"அது என்ன Undertaker செலிப்ரேஷன்?.. எதற்காக கண்களை அப்படி செய்கிறேன்" - பதிரானா கொடுத்த விளக்கம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பதிரானா, ஹர்திக் பாண்டியாவின் படையை தனியாளாக சம்பவம் செய்தார்.
matheesha pathirana
matheesha pathiranaweb

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்து வரும் மதீஷா பதிரானா, தனது ஸ்லிங் ஆக்‌ஷன் மற்றும் அபாரமான யார்க்கர்களால் சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார்.

ஒருகாலத்தில் தன்னுடைய ஸ்லிங் ஆக்சனால் மிரட்டிய மும்பை அணியின் லசித் மலிங்கா, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் கூட சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 2 ரன்களே தேவையென்ற என்ற இடத்தில், தன்னுடைய தனித்துவமான பவுலிங் ஆக்சனால் விக்கெட்டை எடுத்துவந்த மலிங்கா 1 ரன்னில் சிஎஸ்கே அணியிடமிருந்த கோப்பையை தட்டிப்பறித்தார். அவரால் மட்டும் தான் சிஎஸ்கே அணிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணியாக மாறி வரலாறு படைத்தது.

pathirana
pathirana

இந்நிலையில் மலிங்கா ஆக்சனை போலவே பந்துவீசும் குட்டி மலிங்கா என கூறப்படும் மதீஷா பதிரானாவை, மும்பை அணிக்கு முன்னதாக கண்டுபிடித்த சிஎஸ்கே அணி அவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது சென்னை அணியின் சூப்பர் ஸ்டார் பவுலராக மாறிவரும் பதிரானா, மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தனது ஸ்லிங் ஆக்‌ஷன் மற்றும் அபாரமான யார்க்கர்களால் மும்பை அணி வீரர்களை நிலைகுலைய வைத்தார். ஒருகாலத்தில் மலிங்காவை வைத்து பயமுறுத்திய மும்பை அணிக்கே, குட்டி மலிங்காவை வைத்து பதிலடி கொடுத்துள்ளது சிஎஸ்கே அணி.

கண்களை உருட்டி Undertaker-ஆக மாறும் பதிரானா!

களத்தில் விக்கெட் வேட்டையாடும் பதிரானா, அவருடைய தனித்துவமான செலப்ரேசனாலும் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறார். விக்கெட்டை வீழ்த்திய பிறகு “மார்பின் அருகே கைகளை மடக்கி, வானத்தை நோக்கி கண்களை உருட்டிப் பார்ப்பதன் மூலம்” வெற்றியை கொண்டாடும் பதிரானா WWE சூப்பர்ஸ்டார் Undertaker-ஐ பிரதிபலிக்கிறார்.

pathirana
pathirana

ஒருசில ரசிகர்கள் அது கால்பந்து ஜாம்பவான் வீரர் ரொனால்டொவின் செலப்ரேசன் என கூறினாலும், பல ரசிகர்கள் பதிரானாவின் வெள்ளை நிற கண்களை பார்த்து “இது அப்படியே Undertaker செலப்ரேசனை போலவே இருக்கிறது” என்று கூறிவருகின்றனர்.

ronaldo
ronaldo

இதற்கிடையில் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஷிவம் துபே உடனான உரையாடலில் பேசியிருக்கும் பதிரானா, ரொனால்டோவா அல்லது அண்டர்டேக்கரா என்று யார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அது என்ன Undertaker செலப்ரேசனா?

ஒரு கலகலப்பான உரையாடலில் ”அது என்ன செலிப்ரேஷன் அண்டர் டேக்கரா?” என துபே கேள்வி கேட்க, பதிலளித்த பதிரானா “இல்லை, அது அண்டர்டேக்கர் அல்ல. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெரிய ரசிகன். அதனால் அவரைப் பின்தொடர்ந்து அவரைப்போலவே செலிப்ரேஷன் செய்ய முயற்சிக்கிறேன். அப்போது நான் கண்களை மூட முயற்சிக்கும் போது, துரதிர்ஷ்டவசமாக என்னால் ரொனால்டோவை போல சரியாக செய்ய முடியாமல் போய்விடுகிறது" என்று கூறியுள்ளார்.

Undertaker
Undertaker

அதற்கு பதிலளித்த துபே, “அதனால் தான் நீங்கள் ரொனால்டோவிற்கு பதில் அண்டர் டேக்கராக மாறிவிடுகிறீர்கள்?” என்று கிண்டல் செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பும்ராவை போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பதிரானாவாக ஜொலித்துவருகிறார். பும்ரா இருக்கும் ஒரு போட்டியில், அவரை மறைத்து பேர் எடுப்பதெல்லாம் சாதாரண விசயமல்ல. அதுவும் 4 ஓவர்களுக்கு வெறும் 27 ரன்களையே பும்ரா கொடுத்திருந்த ஒரு போட்டியில், ஹீரோவாக ஜொலித்து எல்லோருடைய இதயங்களையும் வென்றுள்ளார் பதிரானா. நடப்பு ஐபிஎல் தொடரில் எல்லோரும் 6 போட்டிகளில் விளையாடி 11 மற்றும் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ள நிலையில், வெறும் 3 போட்டிகள் மட்டுமே விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பதிரானா அசத்திவருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com