மக்களவை தேர்தல் 2024 | நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சி கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போது மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சீமான், மைக் சின்னம்
சீமான், மைக் சின்னம்pt web

கடந்த சில தினங்களுக்கு முன், நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை எற்படுத்தியது. தொடந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் டெல்லி உயர் நீதிமன்றத்த்திற்கு சென்றார்கள்.

சீமான், மைக் சின்னம்
”தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியது ஏன்? வழக்கு போடுவோம்” - சீமான் குற்றச்சாட்டு

ஆனால், சாதகமான சூழல் ஏதும் இல்லாத சூழலில், எதேனும் ஒரு சின்னத்தில் போட்டியிடும் மனநிலைக்கு நாம் தமிழர் கட்சியினர் வந்துவிட்டதாக கூறப்பட்டது.

சீமான்
சீமான்

இதனிடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் ஒரு சின்னம் கேட்டால் உடனே வேறு ஒரு ஆளுக்கு அதை கொடுத்துவிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியை திட்டமிட்டு, ஒழித்து வளரவிடாமல் தடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்” என தெரிவித்திருந்தார்.

சீமான், மைக் சின்னம்
EXCLUSIVE| “நாம் தமிழர் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்தால்..”- மக்கள் ஐக்கிய கட்சி மாநில தலைவர் பேட்டி

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ட்ராக்டர் சின்னம், உழவன் சின்னம் எல்லாம் கேட்டிருந்த நிலையில், தற்போது மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com