லியோ + பென்ஸ்... இதுதான் LCU கனெக்ட்டா? | Leo | Benz
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு லியோ படத்தின் Das & Co லொகேஷனை ஒத்திருக்கிறது. இதனால், லியோ மற்றும் பென்ஸ் இடையே LCU கனெக்ஷன் இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக பேசுகின்றனர்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி நடித்துவரும் படம் `பென்ஸ்'. லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் கதை எழுதியிருக்கிறார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்தப் படம் லோகேஷின் LCUவுக்குள் வரும் என முன்பே அறிவித்திருந்தனர். இப்போது இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தால், பென்ஸ் மற்றும் விஜய் நடித்த லியோ இடையே தொடர்பு உள்ளது என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். லியோ படத்தில் விஜய் பாடிய நான் ரெடிதான் பாடல் எடுக்கப்பட்டிருந்த இடம், அதாவது Das & Co படத்தின் கதையில் முக்கியமான ஒன்று. லியோ தன் தங்கை கொலை செய்யப்பட்ட கோபத்தில் இந்த Das & Co Factoryயை எரித்துவிட்டு செல்வார்.
இப்போது `பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது பாக்யராஜ் கண்ணன் பதிவிட்டுள்ள லொகேஷன், லியோ படத்தில் வரும் Das & Co போல உள்ளது எனவும், பென்ஸ் படத்திற்கும் லியோவுக்கும் எதாவது கனெக்ஷன் இருக்குமே எனவும் இப்போதே எழுத ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். இது பார்க்க அப்படி இருக்கிறதா, உண்மையிலேயே லியோ - பென்ஸ் கனெக்ட் உள்ளதா என்பதெல்லாம் படம் வரும் போதே தெரியும்.

