“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?” - பிரியங்கா காந்தி கேள்வி

தேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக-வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திFile image

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அதில் பேசிய அவர், “மக்களுக்காக வேலை செய்யும் உண்மையான தலைவர், சாதி, மதத்தை வைத்து வாக்கு கேட்க மாட்டார். அவருடைய உழைப்பின் அடிப்படையில் மக்களிடம் வாக்கு கேட்பார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முகநூல்

கடந்த 18 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினர் ஆட்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் செய்த எந்த வேலையையும் கூறி வாக்கு கேட்பதில்லை. மாறாக சாதி, மதம் பற்றி பேசி வருகிறார்கள்.

பிரியங்கா காந்தி
தெலங்கானாவில் காங்கிரஸூக்கு திமுக ஆதரவு!

ராஜஸ்தானில் தலைவர்கள், தொண்டர்கள் என காங்கிரஸில் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டக்களத்தில் இறங்கியதால் பாஜக முற்றிலும் பிளவுபட்டுள்ளது. ராஜஸ்தானில்
பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்” என்று பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி
ராஜஸ்தான்: 1 கோடி மக்கள் பரிந்துரைகளால் உருவாக்கப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நட்டா!

200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானுக்கு வருகிற 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com