மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சோனியா காந்திTwitter
இந்தியா
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
மக்களைவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி, முதன்முறையாக ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் ஏப்ரல் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரது இடத்தில் தேர்வான சோனியா காந்தி பதவி ஏற்றுக் கொண்டார்.
முடிவுக்கு வரும் 33 ஆண்டுகால அரசியல் பயணம்; இன்றுடன் ஓய்வு பெறுகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
இதேபோல், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பதவியேற்றார். இவர்களுடன் பதவி ஏற்ற 14 பேருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.