சிந்துசமவெளி நாகரிகம்
சிந்துசமவெளி நாகரிகம்pt web

சிந்து சமவெளி ஆய்வுகள் ஏன் முடிவடையாமல் நீள்கின்றன? வரலாற்றை திருத்தி எழுதுமா? விடைதேடி நீளும் பயணம்

சிந்து சமவெளி நாகரிகம்.. ஒரு நாகரிகத்தை முன்வைத்து எத்தனை கேள்விகள்.. விடைதேடி நீளும் பயணம்..
Published on

சிந்து சமவெளி

ஏன் சிந்துசமவெளி அகழ்வாராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருக்கிறது? சிந்து சமவெளி ஆய்வுகள் ஏன் முடிவடையாமல் நீள்கின்றன? அந்த குறியீடுகள் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது ஏன்? அந்த குறியீடுகளை, சித்திர எழுத்துகளை எதற்காக பயன்படுத்தியிருப்பார்கள்? அந்த குறியீடுகளுக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பு என்ன? இப்படி ஒரு நாகரீகத்தை முன்வைத்து எத்தனை கேள்விகள்.. அத்தனைக்கும் அறிஞர்கள் விடைதேடிக்கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள்.

சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் யார்? அங்கிருந்த நாகரிகம் என்னவானது? அங்கு வசித்த மக்கள் என்னவானார்கள்? அவர்கள் எங்கேனும் வெளியேறிச் சென்றார்களா? அப்படியென்றால் எதனால் வெளியேறினார்கள்? அவர்கள் பேசிய மொழி என்ன? இத்தனை பண்பட்ட நாகரிக சமூகமாக வாழ்ந்த அவர்களின் வாழ்வியல் முறை எப்படி இருந்தது? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு தொல்லியல் சமூகம் பலவித அணுகுமுறைகளில் விடைகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. உண்மைகள் வெளிப்படையாகவும், வெளியில் முழுமையாக தெரியாதவகையிலும் நீடித்துக் கொண்டே இருப்பதால் அதுகுறித்த ஈர்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.

சிந்துசமவெளி நாகரிகம்
”பதவியேற்பதற்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்..” - ஹமாஸுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

குறைந்தபட்சம் ஒரு 100 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் தன்னை நோக்கி ஈர்க்கும் சிந்து சமவெளி, அதன் பரப்பாலும், அங்கு வாழ்ந்த தொல் மனிதர்களாலும் அவர்களது வாழ்வியல் முறைகளாலும் ஆச்சரியப்பட வைத்துக் கொண்டிருக்கிறது.

சிந்து நதிக்கரையோரம் அமைந்த மனித நாகரிகமே ‘சிந்து சமவெளி நாகரிகம்’ என்றும் ‘ஹரப்பா நாகரிகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் வடமேற்கு, பாகிஸ்தான், வடகிழக்கு ஆப்கானிஸ்தான் என சிந்து சமவெளி நாகரிகம் சுமார் 15 லட்சம் சதுர கிமீ அளவிற்குப் பரவிப் படர்ந்திருக்கிறது. எகிப்து மற்றும் மெசபடோமியா நாகரிகத்தின் சமகால நாகரிகமாக சிந்துவெளி கருதப்படுகிறது. சிந்துவெளியில் மனிதர்கள் சுமார் ஆயிரம் இடங்களில் குழுமி வசித்திருக்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஹரப்பாவும், பாகிஸ்தானின் மொஹஞ்சதாரோவும் பழைமையான நகர குடியேற்றப் பகுதிகளாக பார்க்கப்படுகிறது. அதேபோல, தொலவீராவிலும் பெரும் அளவில் தொல்மாந்தர்கள் வசித்திருக்கிறார்கள். காலிபங்கன், ராக்கிகரி, ருபர், லோத்தல் மற்றும் பாகிஸ்தானின் கன்வேரிவாலா பகுதிகளிலும் தொல்மாந்தர்களின் குடிபகுதிகள் அமைந்திருந்தன.

சிந்துசமவெளி நாகரிகம்
“தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை - முதல்வர்” | சட்டசபையில் இன்று நடந்தது என்ன? - முழுவிபரம்!

சிந்துவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மொஹஞ்சதாரோவில் 200 ஹெக்டேர் அளவுக்கும், ஹரப்பாவில் 150 ஹெக்டர் அளவுக்கும் மிகப்பெரிய அளவிலான நன்கு கட்டமைக்கப்பட்ட நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நன்கமைந்த நகரங்கள் மூலம், தொல்மாந்தர்கள் நல்ல கட்டமைக்கப்பட்ட வாழ்வியல் முறையை கைக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருவதுதான் ஆச்சரியம். விலங்குகளோடும் கிடைப்பதை உட்கொண்டும் நாடோடிகளாக, காடோடிகளாக வாழ்ந்த மனித சமூகம், நகரக் கட்டமைப்புக்கு வருவதற்குள் எத்தனை பண்பட்டிருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியதன் மூலம் சிந்துவெளி நாகரிகம் மனித குலத்தின் வியப்புக்குரிய அகழ்வியல் தளமாக மாறியிருக்கிறது.

