இளையான்குடி - ஈழம் - நாம் தமிழர்.. சீமான் 2.0!

தமிழ்நாட்டு அரசியல்ல, தன்னோட பேச்சாற்றலாலும், தலைமைப்பண்பாலும் மட்டுமே ஒரு தனிப்பெரும் அரசியல் தலைவரா மாறியிருக்கூடிய ஒரு நபர்னா அது நாம் தமிழர் கட்சியோட ஒருங்கிணைப்பாளர் சீமான்னுதான் சொல்ல முடியும்.
seeman
seemanfile image

இளமைக்காலம்..

இந்த நாள்ல தன்னோட 57வது வயசுல அடி எடுத்து வச்சிருக்க சீமானோட, வாழ்க்கை பயணத்த 5 அத்தியாயமா பிரிச்சு ஒன்னு ஒன்னுத்தையும் முழுமையா பார்க்கலாம்.

முதல்ல இளமைக்காலம்..

சிவகங்கை மாவட்டம் அரணையூர் அப்டின்னு சொல்லக்கூடிய சின்னஞ்சிறு கிராமத்துல 1966ல பிறந்த சீமான், தன்னோட சொந்த ஊர்லயே School education அ முடிச்ச அவரு, இளங்கலை பொருளாதாரம் படிச்சாரு.. அத தொடர்ந்து, சினிமா மேல இருந்த ஆர்வத்துல 1991வது ஆண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாரு சீமான்.

சீமானும்.. சினிமாவும்..

சென்னைக்கு வந்த புதுசுல வாய்ப்புகளுக்காக தேடி அலஞ்சு, பாரதிராஜா, மணிவண்ணன் மாதிரியான லெஜண்ட் டைரக்டர்களுக்கு உதவி இயக்குநரா வேல செஞ்சாரு.. அததொடர்ந்து, பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி மற்றும் வாழ்த்துக்கள் போன்ற படங்கள எடுத்த அவரு, ஒருகட்டத்துல டைரக்‌ஷன கைவிட்டு திரைப்படங்கள்ல நடிக்க மட்டும் செஞ்சாரு.. அதுல குறிப்பிடத்தக்க படங்களாக இருக்குறது மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் போன்றவை..

அரசியல் ஆர்வமும்.. திராவிட மேடைகளும்..

சினிமாவ தொடர்ந்து, அரசியல்லயும் ஆர்வம் காட்டத்தொடங்கிய சீமான், தொடக்க காலத்துல திராவிட கொள்கைகள அதிகமா பேசுனாரு.. கடவுள் மறுப்புக் கொள்கை, சாதி ஒழிப்பு, நாத்திகம்னு பேசிட்டு வந்த சீமான், 2007க்கு அடுத்தபடியா தமிழீழ கொள்கைகள அதிகமா பேச ஆரம்பிச்சாரு..

இலங்கையில, போர் சூழல் தீவிரமாகிட்டு வந்த நேரத்துல, ஈழத்தமிழர்கள் மேல நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சும் தீவிரமா பேச ஆரம்பிச்சாரு. 2006ல திமுகவுக்கு ஆதரவா பிரச்சாரம் பண்றது, திமுக தலைவரா இருந்த கருணாநிதி மேல பற்றுகொண்டிருந்த சீமான், இலங்கை போருக்கு அப்புறமா அப்படியே ஆப்போசிட் ஸ்டேண்ட் எடுத்தாரு. தமிழீழ போர்ல, தமிழர்களுக்கு திமுகவும், மத்தியில ஆட்சியில இருந்த காங்கிரஸும் துரோகம் செஞ்சிட்டதா குற்றம்சாட்டவும் செஞ்சாரு.

மேடைகள்ல உணர்ச்சிப்பொங்க பேசுன சீமானோட அரசியல் வாழ்க்கையையே மாத்தின ஒரு மேடன்னா அது, 2008ல ராமேஸ்வரத்துல நடந்த பொதுக்கூட்ட மேடைதான்.. மேடையில உணர்ச்சிப்பொங்க பேசின சீமான், தமிழ் தேசியம் பிறந்துடுச்சு.

‘புரட்சி எப்போதும் வெல்லும்.. அதை நாளை வெல்லும் தமிழீழம் சொல்லும்’னு பேசினாரு.. அந்த பேச்சுக்காக தேசிய பாதுகாப்பு சட்டத்துலயும் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டாரு.. அதற்கு அடுத்தடுத்த காலகட்டத்துலயும் தன்னோட பேச்சுக்காக தேசிய பாதுகாப்பு சட்டத்துல கைதானாரு..

அரசியல் கட்சியும்.. அதிமுக ஆதரவும்..

