தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்pt web

HEADLINES | தமிழகத்திற்கு 3ம் தேதி வரை மழை முதல் இஸ்ரேல் நடவடிக்கையால் காசாவில் மீண்டும் பதற்றம் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியில் தமிழகத்திற்கு 3ம் தேதி வரை மழை முதல் இஸ்ரேல் நடவடிக்கையால் காசாவில் மீண்டும் பதற்றம் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.
Published on
Summary

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், நள்ளிரவில் கரையை கடந்த மோன்தா புயல், ஆந்திராவில் கொட்டிய கனமழை, இஸ்ரேல் பிரதமரின் உத்தரவால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம், இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் டி20 போட்டி என பல்வேறு செய்திகளை பார்க்கவிருக்கிறோம்.

ஆந்திராவின் காக்கிநாடா அருகே நள்ளிரவில் கரையை கடந்தது மோன்தா புயல்... மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்று...

மோன்தா புயலால் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டிய கனமழை... சாலைகளில் ஆங்காங்கே விழுந்த மரங்களை அகற்றிய பணியாளர்கள்...

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.. 8 கிலோ மீட்டர் தொலைவு கிராம மக்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை...

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு... புழல் ஏரிக்கும் நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பும் 500 கனஅடியானது...

தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம்... பருந்து பார்வை காட்சியில் பதிவு செய்துள்ள புதிய தலைமுறை....

தலைப்புச் செய்திகள்
நீங்கள் சுற்றுலா விரும்பியா..? உலகில் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 3ஆம் தேதி வரை மழை தொடரும்... சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்... திமுக, அதிமுக உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு...

"திமுக இந்த மண்ணில் இருக்கும்வரை பாஜகவின் பகல் கனவு பலிக்காது..." வாக்குரிமையை பறிக்கும் S.I.R. பணிகளை கண்காணிக்க திமுகவினருக்கு கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவு...

வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்... அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி வலியுறுத்தல்...

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு.... புலம்பெயர் தொழிலாளர்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என கருத்து...

தலைப்புச் செய்திகள்
MELISSA | 300 கி.மீ. வேகத்தில் காற்று? 70 செ.மீ. மழை? ஜமைக்காவில் நூற்றாண்டின் மிகப்பெரும் சூறாவளி!

தமிழகத்தில் சாதி இல்லாத வேற்றுமைகளை உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்... சினிமாவில் சாதி இல்லை என்று சொன்னால் சாதி ஒழிந்துவிடுமா? என பேச்சு...

தமிழ்நாட்டில் 11ஆயிரத்து 754 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரால் பாதிப்பு... 4ஆயிரத்து 954 ஹெக்டேர் நெற்பயிர்கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு...

சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் உடனே பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்... உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை... காப்புக்காடு ராம்சார் தலத்தில் கட்டுமானம் என்பது தவறானது என தமிழக அரசு விளக்கம்...

தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் வெகுவிமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்... திருச்செந்தூர் கோயில் திருக்கல்யாண வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்...

தலைப்புச் செய்திகள்
லியோ + பென்ஸ்... இதுதான் LCU கனெக்ட்டா? | Leo | Benz

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை முடிவு செய்யும் 8ஆவது ஊதியக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்... பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...

பிகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இந்தியா கூட்டணி... குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி...

பிகார் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிவிட்டனர்... பிரதமர் மோடி, நிதிஷ்குமார் மீது ராகுல்காந்தி கடும் விமர்சனம்...

மஹாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி... கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பேரணி சென்ற விவசாயிகள்....

தலைப்புச் செய்திகள்
"யார் அடுத்த முதல்வர்?” - சித்தராமையா vs டி.கே. சிவகுமார்.. வெடிக்க தயாராகும் ‘நவம்பர் புரட்சி’?

டெல்லியில் செயற்கை மழையை உருவாக்குவதற்கான வானில் மேக விதைப்பு முயற்சி நிறைவு... எப்போது மழை பெய்யும் என டெல்லி மக்கள் எதிர்பார்ப்பு...

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் 7 புதிய, அழகான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.... ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு...

காஸா மீது ராணுவ தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவு... போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் மீறியதாக குற்றச்சாட்டு...

நெதன்யாகுவின் உத்தரவை தொடர்ந்து காஸா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்... இஸ்ரேலின் தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு....

தலைப்புச் செய்திகள்
”நாங்கள் ஆட்சி அமைத்தால் பிகாரில் கள்ளுக்கு அனுமதி” - தேஜஸ்வி கொடுத்த தேர்தல் வாக்குறுதி! | Bihar

இன்று பிற்பகல் நடைபெறுகிறது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி... பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பு...

பைசன் திரைப்படம் மிகவும் பிடித்திருந்ததாக இயக்குநர் மணிரத்னம் பாராட்டு... படத்தில் இயக்குநர் மாரிசெல்வராஜின் வேலையை கண்டு பெருமைகொள்வதாகவும் பதிவு...

ஒரே நாளில் 3 ஆயிரம் ரூபாய் குறைந்தது தங்கம் விலை... ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 88 ஆயிரத்து 600க்கு விற்பனை...

தலைப்புச் செய்திகள்
NO.1.. NO.2.. NO.3.. பேட்டர், பவுலர், ஆல்ரவுண்டர்! ஆண், பெண் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com