NO.1.. NO.2.. NO.3.. பேட்டர், பவுலர், ஆல்ரவுண்டர்! ஆண், பெண் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை!
ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ கார்ட்னர், 2025 மகளிர் உலகக்கோப்பையில் அபாரமான ஆட்டத்தால், ஒருநாள் பேட்டர், பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் டாப் 3 இடங்களை ஒரே நேரத்தில் பிடித்த முதல் வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
2025 மகளிர் உலகக்கோப்பை தொடரின் 7 லீக் போட்டியில் 6 வெற்றிகளுடன் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம்வருகிறது ஆஸ்திரேலியா.. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸ்திரேலியா அணியின் தொடர் வெற்றிக்கு ஆஷ்லீ கார்ட்னரின் பங்களிப்பு மிகப்பெரியதாக அமைந்தது..
அவர் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டிகளில் 128/5, 86/4 என்ற கடினமான நிலையிலிருந்த ஆஸ்திரேலியாவை, இரண்டு அபாரமான சதங்கள் மூலம் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். மேலும் தன்னுடைய ஆஃப் ஸ்பின் மூலம் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக விளங்கினார்..
ஒரேநேரத்தில் டாப் 3 இடம்பிடித்து சாதனை..
நடந்துவரும் உலகக்கோப்பையில் 88.33 சராசரி, 128.01 ஸ்ட்ரைக் ரேட் உடன் 265 ரன்களும், 30 சராசரியுடன் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கும் ஆஷ்லீ கார்ட்னர் ஐசிசி தரவரிசையில் புதிய சாதனையை படைத்துள்ளார்..
அவர் இரண்டு சதங்களுக்கு பிறகு ஒருநாள் பேட்டர் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார், அதேபோல ஒருநாள் பந்துவீச்சில் 3வது இடத்திலிருக்கும் அவர், ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையாக மாறி அசத்தியுள்ளார்..
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டிலும் எந்தவொரு வீரரும், ஒருநாள் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களில் டாப் 3 இடத்தை ஒரே நேரத்தில் பிடிப்பது இதுவே முதல்முறை..

