மழை, தவெக தலைவர் விஜய்
மழை, தவெக தலைவர் விஜய்pt web

HEADLINES | 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு முதல் மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகளில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை வரையிலான செய்திகள் இடம்பெற்றுள்ளன.
Published on

தமிழகத்தில் விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை... சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் தீபாவளி விற்பனை பாதிப்பு...

கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கைpt web

சென்னையில் கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் மழை... புறநகர் பகுதிகளிலும் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்...

வரும் 18 மற்றும் 24ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்... வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி...

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு... ஆரணி அருகே மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்த சோகம்...

மழை, தவெக தலைவர் விஜய்
ரஷ்ய போரில் கட்டாயப்படுத்தப்பட்ட கணவர்.. மீட்கக் கோரி அமைச்சருக்கு ஹைதராபாத் பெண் கடிதம்!

பல்கலைக்கழக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விவகாரம்... தமிழக ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...

கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமர் ஹரினி அமரசூர்யாவிடம் பேச வேண்டும்... பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

pt

கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம்... உச்ச நீதிமன்ற உத்தரவுபடி விசாரணையை தொடங்க சிபிஐ அதிகாரிகள் குழு கரூருக்கு இன்று பயணம்...

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்... சென்னையின் பல்வேறு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வணிக வீதிகளில் குவிந்த மக்கள்... புத்தாடை, பட்டாசுகள் மற்றும் இனிப்புகளை வாங்க ஆர்வம்...

மழை, தவெக தலைவர் விஜய்
பாகிஸ்தான் | வெடித்த வன்முறை.. TLP கட்சி முடக்கம்.. பஞ்சாப் அரசு நடவடிக்கை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே... தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்...

டிசம்பர் 15ஆம் தேதி முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்... சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு...

pt web

ஜாமீனில் வெளிவந்த மாவட்ட செயலாளர்களுடன் விஜய் சந்திப்பு... பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆலோசனை...

நடிகர் ரஜினிகாந்துடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு... மகன் ஓ.பி.ரவிந்திரநாத்துடன் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியீடு...

அசாதாரணமான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்... சிபிஐக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்...

மழை, தவெக தலைவர் விஜய்
மடகாஸ்கர் Gen Z போராட்டம் | தப்பியோடிய அதிபர்.. ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்!

ஆந்திராவில் 13 ஆயிரத்து 430 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்... இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்...

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தவிர 16 அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா... புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் நிலையில் முடிவு...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாpt web

சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே பிஹார் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்போம்... தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் அமித் ஷா புதிய தகவல்...

பிஹார் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு... இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியாத நிலையில் வேட்பாளர்களை அறிவித்து வரும் காங்கிரஸ்...

மழை, தவெக தலைவர் விஜய்
கூகுள் நிறுவனம் ஆந்திராவிற்குச் சென்றது ஏன்? தங்கமணி கேள்விக்கு டி.ஆர்.பி.ராஜா பதில்!

ஹங்கேரி தலைநகரில் அடுத்த வாரம் புடினை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்... உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பாக தொலைபேசியில் ஆலோசித்த நிலையில் நேரில் சந்திக்க முடிவு...

அமெரிக்கா சென்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி... புடினுடன் ட்ரம்ப் ஆலோசித்த நிலையில், இன்று சந்தித்து முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க திட்டம்...

donald trump revoked over 6000 visas
டொனால்ட் ட்ரம்ப்pt web

காஸாவில் உள்நாட்டு வன்முறைகள் தொடர்ந்தால் கொல்லப்படுவீர்கள்... ஹமாஸ் அமைப்புக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்... தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், கண்ணீர் புகைகுண்டு வீசி கூட்டத்தை கலைத்த காவல் துறை...

மழை, தவெக தலைவர் விஜய்
குஜராத் அரசியலில் திருப்பம் | 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா... பாஜக-வின் பிளான் என்ன?

அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம்... ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இளம்வீரர் லாமின் யமால் இடம்பிடித்து அசத்தல்...

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 95ஆயிரம் ரூபாயை கடந்தது... 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11ஆயிரத்து 900க்கு விற்பனை...

மழை, தவெக தலைவர் விஜய்
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் | முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறிய அமெரிக்கா.. முன்னேறிய இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com