‘தமிழ் வரிகள் அழகா இருக்கு’ ரசிகர்கள் கொண்டாடும் ’இந்தியன் 2’ பாரா பாடல்! உற்சாகத்தில் பா.விஜய்!

இந்தியன் 2 படத்தின் பாரா பாடலின் வெற்றி என்னை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என பாடலாசிரியர் பா.விஜய் தெரிவித்துள்ளார்.
பா.விஜய்
பா.விஜய்ட்விட்டர்

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2
இந்தியன் 2

நாளுக்குநாள் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலான பாரா பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், நேற்று முழுப் பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையில், பா.விஜய் வரிகளில் உருவான இப்பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனிருத்தின் இசை குறித்து பா.விஜய்யின் பாடல் வரிகள் குறித்தும் ரசிகர்கள் சிலாகித்து வருகிறார்கள். இவ்வளவு அழகான வரிகளா என பலரும் பாடல் வரிகளை குறிப்பிடுகிறார்கள்.

இதையும் படிக்க: அமெரிக்க டாலருக்கு ஆப்பு.. மாலத்தீவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரேநேரத்தில் OK சொன்ன இந்தியா, சீனா!

பா.விஜய்
2 பாகங்களாக வரப்போகிறது இந்தியன் 2? வில்லன் இவர்தானா? அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!

இப்படத்தில் பாடல் எழுதியது குறித்து பாடலாசிரியர் பா.விஜய், “தேசிய விருது வாங்கிய மகிழ்ச்சியைவிட, இந்தியன் 2 படத்தின் பாடலுக்கு மக்கள் தரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

பாடல் துறையில் இது எனது 2-வது அத்தியாயம். தமிழ் மண்ணின் வீரத்திற்கான பாடலை எழுத இயக்குநர் ஷங்கர் வாய்ப்பளித்தார். பாரா பாடலின் வெற்றி என்னை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பா.விஜய் பேசிய முழுத் தொகுப்பையும் கேட் இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: “நீங்கள் வெல்வதை பார்க்க விரும்புகிறேன்” - வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு.. குழம்பிய ரசிகர்கள்!

பா.விஜய்
காவல்துறை அனுமதியின்றி விமான நிலையத்தில் இந்தியன்-2 படப்பிடிப்பு? புகாரும் பின்னணியும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com