மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து இப்படியெல்லா பேசிவிட்டு பல்டி அடிக்கிறாரா கங்கனா? தொடரும் சர்ச்சை!

திசை எங்கும் தேர்தல் பற்றிய செய்திகளே உலா வருகின்றன. அந்த வகையில், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத், ”தான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து” எனக் கூறியிருக்கிறார்.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்ட்விட்டர்

மாட்டிறைச்சி சர்ச்சை: பதிலடி கொடுத்த கங்கனா ரனாவத்

மகாராஷ்டிரா மாநிலம் காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் “கங்கனா ரனாவத் ஒருமுறை மாட்டிறைச்சியை விரும்புவதாகவும், சாப்பிட்டதாகவும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். பாஜக இப்போது அவருக்கு மக்களவைத் தேர்தலுக்கு சீட் வழங்கியுள்ளது" எனச் சமீபத்தில் பேசியிருந்தார். இதற்கு கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “நான் மாட்டிறைச்சி உள்பட எந்த வகையான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது. நான் பல ஆண்டுகளாக யோகா, ஆயுர்வேத வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு அதைப் பிறருக்கும் பரிந்துரைத்து வருகிறேன். எனவே, எனது இமேஜை கெடுக்க இதுபோன்ற தந்திரங்கள் எதுவும் வேலைசெய்யாது. என்னைப் பற்றி என் மக்களுக்குத் தெரியும். நான் ஒரு பெருமைமிக்க இந்து என்பதையும் அவர்கள் அறிவார்கள். அவர்களை எதுவும் தவறாக வழிநடத்த முடியாது. ஜெய் ஸ்ரீ ராம்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இதையும் படிக்க: இந்திய தேசியக் கொடி அவமதிப்பு.. மீண்டும் சர்ச்சை பதிவு.. மன்னிப்பு கோரிய மாலத்தீவு Ex அமைச்சர்!

கங்கனா ரனாவத்
ELECTION BREAKING: BJPயில் இணைந்த EX Cong MPக்கு உடனே சீட் To பாஜகவில் கங்கனா வேட்பாளராக அறிவிப்பு

நேர்காணலில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறிய கங்கனா!

முன்னதாக, கங்கனா ரனாவத் நேர்காணல் ஒன்றில், ’எனக்கு மாட்டிறைச்சி பிடிக்கும்’ என அதில் ஒப்புக்கொண்டுள்ளார். தவிர, அவருடைய தாயார் அதற்குத் தடை விதித்தபோதும், அந்த மாட்டிறைச்சியில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதற்காக அதைச் சாப்பிட முயற்சி செய்ததாகவும், தொடர்ந்து அதைச் சாப்பிடுவதாகவும் அதில் கூறியிருந்தார்.

இந்த நேர்காணலில் கங்கனா பேசியிருந்ததைக் குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர், அவரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் அவர், “#கங்கனா ரனாவத், மனித குலத்திற்கு ஏற்பட்ட அவமானம். அவள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது அவமானம்... பெண்ணாக இருப்பதில் அவமானம்” என மிகக் காட்டமாக விமர்சித்திருந்தார். அதற்கு கங்கனா ரனாவத்தின் பிஆர் குழு பதிலளித்திருந்தது. “

மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல. கங்கனா ரனாவத் 8 வருடங்களாக சைவ உணவு உண்பவர்” எனத் தெரிவித்திருந்தது.

மாட்டிறைச்சி பதிவு: நீதிமன்றம் வரை சென்ற கங்கனா

தவிர, இந்த மாட்டிறைச்சி தொடர்பாக கங்கனா பதிவிட்டிருந்த பதிவு, அவரை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றது. லூதியானாவைச் சேர்ந்த நவ்நீத் கோபி என்பவர், மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக கங்கனாவுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவருடைய மனுவில், கங்கனா தனது பதிவின் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மாட்டிறைச்சி உண்பதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இதில் மாட்டிறைச்சி உண்பதை ஊக்குவிக்கச் சொல்லவில்லை என நீதிமன்றம் அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்தது.

கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் குறித்து காங்கிரஸ் நிர்வாகி விமர்சனம் - விசாரணைக்கு உத்தரவு

தொடர் சர்ச்சைகளில் கங்கனா ரனாவத்!

தொடர்ந்து பாஜக கருத்துகளை ஆதரித்தும், அதைப் பகிர்ந்தும் வந்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு, மத்தியில் ஆளும் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியை ஒதுக்கியது. அங்கு, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமுதலே அவர் தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சைகளும் கிளம்பிவருகின்றன. கங்கனா ரனாவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் சுப்ரியா ஸ்ரீநேத், அவருக்கு எதிராக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது சமூக வலைதள கணக்கு பிறரால் ஊடுருவப்பட்டது என விளக்கம் அளித்தார். இருப்பினும் சுப்ரியா ஸ்ரீநேத் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் பிரச்னை ஓய்ந்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத், ”இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” என கூறியது சர்ச்சையாக வெடித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகுமார் போஸ், ”யாரும் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக வரலாற்றைத் திரிக்கக்கூடாது” என நேரடியாகப் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜம்மு காஷ்மீர்| ஒரே தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் மோதல்.. சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல் களம்!

கங்கனா ரனாவத்
தேர்தல்பத்திர நன்கொடை: ரெய்டுக்குப்பின் ஓராண்டில் கோடிகளை அள்ளி வழங்கிய மாட்டிறைச்சி நிறுவனங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com