சிந்துசமவெளி நாகரிகம்
யுஜிசியின் புதிய விதிமுறைகள் | “அடுத்த தலைமுறை கல்வி பாதிக்கும்” - கல்வியாளர் நெடுஞ்செழியன்!

சர் ஜான் மார்ஷல்

100 ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட காரணமாக இருந்தவர் ஜான் மார்ஷல். 1902 ஆம் ஆண்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பொது இயக்குநராக நியமிக்கப்பட்ட இவர், 1928 ஆம் ஆண்டுவரை இந்த பொறுப்பில் இருந்தார். பணி ஓய்வுக்குப்பின் மொஹஞ்சதாரோ பற்றிய அறிக்கையை தயாரிக்கும் சிறப்பு அதிகாரியாக ஜான் மார்ஷல் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் பெரும்பகுதியில் பரவிப் படர்ந்திருந்த பழைமையான நாகரிகத்தின் மீது வெளிச்சம் பாய காரணமாக இருந்த ஜான் மார்ஷலின் நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில், சிந்து சமவெளி நாகரிகத்தின் அறியப்படாத பக்கங்களை வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மொஹஞ்சதாரோவில் கிரேட் பாத் எனப்படும் பெரிய பொது நீர்தொட்டி மற்றும் பிற கட்டட எச்சங்களை கண்டுபிடித்தவர் ஜான் மார்ஷல். உலகின் மிக பழைமையான பொது நீர் தொட்டியாக கருதப்படும் இந்த நீர்தொட்டி, செங்கல் கட்டுமானத்தில் படிக்கட்டுகள் மற்றும் தண்ணீர் உள்ளே வரும் வழிகளுடன் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த பெரிய பொது நீர் தொட்டியையும், புத்த மடாலயத்தின் கீழும், அதைச்சுற்றியும் இருந்த தொல் எச்சங்களைக் கண்டுபிடித்ததை ஜான் மார்ஷல் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த பொது நீர் தொட்டியின் அமைப்பும் கட்டுமானமும், சமூகமாக பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பில் காட்சியளித்தது, தொல்லியலாளர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.

சிந்துசமவெளி நாகரிகம்
இஸ்ரோவின் SPACE DOCKING பணி: நேரடி ஒளிபரப்பு செய்ய இருந்த நிலையில் திடீரென ஒத்திவைப்பு

அதேபோல, சிந்துவெளி மக்களின் வர்த்தகத் தொடர்புகளும் வியக்க வைக்கின்றன. மெசபடோமியா, தில்மும், எல்அம், மகன், மார்கன் போன்ற வளைகுடா பகுதிகளுடன் ஹரப்பா மக்கள் வணிகத் தொடர்புகள் வைத்திருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சிந்துவெளியில் வணிகத்தலங்கள் இருந்த ஆதாரங்கள் மட்டுமல்ல, பல முத்திரைகள், எடைகள், பஹ்ரைனின் தில்மனிலும் மத்திய கிழக்கின் மகனிலும் கிடைத்துள்ளன.

மரபணு தொடர்ச்சி

சிந்து சமவெளியின் ஒருபகுதியாக ராக்கிகரியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது மிக முக்கியமான திருப்பமாக கருதப்படுகிறது. இந்த எலும்புக்கூட்டின் மரபணுவை மரபணு ஆய்வாளர் டேவிட் ரெய்ச் மற்றும் தொல்லியல் அறிஞர் வசந்த் ஷிண்டே ஆய்வுக்கு உட்படுத்தியபோது, இந்த மரபணு கி.மு.2800 -2300க்கு முற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதில் ஆரியர்களின் மரபணு இல்லை என்று இந்த ஆய்வு உறுதி செய்தது. இதன் மூலம் ஆரியர் அல்லாத இனக்குழுவினர் சிந்துவெளியில் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

சிந்துசமவெளி நாகரிகம்
”இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஞானசேகரன் வீடு” | வருவாய் துறை கொடுத்த அறிக்கை

குறியீடுகள்

சிந்துவெளியில் வேளாண் சமூகம், தாய் தெய்வ வழிபாடு, இயற்கை வழிபாட்டு முறைகள் கண்டறியப்பட்ட அதேவேளையில் அங்கு மன்னராட்சி முறை இல்லை என்று யூகிக்கிறார்கள் ஆய்வாளர்கள். மொழியை பொறுத்தவரை குறியீடுகளாகவும், சித்திர குறியீடுகளாகவும் பயன்படுத்தியதன் ஆதாரங்கள் ஆயிரக்கணக்கில் காணக் கிடைக்கின்றன. சுமார் 4 ஆயிரம் குறியீடுகள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 400 குறியீடுகள் விலங்குகள், மனிதர்கள், இடங்கள் குறித்ததாக இருக்கன்றன. சிந்துவெளி குறியீடுகள் எவற்றை சுட்டுகின்றன என்பது முழுமையாக மொழி பெயர்க்கப்படவில்லை.

