2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்பு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி.. விசாரணை எப்போது தெரியுமா?

’2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்’ என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை
டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றைட்விட்டர்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இம்மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பிலும் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், ’இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது’ எனப் பல மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி தினேஷ்குமார் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த மார்ச் 14ஆம் தேதி ஒத்திவைத்தார். இந்த நிலையில், ’2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்’ என நீதிபதி தினேஷ்குமார் இன்று உத்தரவிட்டார். இதையடுத்து கனிமொழி, ஆ.ராசா மீதான 2ஜி வழக்கு மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை வருகிற மே மாதத்தில் இருந்து தொடங்கும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மக்களவை தேர்தல் 2024 | தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு... விருதுநகரில் விஜய பிரபாகரன் போட்டி!

டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை
“2ஜி வழக்கில் என்ன நடந்து? 9 டேப்கள் வெளியிடப்படும் அதை திமுக மறுக்கட்டும்” - அண்ணாமலை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. மேலும், இதனால் அரசுக்கு ரூ1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும் மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரியாக இருந்த வினோத் ராய் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரைக் கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இதன் தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: கடலூரில் பாமக சார்பில் போட்டியிட மறுப்பு? வெளியான தகவலுக்கு தங்கர் பச்சான் விளக்கம்!

டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை
‘காத்துல கூட ஊழல் நடக்குதா!’ 2ஜி Vs 5ஜி! லாபமா.. நஷ்டமா? யார் சொல்வது உண்மை? - ஓர் அலசல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com