”என் சின்னத்தை பறிப்பதற்கு பின் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது; எனக்கு நெருக்கடி கொடுக்கவே..” – சீமான்

"உறுதியாக கரும்பு விவசாயி சின்னம் எனக்கு தான் கிடைக்கும். தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தை வைத்தே தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
seeman
seemanpt desk

செய்தியாளர்: ஆர்.முருகேசன்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ள நிலையில், தனித்துப் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்த முதல் கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியபோது,

"என் சின்னத்தை பறிப்பதற்கு பின் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் வலிமையும் ஆற்றலும் என்னிடம் உள்ளது. கரும்பு விவசாயி சின்னம் எனக்கு தான் வரும், எங்கே சென்று விடும். சட்டப்படி, விதிமுறைகள் படி பார்த்தால் எனக்கு தான் அந்த சின்னம் வர வேண்டும். எனக்கு தேர்தல் அறிவித்து ஒரு வாரம் கழித்து தான் சின்னம் கொடுத்தார்கள். எனக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் தற்போதே அந்த கட்சிக்கு என் சின்னத்தை கொடுத்துள்ளார்கள்.

NTK Symbol
NTK Symbolpt desk

நீதிமன்றம் உறுதியாக எனக்கு தான் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கும்!

நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் நான் வருகின்ற செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இது முற்றுபெற வேண்டும். இதே போன்று இன்னொருவர் பாதிக்கப்படலாம். நீதிமன்றம் உறுதியாக எனக்கு தான் அந்த சின்னத்தை கொடுக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. அதனால் அந்த சின்னத்தை வைத்து தொகுதிகளில் வேலை பார்த்து வருகிறோம். இதுவரை நாம் தமிழர் கட்சி 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறோம். எனக்கு தான் முன்னுரிமை கொடுக்கணும், கொடுப்பார்கள்.

கர்நாடகாவை சேர்ந்த அந்த கட்சி கேட்காமலேயே தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

நான் கூட்டணி என்கிற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்!

39 பாராளுமன்ற உறுப்பினர்களை திமுக கூட்டணி தான் வைத்துள்ளது. ஆனால், அவர்களுக்கே தொகுதிகளில் இருக்கும் பிரச்னை தெரியவில்லையென்றால் எதற்கு எம்பி. என்னை நம்பி நிற்கும் பிள்ளைகள், நான் தனித்து நிற்பதால் தான் என்னுடன் நிற்கிறார்கள். நான் கூட்டணி என்கிற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்.

cm stalin
cm stalinpt desk

புதுச்சேரி, தமிழ்நாட்டில் எனக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க எந்த பிரச்னையும் இருக்காது!

என்னுடைய விழுக்காடு 7 சதவீதம் இல்லை. என்னை பாஜகவின் பி அணி என திமுக பிரச்சாரம் செய்து எனக்கு வாக்குகள் விழாமல் செய்து விட்டது. மற்ற கட்சிகளுடன் நான் கூட்டணி வைத்தால் எனக்கு 0.7 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது. புதுச்சேரி, தமிழ்நாட்டில் எனக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க எந்த பிரச்னையும் இருக்காது. இன்று இருக்கும் அறிவியல் தொழில் நுட்பத்தில், வேறு சின்னத்தில் நிற்பதும் சிக்கல் இல்லை. இன்றைய காலத்தில் என் சின்னம் என்னவென்று கேட்டு வாக்களிக்கும் நிலை இருக்கிறது.

100 விழுக்காடு செய்த சாதனைகளை திமுக வெளியிட வேண்டும்!

மேகதாதுவில் அணை கட்டவிடக் கூடாது. மண்ணின் மக்களின் உரிமை பறிபோகப் போகிறது. பிறகு எதற்கு திமுக, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தது. 3 வருடம் ஆட்சியை இழுத்துப் பிடித்து கொண்டு சென்றது தான் திமுகவின் ஆட்சி 100 விழுக்காடு செய்த சாதனைகளை திமுக வெளியிட வேண்டும். நாங்கள் தயாராக இருக்கிறோம். கூட்டணி முடிவு செய்துவிட்டு தான் தேர்தல் அறிவிப்பார்கள். அறிவித்தவுடன் நாங்கள் எங்கள் 40 தொகுதி வேட்பாளர்களை அறிவிப்போம். கருப்புச் சட்டையுடன் இருந்தால் திட்டுகிறார்கள். படத்தில் நடிப்பதற்காக இந்த கெட்டப்பில் உள்ளேன்.

PM Modi
PM Modifile

பிரதமர் பஞ்சாப் கோவிலுக்கு செல்வார், விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல மாட்டார்!

துரைமுருகனிடம் யூ-டியூப் வீடியோக்களை கேட்டுள்ளார்கள். கொடுத்து அவர்களை பார்த்துவிட்டு subscribe செய்யச் சொல்ல சொன்னேன். மற்ற கட்சியினர் யாருக்கு பொறுப்பு கொடுத்தால் என்ன அது குறித்து நாம் கருத்து சொல்லக் கூடாது. எந்த போராட்டத்தையும் தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. பிரதமர் பஞ்சாப் கோவிலுக்கு வேண்டுமென்றால் செல்வார், விவசாயிகள் போராட்டத்திற்கு செல்ல மாட்டார். அவர்கள் கோவில் அருகிலேயே இருப்பார்கள் நாங்கள் குடிசை அருகிலேயே இருப்போம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடைவெளி அதிகம்.

அதிமுக மாவட்டச் செயலாளர் மகனுக்கு திமுக மாவட்ட செயலாளர் மகளை கட்டிக் கொடுக்க முடியுமா? மிகப்பெரிய அரசியல் தீண்டாமை தமிழ்நாட்டில் நிலவுகிறது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com