pslv c 60
pslv c 60puthiyathalaimurai

இஸ்ரோவின் SPACE DOCKING பணி: நேரடி ஒளிபரப்பு செய்ய இருந்த நிலையில் திடீரென ஒத்திவைப்பு

நாளை காலை 8 மணிக்கு இஸ்ரோ தனது யூடியூப் வலைதளத்தில் SPACE DOCKING பணியை நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக டாக்கிங் இணைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Published on

நாளை காலை 8 மணிக்கு இஸ்ரோ தனது யூடியூப் வலைதளத்தில் SPACE DOCKING பணியை நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக டாக்கிங் இணைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. செயற்கைகோள்கள் 225மீ தொலைவில் இருந்தபோது சுழற்சியை மேற்கொள்ள முடியவில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் SPACE DOCKING பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காகத்தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த டிசம்பர் 30 2024 அன்று SPADEX வடிவமைத்து பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தினார்கள்.

செயற்கைகோளை இணைக்கும் டாக்கிங் முறை
செயற்கைகோளை இணைக்கும் டாக்கிங் முறை

எதற்காக இந்த திட்டம்?

இந்த முயற்சி இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியமான அடிப்படையாக அமையும் என கூறப்படுகிறது. SPADEX (Space Docking Experiment) திட்டத்தின் கீழ், இரு தனித்தனி விண்கலங்களை விண்வெளியில் இணைக்கும் "டாக்கிங்" எனப்படும் தொழில்நுட்பத்தை சோதிக்கிறது.

அதாவது SpaDex பணியானது SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை உள்ளடக்கியது, இவை குறைந்த புவி சுற்றுப்பாதையில் சுமார் 700 கி.மீ உயரத்தில் விண்கலம் வலம் வரும். அச்சமயத்தில் இந்த சோதனையானது மேற்கொள்ள இருக்கிறது. விண்வெளியில் செய்யப்படும் docking சோதனையை ஒரு சில நாடுகள் மட்டுமே செய்துள்ளது. இந்தியாவின் இப்பணி வெற்றியடைந்தால் சர்வதேச விண்வெளி துறையில் இந்தியாவின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்றே நம்பலாம்.

இந்த space docking Experiment ஐ இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்ப இருந்தது. ஜனவரி 9ம் தேதி காலை 8 மணிக்கு நேரடியாக இஸ்ரோவின் யூடியூப் சானலில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த டாக்கிங் இணைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com