நீங்கள் சுற்றுலா விரும்பியா..? உலகில் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று!
2026ஆம் ஆண்டில் உலகில் சென்று பார்க்க வேண்டிய சிறந்த 25 சுற்றுலா தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உலகின் மிக பிரபலாமான பயண ஊடக நிறுவனமான லோன்லி பிளானட் வெளியிட்டுள்ளது.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே வேலை வேலை என ஓடிக்கொண்டே இருக்கிறோம்.. இதற்கிடையில் குடும்பம், குழந்தைகள் என நேரம் ஒதுக்க நினைத்தாலும் பணிசுமையின் காரணமாக முடியாமல் போகிறது.. இதனால் உடலளவில் மற்றும் மனதளவில் சேர்ந்து போய்விடுவீர்கள்.. அதனால் சில குறிப்பிட்ட நாட்களுக்கு இடையில் விடுமுறை எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்வது மனதிற்கும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.. அப்படி சுற்றுலா செல்வதென்றால் தமிழகத்தில் குறைந்த செலவில், கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம், மாஞ்சோலை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேலுர் மற்றும் சென்னையில் உள்ள சில சுற்றுலா தளங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்..
இந்தியா அளவிலும் சுற்றுலா செல்ல ஏராளமான இடங்கள் உள்ளன.. இதில் உலக அளவில் சுற்றுலா செல்லவேண்டும் என விரும்புவோருக்கு, 2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா இடங்களை தி லோன்லி பிளானட் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.. இதில் மிகவும் சிறப்பான சுற்றுலா தலங்களில் தற்போது யாழ்பாணத்தையும் சேர்த்துள்ளது..
உலக சுற்றுலா போக வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கும் ஆண்டுதோறும் குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்களுக்கும் பட்ஜட்டில் போக வேண்டுமானால் இலங்கைக்கு போகலாம்.. ஆம் வாழ்வில் ஒரு முறையாவது சென்று விட வேண்டும் என்று இந்தியர்கள் நினைக்கும் இடங்களில் இலங்கையும் ஒன்று. பழமையான கோயில்கள், கலாச்சாரம், அழகிய கடற்கரைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. இங்கு, இந்தியர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சுற்றிப்பார்க்கலாம்.
இதில் கலாசார சுற்றுலாத் தலமாக அறியப்படும் யாழ்ப்பாணம் அண்மைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்ளை ஈர்த்துள்ளது. உலக அளவில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது, இலங்கையின் வளமான கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை நமக்கு அடிக்கோடிட்டு காட்டும் விதமாக உள்ளது..
அத்துடன், நாட்டை மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலமாக அமைப்பதற்கும் இந்த அறிவிப்பு உதவும் என்றே சொல்லலாம்.. 2026ஆம் ஆண்டில் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலா இடங்களில் யாழ்ப்பாணம் தேர்வு செய்யப்பட்டதற்கு இலங்கையின் செழுமையான கலாசாரமும் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது..
மேலும் இதன் மூலம், நாட்டை சர்வதேச ரீதியில் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா தலமாக நிலைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான சிறந்த பயண இடங்கள் மற்றும் அனுபவங்களின் பட்டியலை Lonely Planet’s Best in Travel 2026 எனும் புதிய வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டியில், 2026ஆம் ஆண்டில் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை பயண நிபுணர் குழு வழங்கியுள்ளது.
உலகின் பல பகுதிகளில் உள்ள முக்கியமாக சென்று பார்க்கவேண்டிய 25 சுற்றுலாத்தலங்களும் , 25 முக்கிய சுற்றுலா அனுபவங்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் வண்ணமிகு புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் அங்குள்ளவர்களின் பயண ஆலோசனைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.
1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லோன்லி பிளானெட், உலகின் மிக நம்பிக்கைக்குரிய பயண ஊடக நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான பயண வழிகாட்டி புத்தகங்களை விற்பனை செய்திருப்பதுடன், விரிந்த டிஜிட்டல் சூழலிலும் அதன் அணுகல் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

