அமேதியில் மீண்டும் ராகுல்.. ரேபரேலியில் பிரியங்கா.. உ.பியில் காங்கிரஸ் போடும் மெகா கணக்கு!

உத்தரப்பிரதேசம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல், பிரியங்கா
ராகுல், பிரியங்காட்விட்டர்

வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ராகுல்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவர், வயநாட்டில் மீண்டும் களமிறங்குவதற்கு I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடுமையாக விமர்சித்துள்ளது. ”பாஜகவுக்கு எதிராகப் போராட வேண்டிய நேரத்தில், ராகுல்காந்தி இடதுசாரிகளை எதிர்த்து நிற்பது ஏற்புடையதல்ல. காங்கிரஸின் இந்தப் பொருத்தமற்ற செயல் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். அவர் விமர்சிப்பதற்கும் முக்கியக் காரணம் உள்ளது.

அதே தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி அன்னி ராஜா போட்டியிடுகிறார். 3வதாக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். என்றாலும், அங்கு ராகுல் காந்திக்கும் அன்னி ராஜாவுக்கும்தான் போட்டு கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இந்த தொகுதியில் ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை I-N-D-I-A கூட்டணியில் காங்கிரஸுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்திருப்பதால் இவ்விவகாரம் பூதாகரமாகி உள்ளது. ஆனாலும் இதற்கு காங்கிரஸ் தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில், வயநாடு தொகுதியை ராகுல் காந்தி மீண்டும் குறிவைத்ததற்குக் காரணம், பாஜகவின் பலம் குறைந்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. மேலும், இம்மாநிலத்தில் காங்கிரஸுக்கு என ஓரளவு வாக்குச் சதவிகிதம் இருக்கிறது. அதனால்தான் ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா: ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் முடிவுக்கு வந்த தொகுதிப் பங்கீடு!

ராகுல், பிரியங்கா
அமேதி To வயநாடு: பாஜகவைக் கண்டு பயமா? விமர்சிக்கும் கேரள சிபிஎம்; ராகுல் காந்தி தொகுதி மாறியது ஏன்?

அமேதி மற்றும் ரேபரேலி: காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்?

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், காங்கிரஸ் - சமாஜ்வாடி இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதன்படி, 63 தொகுதிகளில் சமாஜ்வாடியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுன்றன. மீதமுள்ள 17 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த 17 தொகுதிகளில் ரேபரேலி, கான்பூர், அமேதி, வாரணாசி, காசியாபாத் உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

சோனியா, ராகுல் காந்தி
சோனியா, ராகுல் காந்தி file image

அந்த வகையில், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்டவை ஆகும். இந்த அமேதி தொகுதி 1967ஆம் ஆண்டுமுதல் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி 1980இல் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது சகோதரரும் ராகுலின் தந்தையுமான ராஜீவ் 1981இல் அமேதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார். தொடர்ந்து 1991 வரை அந்தத் தொகுதியின் நாயகனாக இருந்தார். அடுத்து, அவரது மனைவி சோனியா காந்தி 1999இல் அமேதியில் இருந்து எம்பி ஆனார். அதன்பிறகு அவரது மகன் ராகுல் காந்தி 2004இல் அந்த தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். அதுமுதல் கடந்த 2019 வரை எம்பியாக இருந்தார்.

இதையும் படிக்க: மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து இப்படியெல்லா பேசிவிட்டு பல்டி அடிக்கிறாரா கங்கனா? தொடரும் சர்ச்சை!

ராகுல், பிரியங்கா
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சோனியா காந்தி

அமேதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி?

ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வியைத் தழுவினார். 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வியடைந்தது, அந்த தொகுதியில் காங்கிரஸின் சகாப்தத்தையே முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும், இன்றும் பல மூத்த தலைவர்கள் அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிட வலியுறுத்தி வருகின்றனர். அதன் காரணமாக, அவர் மீண்டும் ஸ்மிருதி இரானியை எதிர்த்து இந்த முறை களம் இறங்குவார் அல்லது பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இத்தொகுதியில் களமிறக்கப்படலாம் என்ற தகவலும் உலா வருகிறது.

ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானி
ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானிட்விட்டர்

அவர் இந்த தொகுதியை விரும்பியிருப்பதாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். ஆனாலும், இதுவரை காங்கிரஸின் சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை வயநாடு வாக்குப்பதிவிற்குப் பிறகு இதற்கான பணிகள் ஆரம்பமாகலாம் எனச் சொல்லப்படுகிறது. அமேதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் வியூகம் அமைத்து வருகிறது. அதன்பயனாக, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ஜம்மு காஷ்மீர்| ஒரே தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் மோதல்.. சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல் களம்!

ராகுல், பிரியங்கா
'அமேதி என் குடும்பம்' - ராகுல் காந்தி உருக்கமான கடிதம்

ரேபரேலியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தொகுதியும் காங்கிரஸ் கோட்டை என்றே சொல்லலாம். அந்த வகையில், காங்கிரஸின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, கடந்த 2004 முதல் ரேபரேலியில் போட்டியிட்டு வென்றுவந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக, இந்த முறை அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இந்த தொகுதியில் அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே தன் மகன் ராகுலுக்காக, அமேதி தொகுதியை விட்டுக் கொடுத்ததுபோல், இந்த முறை தன் மகளுக்காக ரேபரேலி தொகுதியை சோனியா காந்தி விட்டுக் கொடுத்திருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆக, மீண்டும் இந்த தொகுதிகளில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்பது களத்தின் பொதுவான கணிப்பாக உள்ளது.

இதையும் படிக்க: இந்திய தேசியக் கொடி அவமதிப்பு.. மீண்டும் சர்ச்சை பதிவு.. மன்னிப்பு கோரிய மாலத்தீவு Ex அமைச்சர்!

ராகுல், பிரியங்கா
“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?” - பிரியங்கா காந்தி கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com