பிஹார் அரசியல் உள்ளும் புறமும் | சமூகம், வரலாறு, அரசியல் குறித்த சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பு!
இந்தியாவே எதிர் நோக்கிக் காத்திருக்கும் பிகார் தேர்தலில் வெற்றிப் பெற்று அரியணை ஏறப்போவது யார் என்பது நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் மூலம் நமக்குத் தெரியவரும். இந்நிலையில், பிகார் அரசியல், வரலாறு, சமூக அமைப்பு, மக்களின் மனநிலை போன்றவை குறித்து புதிய தலைமுறை வலைதளப் பக்கத்தின் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
பிஹாரின் ”ஜன நாயகன்”
பிஹாரின் சமூக மாற்றத்தை முன்னெடுத்த கர்ப்பூரி தாக்கூர், சோஷலிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக, கல்வி மற்றும் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவரது ஆட்சியில், பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி நடைமுறைக்கு வந்தது.
பிஹாரின் ”ஜன நாயகன்”., சோஷலிஸ இயக்கத்தின் முன்னோடி... கர்ப்பூரி தாக்கூர் வாழ்க்கை வரலாறு !
பிகார் அரசியலை தீர்மானிக்கும் பட்டியல் சமூகம் !
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக வாக்குவங்கிகளை மேலும் கூர்மைப்படுத்தியது. அதன்படி, பட்டியல் சமூக மக்கள் 19.65% ஆக இருப்பதால், அரசியல் கட்சிகள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.
Bihar Election 2025 | தீர்மானிக்கும் சக்தியாகும் பட்டியல் சமூகம்..! அறிந்துகொள்ள வேண்டியவை என்ன?
பிஹார் ‘வறுமை’ ஏன்?
பிஹாரில் வேலைவாய்ப்புகள் இல்லாததால், இளைஞர்கள் வெளியேறுவது பெரும் பிரச்னையாக உள்ளது. மாநிலத்தின் சமூக பொருளாதார நிலைமைகள், நகரமயமாக்கல் குறைவானது, மற்றும் விவசாயத்தில் வருமானம் குறைவானது இதற்குக் காரணம். இதனால், பிஹாரில் உள்ள மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை தேடுகின்றனர்.
பெண்களின் எழுச்சி !
பிஹார் தேர்தலில் யார் வெல்வார்? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் வைத்திருக்கலாம். ஆனால், கொஞ்சம் அரசியல் தெரிந்த விமர்சகர்களும் சரி; அரசியல் செயல்பாட்டாளர்களும் சரி; ஒரே பதிலைத்தான் சொல்கிறார்கள். பெண்கள் கைகளில்தான் முடிவு இருக்கிறது!
”மகா கட்பந்தனின் பலம்”
பிஹார் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி பலம் மற்றும் பலவீனங்களை எதிர்கொள்கிறது. இளம் வாக்காளர்களின் ஆதரவு தேஜஸ்விக்கு அதிகம் கிடைத்தாலும், வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகள் பின்னடைவாக இருக்கின்றன. யாதவ மற்றும் இஸ்லாமிய வாக்குகள் ஆர்ஜேடிக்கு பலம் சேர்க்கும் நிலையில், கூட்டணியின் பல்வேறு கட்சிகள் ஒரே கொள்கையில் இணைந்திருப்பது வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
Bihar Election | மகாகத்பந்தன் கூட்டணியின் மிகப்பெரிய பலம் இதுதான்; வெற்றிக்கான வாய்ப்புகள் எப்படி?
லாலு, நிதிஷ்: இருவரின் கதை!
பீகாரின் அரசியல் வரலாற்றில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் முக்கியமான பாத்திரங்களை வகிக்கின்றனர். லாலு, சமூகநீதி மற்றும் சாதாரண மக்களின் குரலாக இருந்தார், ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள் அவரை வீழ்த்தியது. நிதிஷ், நல்ல நிர்வாகத்துடன் பீகாரை முன்னேற்றம் செய்தார். இருவரும் பீகாரின் அரசியல் அடித்தளத்தை மாற்றியமைத்தனர்.
அரசியல் வாரிசுகளின் ஆதிக்கம் !
பிகார் சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியல் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. முக்கிய கட்சிகள் குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல இடங்களில் அரசியல் வாரிசுகளை களமிறக்கி உள்ளன. இதனால், தேர்தல் பரப்பில் கட்சி பேதமின்றி வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
Bihar Election 2025 | கட்சி பேதமின்றி ஆதிக்கம் செலுத்தும் வாரிசுகள்.. தேர்தலில் போட்டாபோட்டி!
சாதி, மத கண்ணிகளிலிருந்து மீளுமா பிஹார்?
பீகார் மாநிலம், இயற்கை வளம் மற்றும் அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளுடன் இருந்தாலும், மதம் மற்றும் சாதி பிரச்சினைகளால் பின்தங்கியுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியின் நீண்டகால செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளன. 2025 தேர்தலில், பீகாரின் எதிர்காலம் மற்றும் நிதிஷ் குமாரின் ஆட்சியின் விளைவுகள் முக்கியமாக பேசப்படும்.
ப. சிதம்பரம் எழுதும் | சாதி, மத கண்ணிகளிலிருந்து மீளுமா பிஹார்?
நிதிஷ்க்கு மிகப்பெரும் அச்சுறுத்தலா பாஜக?
முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் களத்தில் முக்கியமானவர். ஆனால், சமீபத்திய தேர்தல்களில் அவரது செல்வாக்கு குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்மயமாக்கலில் குறைபாடுகள், கூட்டணி மாற்றங்கள் ஆகியவை அவரின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளன. இளம் வாக்காளர்கள் அவரை ஆதரிக்காததால், 2025 தேர்தலில் அவருக்கு சவால்கள் அதிகமாக இருக்கின்றன.
Bihar Election 2025 | நிதிஷ்க்கு மிகப்பெரும் அச்சுறுத்தலா பாஜக? JD(U) வாக்கு வங்கி அரிக்கப்படுகிறதா?
பாஜகவின் யோகி அஸ்திரம் !
சில வாரங்களாக திட்டங்கள், வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள் என சூடு பறந்த பிஹார் தேர்தலில் முதற்கட்ட பரப்புரை நிறைவடைந்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, பரப்புரையின் கடைசி அஸ்திரமாக யோகி ஆதித்யநாத்தை களமிறக்கிவிட்டது.
பரப்புரையின் கடைசி நிமிடத்தில் மக்களை கவர்ந்தது எந்தக் கூட்டணி? பாஜக எடுத்த ’யோகி அஸ்திரம்'
மதுவிலக்கால் பாதிக்கப்பட்டதா பிகார்?
மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து மற்ற மாநிலங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், மது விலக்கு தேவைதானா எனப் பேசி வருகின்றன பிகார் அரசியல் கட்சிகள். ஏன் இந்த முரண்... என்ன நடக்கிறது பிகாரில்?
மதுவிலக்கால் பாதிக்கப்பட்டதா பிகார்? வருவாய் அல்ல பிரச்னை.. நுட்பமான காரணிகள்..
ஆட்ட நாயகன் ஆவாரா பிரசாந்த் கிஷோர் !
நாம் மிக முக்கியமான ஒருவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. வேறுயாரும் இல்லை.. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர். வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் பிரசாந்த்...
Bihar Election 2025 | ஆட்டநாயகன் ஆவாரா PK? பிகாரில் புது முயற்சி.. களம் சொல்வது என்ன?

