சமாக சீமான் மட்டுமே அதிக வாக்குகளைப் (12,497) பெற்றார். அக்கட்சியால் தனித்துப் போட்டியிட்டு வெறும் 1.07 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அடுத்து, 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது. தொடர்ந்து தோல்வியைப் பற்றி கவலைப்படாத அந்தக் கட்சி மீண்டும் அடுத்து நடைபெற்ற 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது. அப்போது அக்கட்சி 3.9 சதவிகித வாக்குகளை அறுவடை செய்திருந்தது. அதாவது 2016ஆம் ஆண்டைவிடச் சற்றுக் கூடுதலாகப் பெற்றிருந்தது. மேலும் அதே ஆண்டு நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டு 3.15 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

இதையும் படிக்க: 2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்பு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி.. விசாரணை எப்போது தெரியுமா?

சீமான் கட்சி சின்னங்கள்
தமிழக தேர்தல் : 178 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி

இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!

ஆனால், இதில் இன்னொரு விஷயம் அடங்கியுள்ளது. அதாவது கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு, இந்த முறை (2019) கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போதும் நாம் தமிழர் கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. ஆனால் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாகத்தான் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்தது. அதுமுதல் அந்தச் சின்னத்திலேயே போட்டியிட்டு வந்தது நாம் தமிழர் கட்சி.

NTK Symbol
NTK Symbolpt desk

மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய சீமான் கட்சி!

எனினும், இந்தச் சின்னத்திற்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் வாக்குச் சதவிகிதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சின்னத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 6.6 சதவிகித வாக்குகளைப் பெற்று திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட ஆறு மடங்கு. மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட ஏறத்தாழ இரண்டு மடங்கு ஆகும். இந்த நிலையில்தான், தற்போதும் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம், ஒரு பெரிய தலைவலியை உண்டாக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக நாம் தமிழர் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது.

இதையும் படிக்க: ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்.. அடித்து விரட்டிய தாய், மகள்.. வைரல் வீடியோ!

’திட்டமிட்ட செயல்: தாமரை சின்னம் மீதும் வழக்கு தொடுப்பேன்’ - சீமான்

முன்னதாக கரும்பு விவசாயி சின்னம் குறித்துப் பேசிய சீமான், “கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அந்தக் கட்சி 71 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்தக் கட்சி கர்நாடகாவுக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், ஆந்திராவுக்கு கேஸ் ஸ்டவ் சின்னம் வாங்கியிருக்கிறது. ’கரும்பு விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை; அவர்களாகவே கொடுத்தார்கள் என அக்கட்சியின் தலைவரே சொல்லியிருக்கிறார். அதேநேரத்தில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களுக்குச் சேர்த்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. உண்மை என்னவென்றால், கர்நாடகாவில் இருந்து வந்தவர், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு இந்தச் சின்னம் எப்படி வந்தது தெரியுமா? தேர்தல் அறிவித்து 10 நாட்களுக்குப் பிறகு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், இந்த முறை தேர்தல் அறிவிக்கவே இல்லை. டிசம்பர் 17ஆம் தேதியே எப்படி அந்தச் சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்கள்? எனவே, திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகத்தான் இதை நான் கருதுகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் இருக்கக் கூடாது என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், ”இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாஜகவின் தாமரை சின்னத்தை முடக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ஆக்ரோஷமாக தெரிவித்தார். இதுகுறித்து அவர், “பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நிச்சயமாக இந்த தேர்தல் முடிந்தபிறகு, வழக்குத் தொடர்வேன். அதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடங்களில் இருந்து நாட்டின் தேசிய மலர் தாமரை என்பதை படித்து வருகிறோம். அதை எப்படி தேர்தல் ஆணையம் ஒரு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிக்கான சின்னமாக ஒதுக்கியது. நாம் தமிழர் கட்சிக்கு மயில் சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டபோது, ’அது தேசிய பறவை’ என்றுகூறி தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஆனால், பாஜகவுக்கு எப்படி தாமரை சின்னத்தை ஒதுக்கியது. ஒன்று தேசிய மலராக தாமரையை அறிவித்துவிட்டு, பாஜகவின் சின்னத்தை எடுக்க வேண்டும் அல்லது தாமரையை பாஜகவுக்கு சின்னமாக அறிவித்து, தேசிய மலராக பிற மலரை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்'' எனக் கூறினார்.

இதையும் படிக்க: AIமூலம் எடிட்; வைரலான இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோ! 100000 யூரோ நஷ்டஈடு கேட்டு வழக்கு

சீமான் கட்சி சின்னங்கள்
”தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியது ஏன்? வழக்கு போடுவோம்” - சீமான் குற்றச்சாட்டு

சீமானின்  பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!

