”என் கால்களை உடைத்துவிடுவார்.. 2 வருடமாக நெட்டில் பும்ராவை எதிர்கொள்வதே இல்லை!” - சூர்யகுமார் யாதவ்

ஆர்சிபி அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதமடித்த சூர்யகுமார் யாதவ், நெட்ஸில் பும்ராவை எதிர்கொள்ளவே மாட்டேன் என்று மும்பை நிர்வாகத்திடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் - பும்ரா
சூர்யகுமார் யாதவ் - பும்ராweb

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா, RCB பேட்டர்களால் யூகிக்க முடியாதளவு கால்-உடைக்கும் யார்க்கர்களையும், பவுன்சர்களையும், கடின நீளத்திலான பந்துவீச்சை மெதுவாகவும் வீசி திணறடித்தார். விராட் கோலியை 3 ரன்னில் வெளியேற்றிய பும்ரா, அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியை 200 ரன்களுக்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொண்டார்.

Suryakumar Yadav
Suryakumar Yadav

இந்நிலையில், இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் ஐபிஎல்லுக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ், ஆர்சிபி அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதமடித்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். போட்டிக்கு பிறகு பும்ரா குறித்து பேசிய அவர், ”கடந்த 2 வருடங்களாக பும்ராவை நான் வலைப்பயிற்சியில் சந்திப்பதையே தவிர்த்து விட்டேன் மும்பை நிர்வாகத்திடமும் கூறிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் - பும்ரா
“டி20 WC-ல் கோலியை இந்தியா தேர்வுசெய்யாது என நம்புகிறேன்” - மேக்ஸ்வெல் கூறும் அதிர்ச்சி காரணம்!

என் பேட் அல்லது காலை உடைத்துவிடுவார் என்பதால் எதிர்கொள்வதேயில்லை..

டி20 ஃபார்மேட்டின் சிறந்த பந்து வீச்சாளரான பும்ரா பேட்டர்களின் மனதில் ஏற்படுத்தும் பயத்தைப் பற்றி அவரது சக வீரர் சூர்யகுமார் யாதவ் பேசினார்.

ஐபிஎல்லில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா குறித்து பேசிய அவர், “நெட்ஸில் நான் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ள மாட்டேன் என்று MI நிர்வாகத்திடம் கூறியுள்ளேன். கடந்த 2-3 ஆண்டுகளாக நான் அதைச்செய்து வருகிறேன், ஏனென்றால் அவர் என் பேட்டை உடைத்துவிடுவார் அல்லது என் காலை உடைத்துவிடுவார். அவர் உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர், அதிரடியாக நீங்கள் அவருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. பந்தைக் கொண்டு அவரால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டினார். ஆர்சிபியை 200 ரன்களுக்கு மேல் செல்ல அவர் அனுமதிக்கவில்லை, நான் இதுவரை கண்டிராத சிறந்த பந்துவீச்சுகளில் ஒன்றை வீசினார்” என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Bumrah
BumrahMumbai Indians

மும்பைக்கு எதிரான தோல்விகுறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ், இரண்டு அணிக்கும் இடையேயான வித்தியாசமாக ஜஸ்பிரித் பும்ரா தான் இருந்தார் என்று கூறினார்.

சூர்யகுமார் யாதவ் - பும்ரா
'Umpires Indians' ஆன MI? சர்ச்சை முடிவுகளால் ரசிகர்கள் அதிருப்தி! முதல் அணியாக வெளியேறுகிறதா RCB?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com