sanju - ishan - pant - DK - KL Rahul
sanju - ishan - pant - DK - KL Rahul PT
T20

'Sanju முதல் DK வரை'- 6 விக்கெட் கீப்பர்கள் இடையே கடும்போட்டி! யாருக்கு WC-ல் வாய்ப்பு? முழு அலசல்

Rishan Vengai

பரபரப்பாக நடைபெற்றுவரும் நடப்பு 2024 ஐபிஎல் தொடர் மே 26ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பையானது ஜூன் 2ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கான இந்திய அணி வரும் ஏப்ரல் இறுதிவாரம் அல்லது மே முதல்வாரம் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபில் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்பதால், இளம்வீரர்கள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

T20 World Cup

2022 டி20 உலகக்கோப்பை, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 3 உலகக்கோப்பைகளை தவறவிட்டிருக்கும் இந்திய அணி, 2024 டி20 உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் தயாராகிவருகிறது.

காலங்காலமாக இருந்துவரும் மிடில்ஆர்டர் பிரச்னை..

2013-ம் ஆண்டுக்கு பிறகு 11 வருடங்களாக உலகக்கோப்பை வெல்லாமல் தவித்துவரும் இந்திய அணிக்கு ஒரே பிரச்னையாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடம் இருந்துவருகிறது. அதற்கான தேடலில் பல வீரர்களை களமிறக்கினாலு, நிரந்தரமான ஒருவீரரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

Yuvraj Singh

2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரை சென்ற இந்திய அணியில் கூட, மிடில் ஆர்டர் வீரராக யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ரன் எடுத்ததே உலகக்கோப்பை தோல்விக்கான காரணமாக இருந்தது.

2014 t20 worldcup final

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் அதற்கான இடத்திற்கு 6 இந்தியவீரர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். இதில் எந்தவீரரை தேந்தெடுத்து எப்படி இந்திய தேர்வுக்குழு சரியான இந்திய லெவனை அறிவிக்கபோகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

6 வீரர்களிடையே நிலவும் கடும்போட்டி..

2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பொறுத்தவரையில், இந்திய தேர்வுக்குழுவிற்கு சவால் அளிக்கும் விதமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடம் 6 வீரர்களுக்கிடையே கடும்போட்டியாக மாறியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ”இஷான் கிஷன், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் வர்மா, ரிஷப் பண்ட்” முதலிய 5 வீரர்கள் தங்களுடைய இடத்திற்காக போராடிவருகின்றனர். இதற்கிடையில் ஆர்சிபி அணியில் ஃபினிசிங் ரோலில் விளையாடிவரும் தினேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஃபார்மில் ஜொலித்துவரும் நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான போட்டியின் எண்ணிக்கை 6-ஆக மாறியுள்ளது.

kl rahul

ஒருபுறமும் சிலர் ரிஷப் பண்ட் தான் அணிக்கு தேர்வாகவேண்டும் என கூறிவரும் நிலையில், சஞ்சுசாம்சன் தான் தகுதியானவர் என்று தெரிவித்துவந்தனர். இதற்கிடையில் இஷான் கிஷான் பட்டையை கிளப்பிவரும் நிலையில், திடீரென தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியில் போட்டியை தனியாளாக முடித்துவருகிறார். எல்லாவற்றையும் தாண்டி டி20 கிரிக்கெட்டில் இரண்டு சர்வதேச சதங்களை அடித்திருக்கும் கேஎல் ராகுல் தொடக்கவீரராக சிறப்பாக விளையாடிவருகிறார். இதனால் விக்கெட் கீப்பருக்கான தேர்வு என்பது பெரும் தொல்லையாக பிசிசிஐ-க்கு மாறியுள்ளது.

எவ்வளவு நாள் சஞ்சு சாம்சன் காத்திருக்க வேண்டும்?

சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படமால் இருந்துவரும் நிலையில், தன்னுடைய இடத்திற்காக தொடர்ந்து போராடிவருகிறார். ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கோரிக்கையை தொடர்ந்து கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்ற சஞ்சுசாம்சன் வெளிநாட்டு மண்ணில் சதமடித்து அசத்தியிருந்தார்.

sanju samson

இதற்கிடையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 அரைசதங்களை பதிவுசெய்து 264 ரன்களுடன் ஆரஞ்ச் கேப் பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறார். நல்ல ஃபார்மில் இருந்துவரும் சஞ்சு சாம்சன் நிச்சயம் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தகுதியானவர் என பல்வேறு ஆதரவான கருத்துகள் இருந்துவருகின்றன. இவற்றை தாண்டி ஐபிஎல்லில் 4வது இடத்திலும் பேட்டிங் செய்திருக்கும் சஞ்சு சாம்சன் சிறப்பான ஸ்டிரைக்ரேட்டில் ரன்களை குவித்துள்ளார் என்பது உலகக்கோப்பை தேர்வுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

ரிஷப் பண்ட் தேர்வு சரியானதாக இருக்குமா?

