அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதா ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல்; படக்குழுவினர் சொல்வதென்ன?

மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு முறையான அனுமதி பெறவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது திரையுலகில் பேசுபொருளாகி இருக்கிறது. இதுபற்றி நாம் மஞ்ஞுமல் பாய்ஸ் படக்குழுவினரை தொடர்பு கொண்டு பதில் பெற்றோம்.
இளையராஜா
இளையராஜாpt web

மஞ்ஞும்மல் பாய்ஸ்

PAN இந்தியா ஹிட் அடித்த மலையாளத் திரைப்படம் மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தை சிதம்பரம் என்ற இயக்குநர் இயக்கியிருந்தார். இப்படத்தில் ‘குணா’ படத்தில் இடம் பெற்றிருந்த பாடலை பயன்படுத்தியிருந்தனர். இப்படத்தை தமிழ் ரசிகர்கள் பலரும் பார்த்ததற்கு இப்பாடல் முக்கிய காரணமாக அமைந்தது. பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இப்படக்குழுவினர் சென்னை வந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். இந்த குழுவுடன் கமல்ஹாசன் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு மனதார பாராட்டினார்.

இளையராஜா
இளையராஜா

இப்படம் வெளியாகி இரு மாதங்கள் கடந்த நிலையில், ‘கண்மணி’ பாடலை தன்னுடைய அனுமதியின்றி திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா தரப்பில் மஞ்ஞுமல் பாய்ஸ் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டுமென இளையராஜா நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா
“நீங்கள் வெல்வதை பார்க்க விரும்புகிறேன்” - வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு.. குழம்பிய ரசிகர்கள்!

திரைப்படங்களுக்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்கள்

முன்னதாக விஜய் சேதுபதியின் ‘96’படத்தில் இடம்பெற்ற தன்னுடைய பாடலுக்காகவும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் TITLE டீசரில் தான் இசையமைத்த’ படத்தின் டிஸ்கோ பாடல் இடம் பெற்றதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இவற்றைத் தொடர்ந்து தற்போது ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படக்குழுவுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா.

இது தொடர்பாக மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படக் குழுவை தொடர்பு கொண்டபோது, ‘ஒரு படத்தின் பிரசித்தி பாடலை தங்கள் படத்தில் பயன்படுத்தும்போது அனுமதி வாங்காமல் எப்படி பயன்படுத்துவோம் என்றும், ‘குணா’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் முழு அனுமதி பெற்றே படத்தின் பாடலை வைத்தோம்’ என்றும் கூறுகின்றனர்.

இளையராஜா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 39 | ‘இப்படியொரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா?’- சேது ஸ்ரீமன்

இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சொல்வதென்ன? 

இளையராஜா‌ தரப்பு வழக்கறிஞர் சரவணன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியில், “கண்மணி அன்போடு காதலன் என்ற அந்தப்பாடல் இளையராஜா அவர்களின் சூப்பர் ஹிட் பாடல் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். இந்தப்பாடல் எப்படி உருவானது என்பதையும் பார்த்திருப்பீர்கள். கமல்ஹாசன், கங்கை அமரன், இளையராஜா ஆகியோர் சேர்ந்து வேலை செய்த வீடியோகூட சமீபத்தில் பரவலாக வைரலானது. இசையை பொருத்தமட்டில் அதனை உருவாக்கும் கர்த்தாவுக்குதான் அது சொந்தம் என நமது காப்புரிமை சட்டம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

மஞ்ஞுமல் பாய்ஸ் - சரவணன் - இளையராஜா
மஞ்ஞுமல் பாய்ஸ் - சரவணன் - இளையராஜாபுதிய தலைமுறை

‘தயாரிப்பாளர்தான் அந்தப் படத்தில் பணம் கொடுத்து பாடலை இசைக்க சொல்லி இருக்கிறார்’ என சிலர் கேட்கலாம். இதைக் குறிப்பிட்டு, ‘பாடலின் உரிமை தயாரிப்பாளருக்குதான் சொந்தம்’ என சிலர் கேட்கலாம்‌. தயாரிப்பாளரை பொருத்தமட்டில் அந்த பாடலை படம் கொடுத்து அந்தப் படத்திற்கு பயன்படுத்துகிறார். தயாரிப்பாளர் பணம் கொடுத்து அந்தப் படத்திற்கு அப்பாடலை வாங்கி விட்டார் என்பதற்காக அந்த பாடலின் இசை தயாரிப்பாளருக்கு சொந்தமில்லை. இதைத்தான் நமது காப்புரிமை சட்டம் தெளிவாக சொல்கிறது.

இளையராஜா
புது காரை களமிறக்கிய நாக சைதன்யா... விலை இத்தனை கோடி ரூபாயா?

இந்தப் பாடல்களை யாராவது பயன்படுத்தலாம் என தெரிவித்தால் பயன்படுத்தலாம். ஆனால் வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை. உதாரணமாக திருமண மண்டபங்களில் பாடல் பாடுகிறார்கள்... அதற்கு பயன்படுத்தலாம். ஆனால் வணிக ரீதியாக இதனை பயன்படுத்த முடியாது. ஒரு படத்தில் ஒருவரது பாடலை பயன்படுத்தும் பொழுது அவரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இளையராஜா
‘தமிழ் வரிகள் அழகா இருக்கு’ ரசிகர்கள் கொண்டாடும் ’இந்தியன் 2’ பாரா பாடல்! உற்சாகத்தில் பா.விஜய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com