ஆனால் சீமானின் பேச்சுக்கு அப்போதே பாஜக பதிலடி கொடுத்திருந்தது. இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “நாம் தமிழர் கட்சிக்கு அவர்களுடைய சின்னம் வேண்டுமெனில் முதலில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை. ’சென்னையில் வெள்ளம் வந்துவிட்டது. அதனால் விண்ணப்பிக்க முடியவில்லை’ என்று கூறுகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்தால், கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நாம் தமிழர் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லை. இதனால் கட்சி சின்னத்தை புதுப்பித்தலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். நாம் தமிழர் அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி விண்ணப்பிக்கக் கூடாது என்று நான் தடுக்கவில்லை. வேறொரு கட்சி விண்ணப்பித்து கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்றுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலைputhiya thalaimurai

அண்ணாமலைக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இதற்கு முன்பு ஒதுக்கப்பட்ட சின்னம் ஒதுக்கப்படாததற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரிதான். இத்தனை ஆண்டுக்காலமாக தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சி ஏன் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் நியாயமாக சீமான் மீது கோபப்பட வேண்டும். ஒரு கட்சியின் தலைவர், அவருடைய சின்னத்துக்காக விண்ணப்பிக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. எனவே, சீமான் உண்மையைத் தெரிந்து பேச வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாமல், சின்னத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டால், தேர்தல் ஆணையம் எப்படி சின்னம் ஒதுக்கும்'' என பதிலடி கொடுத்திருந்தார்.

இதையும் படிக்க: ’1 லட்சம் தராவிட்டால் கிட்னி விற்கப்படும்’- இந்திய மாணவர் கடத்தல்; அமெரிக்காவில் தொடரும் சம்பவங்கள்!

சீமான் கட்சி சின்னங்கள்
”என் சின்னத்தை பறிப்பதற்கு பின் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது; எனக்கு நெருக்கடி கொடுக்கவே..” – சீமான்

’சீமான் எங்களுடன் கூட்டணி வைத்தால் சின்னத்தில் வாய்ப்பு’

இதற்கிடையே கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்ட கட்சியோ, ’சீமான் தங்களுடன் கூட்டணி வைத்தால் விவசாயி சின்னத்தை தரத் தயாராக உள்ளோம்’ எனத் தெரிவித்திருந்தது. இதுகுறித்து பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார், “நாம் தமிழர் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்தால் அந்த வேட்பாளர்களுக்கு நாங்கள் விவசாயி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம். நாங்கள் முறைப்படி 11 மாநிலங்களில் இந்த சின்னத்தை கேட்டு முன்கூட்டியே விண்ணப்பித்த காரணத்தால்தான் எங்களுக்கு அது கிடைத்தது.

சீமான் சொல்வது போல் நாங்கள் சதி செய்து இதை பெறவில்லை. முறையான ஆவணங்களை வைத்து தேசிய கட்சி என்ற அளவிற்கு நாங்கள் ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து சான்றிதழ் பெற்றுள்ளோம். எங்களுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து சீமான் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டிடுவேன். 40 தொகுதிகளிலும் சின்னத்தை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். கடந்த காலங்களில் எங்களது கட்சிக்கு குறைவான வாக்குகள்தான் பெற்றுள்ளோம். ஆனால் வரும் காலங்களில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ’எதுக்கு தேர்தல நடத்திகிட்டு.. ஜனநாயகமா இது’-கட்சி வங்கி கணக்குகள் முடக்கம்; காங். தலைவர்கள் ஆதங்கம்

சீமான் கட்சி சின்னங்கள்
EXCLUSIVE| “நாம் தமிழர் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்தால்..”- மக்கள் ஐக்கிய கட்சி மாநில தலைவர் பேட்டி

யார், யாருக்கு ஆபத்தாக மாறப்போகிறார்கள்?

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியாக 6 சதவீதம் வாக்குகள் வாங்கி வருகிறது. அதனால் தான் அந்தக் கட்சியை கூட்டிக்குள் கொண்டு வர திமுக, அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் போட்டா போட்டி போட்டன. பாமக எந்தக் கூட்டணிக்கு சென்றாலும் அவர்களுக்கு பலம் கூடுதல் ஆகும். ஆனால், நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை பிரச்னையே வேறு. நாம் தமிழர் கட்சியும் கிட்டதட்ட தற்போது 5 - 6 வாக்குகள் வாங்கும் நிலையில் இருக்கிறது. ஒருவேளை இந்த முறை கூடுதலாக கூட வாங்கலாம். ஆனால், இந்த வாக்குகள் யாருடைய வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் கடந்த முறை தினகரன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிறைய இடங்களில் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தது. வெற்றி பெறும் அளவிற்கு அவர்களுக்கு இன்னும் பலம் இல்லை என்றே தோன்றுகிறது. அந்த வகையில் இந்த தேர்தலில் யார் யாருடைய வெற்றி தோல்வியை நாம் தமிழர் வேட்பாளர்கள் பறிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இருப்பினும் இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் கடந்த தேர்தலை விட அவர்கள் எவ்வளவு வாக்குசதவீதம் கூடுதலாக வாங்கப்போகிறார்கள் என்பதுதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com