“பவுலர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை; 250 ரன்கள்தான் அடிக்கவேண்டும்” - RCB கேப்டன் Faf விரக்தி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 196 ரன்கள் அடித்தபோதும் தங்களுடைய மோசமான பவுலிங்கால் 27 பந்துகள் மீதமிருந்தபோதும் படுதோல்வியை சந்தித்தது ஆர்சிபி அணி.
du plessis
du plessisX

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் மூன்றிலும் டாமினேட் செய்த மும்பை அணி ஆர்சிபியை சுலபமாக வீழ்த்தியது.

பட்டிதார் மற்றும் டூபிளெசிஸ் இருவரும் அரைசதமடித்து களத்தில் இருந்தபோது எப்படியும் ஆர்சிபி அணி 230 ரன்கள் நோக்கி செல்லும் என எதிர்ப்பார்த்த போது, சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவருக்கு இரண்டு-இரண்டு விக்கெட்டுகளாக வீழ்த்தி ஆர்சிபி அணியை 200 ரன்களுக்கு மேல் செல்லாமல் இழுத்துப்பிடித்தார். கடைசிநேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்கால் 196 ரன்கள் என்ற டீசண்டான டோட்டலை எட்டியது ஆர்சிபி அணி.

RCB vs MI
RCB vs MI

மோசமான ஸ்கோர் இல்லை என்பதால் ஆர்சிபி அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டஃப் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்சிபி அணியின் பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுத்துவர முடியவில்லை. சொல்லப்போனால் அவர்களிடம் போட்டியை திருப்பக்கூடிய ஒரு பவுலர் கூட இல்லாமல் போய்விட்டனர். ஆர்சிபியின் மோசமான பந்துவீச்சை துவைத்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் அனைவரும் 200 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி சிதறடித்தனர்.

siraj
siraj

ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து போன ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ் களத்தில் கலங்கிய கண்களுடன் காணப்பட்டார். 27 பந்துகளை கிட்டத்தட்ட 5 ஓவர்களை வெளியில் வைத்து வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்சிபி அணிக்கு ஒரு நிம்மதியில்லாத இரவை பரிசாக தந்தது. போட்டிக்கு பிறகு விரக்தியுடன் பேசிய ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ், தங்களுடைய அணியில் சொல்லிக்கொள்ளும் அளவு தரமான பவுலிங் இல்லை என்பதை வேதனையுடன் தெரிவித்தார்.

du plessis
’சூர்யகுமார் யாதவை எதிர்கொள்ளாமல் ஓய்வுபெற்றது என் அதிர்ஷ்டம்..’ - முன்னாள் இந்திய வீரர் புகழாரம்!

பவுலர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை..

விளையாடிய 6 போட்டிகளில் 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருப்பதால் பந்துவீச்சு குறித்து விரக்தியுடன் பேசிய டூபிளெசிஸ், “இந்த தோல்வி விழுங்குவதற்கு கடினமாக இருக்கிறது. எங்களிடம் பந்துவீச்சில் பெரிய தாக்கம் தரும் பவுலர்கள் இல்லை. மும்பை அணிக்கு எதிராக நீங்கள் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், ஆனால் ஒவ்வொருமுறையும் விக்கெட் இல்லாமல் போகும்போது நாங்கள் பேக்ஃபுட்டில் இருப்பதாகவே உணர்கிறோம். எங்களிடம் உள்ள பந்துவீச்சை வைத்துக்கொண்டு நாங்கள் நிச்சயம் 200க்கும் மேலான ரன்களை எடுக்கவேண்டும், அதற்கு முதல் 6 ஓவர்களில் முடிந்தவரை அதிகமான ரன்களை பெறவேண்டும் என்று நினைக்கிறேன்” என்று விரக்தியுடன் பேசினார்.

du plessis
du plessis

மேலும் பும்ரா போன்ற பவுலர் இருந்தால் போதுமென பேசிய பிளெசிஸ், “பும்ரா போன்ற ஒரு பவுலர் எங்கள் பக்கம் இருந்தால் எல்லாம் சரியாக அமையும் என நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். இந்த போட்டியில் பனி பெரிய பங்காற்றும் என நினைத்தோம், ஆனால் எங்களுக்கு 250 ரன்கள் இருந்தால் தான் வெற்றிபெற முடியும் என்பது போல மும்பை அணி பேட்டிங் செய்தனர்” என்று டூபிளெசிஸ் பேசினார்.

du plessis
”என் கால்களை உடைத்துவிடுவார்.. 2 வருடமாக நெட்டில் பும்ராவை எதிர்கொள்வதே இல்லை!” - சூர்யகுமார் யாதவ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com