சில குறியீடுகள் குறிப்பிட்ட வார்த்தைகளை குறிப்பிடுவதாகவும், சில குறியீடுகள் ஒலியை குறிப்பிடுவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த குறியீடுகள் குறித்த ஆராய்ச்சி நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்போலா போன்ற அறிஞர்கள், திராவிட மொழிக்கு முந்தைய வடிவத்தை சிந்து சமவெளி மக்கள் பேசியிருக்கக்கூடும் என்ற கருதுகோளை முன்வைக்கிறார்கள்.

டாக்டர் எஸ்.ஆர். ராவ், எம்.வி.என்.கிருஷ்ணாராவ், மற்றும் ஜான் இ மிட்சென்னர் போன்ற அறிஞர்கள், சமஸ்கிருதத்துக்கு முந்தைய மொழிவடிவை பயன்படுத்தியிருக்கலாம் என்ற கருத்தை ஆய்வு நோக்கில் முன்வைக்கிறார்கள். மைக்கேல் விட்செல், ஸ்டிவ் ஃபார்மர் மற்றும் ரிச்சர்ட் ஸ்பராட் போன்ற அறிஞர்கள், சிந்து சமவெளியில் குறியீடுகளை மொழியாக பயன்படுத்தியதான கருத்தை முன்வைக்கிறார்கள்.

சிந்துசமவெளி நாகரிகம்
முதியவரின் கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி - வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்..!

சிந்துவெளியும், தமிழக அகழாய்வுகளும்

சிந்துவெளியில் காணக் கிடைத்த குறியீடுகள், முத்திரைகள் தமிழக அகழ்வாய்வுகளிலும் கிடைத்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், சிந்துவெளியில் காணப்படும் காளை குறியீடு, மீன் சின்னம் உள்ளிட்ட குறியீடுகள் தமிழ்நாட்டு அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்துள்ளன. சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகளில் பல தமிழக அகழாய்வில் கிடைத்தவற்றுடன் ஒத்துப்போவதை அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள். இதன் தொடர்பை ஆராயத்தான் தமிழக அரசு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

சிந்துவெளி மக்கள் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு வெளியேறியிருப்பார்கள் என்று கூறும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கிடைத்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட குறியீடுகள், சிந்துவெளி குறியீடுகளோடு ஒத்துப்போவதாக கூறுகிறார். ஆனால், இவற்றில் என்ன கூறப்படுகிறது என்பதுதான் தெரியவில்லை என்கிறார். இந்த குறியீடுகள் தமிழகத்தில் உள்ள கருப்பு, சிவப்பு பானைஓடுகளிலேயே கிடைப்பது ஏன்? கங்கைச்சமவெளியில் கிடைத்த சாம்பல் நிற பானை ஓடுகளில் கிடைக்காதது ஏன் என்று வினவும், தொல்லியல் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன், இந்த கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும் என்கிறார்.

சிந்துசமவெளி நாகரிகம்
ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை. அவர் அனுதாபி : முதல்வர் ஸ்டாலின்

சிந்துசமவெளி நாகரிகத்துக்கும், கீழடி நாகரிகம் மற்றும் தமிழகத்தில் கிடைக்கும் குறியீடுகளுக்கும் இடையே 90 சதவிகித ஒற்றுமை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என தொல்லியல் ஆய்வாளர் மாரப்பன் கூறுகிறார். இன்றைய காலகட்டத்தில் நடக்கும் மரபணு சோதனையில் சிந்து சமவெளியில் கிடைத்த மரபணுவும், தமிழகத்தில் கிடைத்த மரபணுவும் ஒத்துப்போவதாக தெரிவிக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற சிந்து சமவெளி கருத்தரங்கில், 'Indus Signs and Graffiti Marks of Tamilnadu: A morphological Study' என்ற இந்த ஆய்வு புத்தகம் வெளியிடப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ராஜனும் சிவானந்தமும் இணைந்து செய்த இந்த ஆய்வில், சிந்துவெளி நாகரீகத்தில் கிடைக்கும் எழுத்துகள் மற்றும் குறியீடுகளுக்கும் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் கிடைத்த பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் பெருமளவு ஒற்றுமை இருப்பது தெரிய வந்துள்ளது. சிந்து வெளி நாகரிக சமூகம், அவர்களின் மொழி குறித்து தெரியவந்தால் வரலாற்றை திருத்தி எழுத வேண்டியிருக்கும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

சிந்துசமவெளி நாகரிகம்
"திமுக அனுதாபிக்கே இவ்வளவு அதிகாரமா? அப்படினா நிர்வாகிக்கு.." - வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com