“நீங்கள் வெல்வதை பார்க்க விரும்புகிறேன்” - வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு.. குழம்பிய ரசிகர்கள்!

'நீங்கள் வெல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்' என நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samantha
Samanthapt web

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவருடைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha
Samantha

அதில், 'நீங்கள் வெல்வதை நான் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்' என பதிவிட்டு உள்ளார். ஆனால், இந்தப் பதிவை நடிகை சமந்தா திடீரென யாருக்காகப் பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்

ஒரு சிலர் நடிகை சமந்தா, பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்காகவும் அந்த அணிக்காகவும் பதிவிட்டிருப்பதாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்
Samantha
‘இது அந்த ட்ரெஸ்ல...’ - தன் திருமண ஆடையை அழகாக மாற்றியமைத்த சமந்தா! எதற்காக தெரியுமா?

கடந்த வருடம் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சமந்தா, “கோலி மிகவும் ஊக்கமளிப்பவர். அவர் விளையாட்டில் செலுத்தும் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் ஒத்துழைப்பு மிகவும் அற்புதமாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் இதை மனதில் வைத்து, இன்று நடக்கும் ஐபிஎல் எலிமேட்டனர் போட்டியை (RR vs RCB போட்டியை) தொடர்புபடுத்தி அந்தப் பதிவை பெங்களூரு அணியுடனும் கோலியுடனும் தொடர்புபடுத்தி வருகின்றனர்.

விராட் கோலி இருக்கும் பெங்களூரு அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்ததுடன், இன்று அகமதாபாத் மைதானத்தில் எலிமினேட்டர் பிரிவில் ராஜஸ்தான் அணியுடன் மோதி வருகிறது. ஆதலால், அந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில், இப்படியான ஒரு பதிவை சமந்தா பகிர்ந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?

Samantha
“என் பக்கம் தவறே இல்லாதபோது, நான் ஏன் குற்ற உணர்வோடு இருக்கணும்?” - விவாகரத்து பற்றி சமந்தா Open Talk!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com