விபத்திற்கு பிறகு 1 வருடமாக எந்தவிதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமல் நேராக ஐபிஎல்லுக்கு ரிட்டர்ன் ஆகியிருக்கும் ரிஷப் பண்ட் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடிவருகிறார். அவரால் பழைய படி விளையாட முடியுமா? என்ற கேள்வி இருந்த நிலையில், அதிரடி பேட்டிங்கால் மிரட்டிய பண்ட் பழைய விண்டேஜ் ஆட்டத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளார்.

rishabh pant

நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 194 ரன்கள் அடித்திருந்தாலும், ஒரு வருடமாக எந்தவிதமான போட்டிகளிலும் விளையாடாத ஒருவீரர் நேரடியாக உலககோப்பைக்கு கொண்டுசெல்வது சரியானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே 2014-ல் பெரிய இடைவெளிவிட்டு டி20 உலகக்கோப்பை அணிக்குள் எடுத்துவரப்பட்ட யுவராஜ் சிங் சிறப்பாக செயல்படாமல் கோப்பை பறிபோன நிலையில், மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நிகழவேண்டாம் என பல்வேறு ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர். ஆனால் ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்டிற்கான உலககோப்பை வாய்ப்பை ஆதரித்துள்ளார்.

இஷான் கிஷான் நிலை என்ன?

இரட்டை சதம் விளாசியவரான இஷான் கிஷன், இந்திய அணியின் முதல்தேர்வாக இருந்துவந்தார். ஆனால், நடுவில் அணி நிர்வாகத்திடம் ஏற்பட்ட உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்காத பிரச்னை காரணமாக இந்திய அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்தே இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார்.

ishan kishan

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிரடியான பேட்டிங்கில் மிரட்டிவரும் இஷான் கிஷன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான விருப்பமான தேர்வாக இருந்துவருகிறார். ஆனால் ஒப்பந்தத்தை பெறாத இஷான் கிஷனை இந்திய அணி தேர்வுசெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜிதேஷ் சர்மா ஏமாற்றப்படுவாரா?

இந்திய அணியின் சமீபத்திய டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் சர்மாவே பங்கேற்று விளையாடினார். நல்ல ஹிட்டிங் திறமையை வைத்திருக்கும் ஜிதேஷ் சர்மா, கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்கு பிறகு இந்திய அணியில் தேந்தெடுக்கப்பட்டார்.

jitesh sharma

தற்போது பெரிய அளவிலான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வரும் ஜிதேஷ் சர்மா, மீதமுள்ள ஐபிஎல் தொடரில் எப்படி விளையாட போகிறார், அவருக்கான வாய்ப்பு வழங்கப்படாமல் ஏமாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேஎல் ராகுல் சரியான தேர்வாக இருப்பாரா?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் கேஎல் ராகுல், சிறப்பாக விளையாடினாலும் காயத்தால் அவ்வப்போது போட்டியில் பங்கேற்காமல் வெறும் வீரராக மட்டுமே விளையாடிவருகிறார்.

KL Rahul

ராகுல் நல்ல ஃபார்மில் இருந்தாலும் அவருடைய பெரிய பிரச்னையாக உடற்தகுதி இருந்துவருகிறது. ஒருவேளை அவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால், பாதி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை வருவதற்கு வாய்ப்புண்டு. இதனால் கேஎல் ராகுலின் தேர்வு எந்தளவு சரியானதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திடீரென கிளம்பியிருக்கும் தினேஷ் கார்த்திக்!

இந்தப்பட்டியலில் யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் தினேஷ் கார்த்திக்கின் பெயரை, தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் பேசவைத்துள்ளார் DK. மும்பை அணிக்கு எதிராக அதிரடியான 23 பந்தில் அரைசதத்தை பதிவுசெய்த தினேஷ் கார்த்திக், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 83 ரன்களை விளாசி 230 ஸ்டிரைக்ரேட்டில் பேட்டிங்கில் மிளிர்ந்துவருகிறார்.

anuj rawat - dinesh karthik

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான பேட்டிங்கை பார்த்த ரோகித் சர்மா, உலகக்கோப்பைக்கு எடுத்தடலாம் DK என வேடிக்கையாக கூறினார். அதனை உறுதிசெய்யும் வகையில் மிரட்டிவரும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் மிரட்டிவருகிறார். முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பைக்கு எடுத்துசெல்லவேண்டும் என கூறியுள்ளார்.

Dinesh Karthik

இந்த 6 வீரர்களில் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் என்ற 4 வீரர்கள் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளனர். எப்படியும் பேக்கப்பையும் சேர்ந்து இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள் என்பதால் இந்த போட்டி சுவாரசியமாக மாறியுள்ளது.