அண்ணா பல்கலைக் கழக 
விவகாரம்
அண்ணா பல்கலைக் கழக விவகாரம்முகநூல்

ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை. அவர் அனுதாபி : முதல்வர் ஸ்டாலின்

”பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக பிரமுகர்கள் அதிகம் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் 'பேட்ஜ்' அணிந்து வருகின்றனர்; 100க்கும் மேற்பட்ட 'சார்' கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும்.” - முதலமைச்சர் ஸ்டாலின்.
Published on

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பல போராட்டங்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது. மேலும், இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என்று எதிர்கட்சியினர் பேசி வந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கம் கொடுத்தார்.

இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “நான் எதிர்க்கட்சிகளை கேட்க விரும்புவது... யார் அந்த சார்? என்று குற்றம்சாட்டுகிறீர்கள். உண்மையாகவே உங்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுங்கள். அதை சொல்லுங்கள். அதை யார் தடுக்கப் போகிறார்கள்.

அதை விட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டீவான வழக்கில் வீண் விளம்பரத்திற்காக, குறுகிய அரசியல் லாபத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக பிரமுகர்கள் அதிகம் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் 'பேட்ஜ்' அணிந்து வருகின்றனர்; 100க்கும் மேற்பட்ட 'சார்' கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும்.

பொள்ளாச்சியில் 12 நாட்கள் கடந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சென்னையில் ஒரு நாளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

அண்ணா பல்கலைக் கழக 
விவகாரம்
'யார் அந்த சார்?' முதலமைச்சர் பதில்

பெண்களின் பாதுகாப்பு எங்களால் உறுதி செய்யப்படும். ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை. அவர் அனுதாபி. பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் செயல்படுங்கள்" உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com