இதுதான் சீமான் அரசியலுக்கு வர சரியான நேரம்னு முடிவு பண்ண அவர் கூட இருந்தவங்க, 2009ல சீமான, நாம் தமிழர் இயக்கத்த உருவாக்க வச்சாங்க. இந்த இயக்கத்த அடுத்த வருஷமே மே மாதத்துல நாம் தமிழர் கட்சியா மாற்றினாரு சீமான். அந்த நேரத்துல தமிழ் ஈழம், தமிழ் தேசிய அரசியலாகவும் மாறினது.

இலங்கை போர் முடிவடஞ்ச நேரத்துல, திமுகவுக்கும், குறிப்பா காங்கிரஸுக்கும் எதிரா தேர்தல் களத்துல இறங்கி பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சாரு சீமான். 2011, 2014 தேர்தல்கள்ல திமுக காங்கிரஸுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் பரப்புரைய மேற்கொண்டாரு. குறிப்பா, இலை மலர்ந்தா, ஈழம் மலரும் அப்டின்ற முழக்கத்தையும் 2014 நாடாலுமன்ற தேர்தல்ல முன்வச்சாரு.

seeman
காஸாவின் முக்கியப் பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

தனிப்பெரும் கட்சியாக மாறிய நாதக..

ஒரு கட்டத்துல யார நம்பியும் பிரியோஜனம் இல்லன்னு முடிவு பண்ண சீமான், தமிழ் தேசிய அரசியல தீவிரமா பேச ஆரம்பிச்சு, தமிழ்நாட்ட தமிழன் தான் ஆளணும்னு 2016ல நடந்த தேர்தல்ல போட்டியிட்டாரு.. அப்போ 234 தொகுதியிலயும் தனிச்சே களம் கண்டுச்சு நாம் தமிழர் கட்சி. அதோட 1.1 சதவீத வாக்குகளையும் பெற்றாங்க. எந்த இடத்துலயும் யாரும் ஜெயிக்கிலனாலும், 2019ல நடந்த தேர்தல்லையும் தனிச்சே களம்கண்டாரு சீமான். குறிப்பா, 40 நாடாளுமன்ற தொகுதிகள்ல, 20ல பெண்கள், 20ல ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டாங்க.. அப்போ அந்த vote percentage 3.87 ஆ மாறிச்சு.. சீமான் மேல பொதுமக்களுக்கு இருந்த மதிப்பும் கூடிச்சு.. எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் அமையாத வரவேற்பு சமூகவலைதளங்கள்லையும், பொதுக்கூட்ட மேடைகள்லயும் கிடச்சது.

மேடைக்கு கீழ இருக்கவங்க எப்படி பந்தல் இல்லாம இருக்காங்களோ, நானும் அப்படித்தான் இருப்பேன்னு, பந்தல் அமைக்காம கொட்டும் மழையிலயும் நின்னு பேசிட்டு வந்தாரு சீமான். முக்கியமா, மழ பெஞ்சாலும், கலையாம நின்னு சீமானோட பேச்ச கேட்க ஆரம்பிச்சது மக்கள் கூட்டம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், ஜிஎஸ்டிக்கு எதிரான விமர்சனம் அப்டின்னு வலுவான எதிர்ப்புகள பதிவு செஞ்ச சீமான், 2021 தேர்தல்லயும் தனிச்சே களம் கண்டாரு.

seeman
16 நாளில் ரூ.525 கோடி..12 நாளில் ரூ.540 கோடி..ஜெயிலரை முந்துவதில் லியோவுக்கு என்ன சிக்கல்? ஓர் அலசல்

அப்போ, இருக்குற 234 தொகுதிகள்லயும் 117 தொகுதியில பெண் வேட்பாளர்கள், 117 தொகுதிகள்ல போட்டியிடவச்சு, பெரிய மாற்றத்தையே கொண்டு வந்தாரு சீமான். மொத்த தொகுதிகள்லயும் நாதக உறுப்பினர்கள் தோத்தாலும், வாக்கு வங்கி 30 லட்சமா மாறிச்சு.. வாக்கு சதவீதம் 6.8 சதவீதமா மாறினது. வாக்குகள வச்சி பார்க்கும்போது தமிழ்நாட்டோட மூன்றாவது பெரிய கட்சியாகவும் மாறிச்சு சீமானோட நாதக.

எழுவர் விடுதலைக்காக போராடினது, இயற்கை விவசாயம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, காவிரி நதிநீர் உரிமை, முல்லைப்பெரியாறு, ஸ்டெர்லட்டுன்னு மக்கள் பிரச்சனைகள முன்வச்சி போராட்டத்த தொடர்ச்சியா நடத்திட்டு வர்ற சீமானுக்கு எதிர் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் களம் எந்த மாதிர்யா இருக்கும்ன்றத பொருத்திருந்துதான் பார்க்கணும்.. ஆக மொத்தம், கட்சிய கட்டுக்கோட்பா வச்சிருக்குறதுல ஆரம்பிச்சு, தலைமைப்பண்பால தமிழ்நாட்டு அரசியல்ல தனி ஒரு தலைவரா சீமான் மாறியிருக்காருன்னுதான் சொல்லனும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com